Join Our Whats app Group Click Below Image

இந்தியா-ரஷ்யா(நட்புடா)..!! இந்தியா கேட்டால் எந்த உதவியும் செய்வோம் - ரஷ்யா..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 இந்தியா-ரஷ்யா (நட்புடா)..!!

இந்தியா கேட்டால் எந்த உதவியும் செய்வோம் - ரஷ்யா..!!

இந்தியா கேட்டால் ரஷியா எந்த உதவியும் செய்யும். ரூபாயை பயன்படுத்தி ரஷியாவுடன் வர்த்தகம் வைக்க கேட்டாலும், பரஸ்பர பேச்சுவார்த்தை நடத்தி நல்ல முடிவு எடுப்போம் என ரஷ்ய வெளியுறவுத்துறை மந்திரி தெரிவித்தார்.

2 நாட்கள் அரசுமுறை பயணமாக ரஷிய வெளியுறவுத்துறை அமைச்சர் செர்கே லாரவ் (Sergey Lavrov) இந்தியா வந்துள்ளார். இன்று அவர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கருடன் பேச்சுவார்த்தை நடத்தினார். 

"இந்தியா ரஷியாவிடம் இருந்து வாங்க விரும்பும் எந்த பொருளையும் நாங்கள் வழங்குவோம். அதற்கு தயாராகவும் இருக்கிறோம். இந்தியா - ரஷியா நல்ல நண்பர்கள். நாம் அனைத்து துறையிலும் இணைந்து பணியாற்றுகிறோம். ஒவ்வொரு விஷயங்களையும் மேம்படுத்துகிறோம்.

இந்தியாவின் வெளியுறவுக்கொள்கை சுதந்திரம், உண்மையான தேசிய நலனில் கவனம் செலுத்துதல் என சிறப்பாக செயல்படுகிறது. நமது (இந்தியா & ரஷ்யா) கூட்டமைப்பும், அடிப்படை கொள்கைகளும் நம்மை பெரிய நாடாகவும், சிறந்த விசுவாசமான நண்பர்களாகவும் இருக்க வைத்துள்ளது. இந்தியா ரூபாய் மதிப்பை வைத்து ரஷியாவிடம் இருந்து எண்ணெய் உட்பட எந்த பொருள் வாங்க முன்வந்தாலும், அதுகுறித்து பரஸ்பரம் விவாதித்து சாதகமான முடிவுகள் எடுக்கப்படும்.

உக்ரைன் போர் என்பது சிறப்பு இராணுவ நடவடிக்கை. எங்களது இராணுவ உட்கட்டமைப்பு எதிரிகளால் குறிவைக்கப்படுகிறது. ரஷியாவிற்கான அச்சுறுத்தலை அகற்ற கீவ் ஆட்சியை கைப்பற்றுவதுதான் வழி. அமெரிக்கா பிற நாடுகளையும் தங்களின் நாட்டு நிலையை பின்பற்றுமாறு வற்புறுத்தும். ஆனால், எந்த ஒரு அழுத்தமும் எங்களின் கூட்டாண்மையை பாதிக்காது" என்று தெரிவித்தார்.

உலகை சமநிலையில் வைக்க இந்தியாவும், ரஷ்யாவும் இணைந்து செயலாற்றி வருகிறது. எங்களின் தரப்பில் உள்ள சூழலையும், இருதரப்பு சூழலையும் தெளிவுபடுத்தியுள்ளோம். பிரதமர் நரேந்திர மோடிக்கு அதிபர் விளாடிமிர் புதின் வாழ்த்துக்கள் தெரிவிக்க சொல்லி அனுப்பி இருக்கிறார். நாங்கள் எதற்காகவும் சண்டையிடவில்லை. உக்ரைன் விவகாரத்தை இந்தியா ஒருதலைப்பட்சமாக கருதாமல், அங்குள்ள பிரச்சனையை புரிந்துகொண்ட நடுவுநிலை வகித்ததற்கு பாராட்டுக்கள்.


Post a Comment

0 Comments