Join Our Whats app Group Click Below Image

TN TET - பாடத்திட்டங்கள் & முழு விபரம் இதோ..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 TN TET - பாடத்திட்டங்கள் & முழு விபரம் இதோ..!!

ஆசிரியர் தகுதித் தேர்வுக்கான பாடத் திட்டங்கள் குறித்த முழு விளக்கங்கள் கொடுக்கப்பட்டுள்ளது.

தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகள் மற்றும் கல்லூரிகளில் உள்ள காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கு ஒவ்வொரு ஆண்டும் தகுதி தேர்வு நடத்தி தகுதியான ஆசிரியர்கள் தேர்ந்தெடுக்கப்பட்டு வருகிறார்கள். இந்த தகுதித் தேர்வினை டிப்ளமோ ஆசிரியர் பயிற்சி மற்றும் பிஎட் (B.Ed)  ஆசிரியர் பயிற்சி பெற்றவர்கள் எழுதிக் கொள்ளலாம். 

இந்த தேர்வு குறித்த அனைத்து விளக்கத்தையும் தற்போது தேர்வு வாரியம் அறிவித்துள்ளது. அதாவது ஆசிரியர் தகுதித்தேர்வு மொத்தமாக இரண்டு தாள்களைக் கொண்டு உள்ளது. அதில் முதல் தாளை டிப்ளமோ ஆசிரியர்கள் எழுதிக்கொள்ளலாம்.

இரண்டாவது தாளை பிஎட் ஆசிரியர் பயிற்சி பயின்றவர்கள் எழுதலாம். பி.எட் படித்தவர்கள் முதல் தாளை கூட எழுதிக்கொள்ளலாம். இந்த தகுதி தேர்வுக்கு விண்ணப்பிக்கும் விண்ணப்பதாரர்கள் ஏதேனும் ஒரு இளநிலைப் பட்டப் படிப்புடன்D.T.Ed அல்லது B.Ed படித்திருக்க வேண்டும். 

மேலும் 18 வயது பூர்த்தி செய்தவர்கள் அனைவருமே இந்த தேர்வினை எழுதி கொள்ளலாம். தற்போது ஒவ்வொரு தாளுக்கும் எந்த பகுதிகளில் இருந்து கேள்விகள் கேட்பார்கள் என்பதை காண்போம் முதல் தாளில் 150 கேள்விகள் இடம்பெற்றிருக்கும்.

ஒவ்வொரு கேள்விக்கும் ஒரு மதிப்பெண் வீதம் 150 மதிப்பெண்களில் தேர்வுகள் நடைபெறும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் பகுதிகளில் இருந்து 30 கேள்விகளும், மொழிப்பாடம் பகுதிகளில் இருந்து 30 கேள்விகளும், ஆங்கிலம், கணிதம், சுற்றுச்சூழல் கல்வி ஆகிய ஒவ்வொன்றிலிருந்தும் 30 கேள்விகளும் கேட்கப்படும்.

முதல் தாளிற்கான பாடத்திட்டம்:

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 6 - 11 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.

மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

ஆங்கிலம்: மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

கணிதம் மற்றும் சுற்றுச்சூழல் ஆய்வுகள்: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

இரண்டாம் தாள்: 

முதல் தாளை போல இதிலும் 150 கேள்விகள் இடம் பெற்றிருக்கும். ஒவ்வொரு கேள்விக்கும் 1 மதிப்பெண் வீதம் 150 மதிப்பெண்ணுக்கு தேர்வு நடைபெறும். குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல் பகுதியில் இருந்து 30 கேள்விகளும், மொழிப்பாடம் பகுதியில் இருந்து 30 கேள்விகளும், ஆங்கிலம் பகுதியில் இருந்து 30 கேள்விகளும், சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு பகுதியில் இருந்து 60 கேள்விகளும் கேட்கப்படும். தற்போது இரண்டாவது தாளிற்கான பாட திட்டங்களை பார்க்கலாம்.

குழந்தை வளர்ச்சி மற்றும் கற்பித்தல்: 11 - 14 வயதுக்குட்பட்டவர்களுக்கான கல்வி உளவியல் கற்பித்தல் மற்றும் கற்றல்.

மொழிப்பாடம்: சம்பந்தப்பட்ட மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

ஆங்கிலம்: மொழியின் கூறுகள், தொடர்பு மற்றும் புரிந்துகொள்ளும் திறன்கள்.

சம்பந்தப்பட்ட பாடப்பிரிவு: கருத்துகள், சிக்கல் தீர்க்கும் திறன்கள் மற்றும் இந்த பாடங்களில் கற்பித்தல் புரிதல்.

விண்ணப்பிக்கவேண்டிய இணையதள முகவரி: https://trbtet2022.onlineregistrationform.org/TNTRB/

கட்டணம்:

 பொது பிரிவினராக இருந்தால் ரூ.500ம் 

SC,ST,SCA,STமற்றும் மாற்று திறனாளியாக இருந்தால் ரூ.250 செலுத்த வேண்டும்

விண்ணப்பிக்க கடைசி தேதி : ஏப்ரல் 13 

மேலும் விவரங்களுக்கு இணையதள முகவரி: https://www.trb.tn.nic.in/TET_2022/07032022/Notification.pdf


Post a Comment

0 Comments