Join Our Whats app Group Click Below Image

TNPSC தேர்வர்களுக்கு - தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 TNPSC தேர்வர்களுக்கு - தேர்வாணையம் முக்கிய அறிவிப்பு..!!

TNPSC தேர்வர்கள் ஒருமுறை நிரந்தரப்பதிவு கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பதற்கான அவகாசம் ஏப்ரல் 30 வரை நீடிக்கப்பட்டுள்ளது.

ஒருமுறை நிரந்தரப்பதிவு (One Time Registration) கணக்கு வைத்திருக்கும்‌ அனைத்து விண்ணப்பதாரர்கள், அவர்களது ஆதார்‌ எண்ணை தவறாமல்‌ இணைக்க வேண்டும்‌ என்றும்‌, அதனடிப்படையில்‌, எதிர்காலத்தில்‌ தேர்வாணையத்தால்‌ வெளியிடப்படும்‌ அறிவிக்கைகளுக்கு, தகுதியுள்ள விண்ணப்பதாரர்கள்‌ தங்களது இணையவழி விண்ணப்பங்களை சமர்ப்பிக்குமாறும்‌, தமிழ்நாடு அரசுப்பணியாளர்‌ தேர்வாணையம் சமிபத்தில் அறிவித்தது. 

இதனைத்தொடர்ந்து, தற்போதுவரை ஒருமுறை நிரந்தரப்‌ பதிவுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைக்காத மற்றும்‌ ஒருங்கிணைந்த Group-4 தேர்விற்கு விண்ணப்பிக்க விரும்பும்‌ பெருவாரியான தேர்வர்களிடமிருந்து பெறப்பட்ட கோரிக்கைகளின்‌ அடிப்படையில்‌, தேர்வர்களின்‌ நலன்கருதி, ஒருமுறை நிரந்தரப்பதிவுடன்‌ ஆதார்‌ எண்ணை இணைப்பதற்கான காலக்கெடு 30.04.2022 வரை தேர்வாணையத்தால்‌ நீட்டிக்கப்பட்டது.

 மேலும்‌, ஒருமுறை நிரந்தரப்பதிவுடன்‌ ஆதார்‌ எண்ணை ஒருமுறை இணைத்தால்‌ போதுமானது என்பதால்‌, ஏற்கனவே தங்களது ஆதார்‌ எண்ணை இணைத்த விண்ணப்பதாரர்கள்‌ மீண்டும்‌ இணைக்கத்‌ தேவையில்லை.

GROUP - 4 Exam:

  • தேர்வுக்கு ஏப்ரல் 28-ம் தேதி வரை விண்ணப்பம் செய்யலாம். 
  • ஜூலை 24-ம் தேதி தேர்வு நடைபெறும். தேர்வு அன்று காலை தேர்வு 9.30 மணி முதல் மதியம் 12.30 மணி வரை 3 மணி நேரத்திற்குத் தேர்வு நடைபெறும். 
  • மொத்தம் 7,301 பணியிடங்களுக்கு போட்டித்தேர்வு நடைபெறவுள்ளது. 
  • இதைத்தொடர்ந்து 81 பணியிடங்கள் விளையாட்டுப் பிரிவு மூலம் பூர்த்தி செய்யப்படும். 
  • 200 கேள்விகள் 300 மதிப்பெண்களுக்கு கேட்கப்படும். 
  • அக்டோபர் மாதம் முடிவுகள் வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது. 
  • நவம்பர் மாதம் சான்றிதழ் சரிபார்ப்பு மற்றும் கலந்தாய்வு நடைபெறும் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments