Join Our Whats app Group Click Below Image

BE படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்வு - AICTE..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 BE படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்வு - AICTE..!! 

பொறியியல் மற்றும் தொழிநுட்ப கல்லூரிகளில் படிக்கும் மாணவர்களின் கல்விக் கட்டண விதிகளை (Tuition Fee) மாற்றியமைக்க அனைத்திந்திய தொழில்நுட்பக் கல்விக் குழு முடிவெடுத்துள்ளது.

இதுதொடர்பாக, உச்சநீதிமன்றத்தின் முன்னாள் நீதிபதி பி என் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் தேசிய கட்டணக் குழுவை AICTE அமைத்தது. இதன் பரிந்துரைகளை, AICTE-ன்  உச்சநிலை அமைப்பான நிர்வாகக் குழு கடந்த மாதம் ஏற்றுக் கொண்டது. மேலும், குழுவின் பரிந்துரைகளை மத்தியக் கல்வி அமைச்சகத்துக்கு அனுப்பி வைத்துள்ளது.

 BE படிப்புகளுக்கான கல்வி கட்டணம் உயர்வு - AICTE..!! :  

முன்னதாக, AICTE கடந்த 2015ம் ஆண்டு உயர்கல்வி நிறுவனங்களில் கற்பித்தலுக்கான மற்றும் பிற கட்டணங்களை வசூலிப்பதற்கான அளவீடுகளை நிர்ணயிப்பதற்கும், தொழிநுட்ப கல்வி வணிக மயமாக்கப்படுவதை தவிர்ப்பதற்கு தேவையான அனைத்து நடவடிக்கைகளை பரிந்துரைக்கவும்  முன்னாள் நீதிபதி பி என் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் நிபுணர் குழு ஒன்றை அமைத்தது. 

இந்த குழு, தனது பரிந்துரை அறிக்கையில்  சில கல்விக் கட்டணங்கள் தொடர்பான சில வழிகாட்டு நெறிமுறைகளை வகுத்தது.  உள்கட்டமைப்பு மேம்பாடு, ஆசிரியர்களின் ஊதியம் போன்ற ஆண்டுதோறும் செய்ய வேண்டிய செலவினங்கள் அடிப்படையில் தான் அடிப்படை கல்விக் கட்டணம் இருக்க வேண்டும்.

 நிர்வாகத்தின் சொத்து குறைபாடு இழப்பு போன்ற பிற அபாயங்களை கணக்கில் கொள்ளக் கூடாது.  இதனடிப்படையில், பொறியியல் இளநிலை படிப்புகளில் அதிகபட்ச கல்விக் கட்டணமாக ஆண்டு ஒன்றுக்கு ரூ. 1.44 லட்சம் முதல் ரூ. 1.58 வரை இருக்க வேண்டும் என்று நிர்ணயம் செய்தது. 

ஆனால் , தமிழ்நாடு, தெலுங்கானா உள்ளிட்ட மாநிலங்கள் தனியார் கல்லூரிகள் கட்டணம் வசூலிப்பதை முறைப்படுத்தத் தொடங்கினர். பெற்றோர்  மற்றும் மாணவர்களின் கோரிக்கைகளை கருத்தில் கொண்டு , குறைந்தபட்ச கல்விக் கட்டணத்தை நிர்ணயிக்குமாறு கல்லூரி  நிர்வாகத்தை அழுத்தம் கொடுத்து வந்தன. ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகள் எதிர்மறையான அபயாங்களை உருவாக்குவதாகவும்,  தங்களது அன்றாட  நிர்வாக செயல்பாடுகள் பாதிக்கப்படுவதாகவும் கல்லூரி நிர்வாகம் தெரிவித்து வந்தது. 

இந்நிலையில், 7 ஆண்டுகளுக்குப் பிறகு மீண்டும் முன்னாள் நீதிபதி பி என் ஸ்ரீகிருஷ்ணா தலைமையில் குறைந்தபட்ச கல்விக் கட்டணம் மற்றும் மேம்பாட்டு நிதித் திட்டங்களுக்கான தேசிய கட்டணக் குழுவை AICTE அமைத்தது.  அந்த குழு முன்னதாக தனது அறிக்கையை சமர்பித்தது. அதில், பொறியியல் படிப்புகளுக்கான குறைந்தபட்ச கல்வி கட்டணம் ரூ. 79,000 ஆகவும், அதிகபட்ச கட்டணம் ரூ. 1.89 லட்சம் ஆக இருக்க வேண்டும் என்று தெரிவித்துள்ளது. 

இந்த பரிந்துரைகளை அகில இந்திய தொழில்நுட்பக் கல்விக் கவுன்சில்(AICTE)  தற்போது  ஏற்றுக் கொண்டுள்ளது. இவற்றை அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேச அரசுகள் பின்பற்ற கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளன.   

Post a Comment

0 Comments