Join Our Whats app Group Click Below Image

Scheme: சுகன்யா சம்ரித்தி யோஜனா(SSY) திட்டம்- வட்டி விகிதம் -முழு விவரம்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 Saving Scheme: சுகன்யா சம்ரித்தி யோஜனா(SSY) திட்டம்-  


வட்டி விகிதம் -முழு விவரம்..!!

 சுகன்யா சம்ரித்தி யோஜனா(SSY) திட்டத்தின் மூலம் பல கோடி மக்கள் பலன் அடைந்து வரும் நிலையில் கடந்த 7 வருடத்தில் மத்திய அரசு இத்திட்டத்தின் மீதான முதலீட்டுக்கான வட்டி வருமானத்தைக் குறைத்து வருகிறது.

சுகன்யா சம்ரித்தி யோஜனா

மத்திய அரசு "பேட்டி பச்சாவோ, பேட்டி பதாவோ யோஜனா" கொள்கையின் ஒரு பகுதியாக, பெண்களுக்கான கல்வி அளிக்கப்படுவதை உறுதி செய்யும் வகையில் பெண் குழந்தைகளின் பெற்றோர்களுக்கு வரிச் சலுகை உடன் கொண்ட சுகன்யா சம்ரித்தி யோஜனா (SSY) திட்டத்தை மத்திய அரசு 2015ஆம் ஆண்டுத் துவங்கியது.

பெண் குழந்தைகள்

பெற்றோர்கள் தங்கள் மகள்களுக்காக இதுபோன்ற இரண்டு கணக்குகளைத் திறக்கலாம். ஆர்வமுள்ள நபர்கள் கணக்கு தொடங்கும் ஆவணங்களைச் சமர்ப்பித்துக் குறிப்பிட்ட வங்கி அல்லது தபால் அலுவலகத்தில் கணக்கைத் தொடங்கலாம். இந்தக் கணக்குகள் 21 ஆண்டுகள் அல்லது பெண் குழந்தைக்கு 18 வயது நிறைவடைந்து திருமணம் செய்யும் வரை செல்லுபடியாகும்.

வட்டி விகிதம்

இத்திட்டத்தில் 250 ரூபாய் முதல் அதிகப்படியாக வருடத்திற்கு 150000 ரூபாய் முதலீடு செய்யலாம். மார்ச் 31, 2022 இல் முடிவடையும் காலாண்டிற்குச் சுகன்யா சம்ரித்தி யோஜனா வட்டி விகிதம் இப்போது 7.6% ஆக உள்ளது. இந்தத் திட்டத்திற்குக் காலாண்டு வாரியாக மத்திய அரசு வட்டியை அறிவிக்கும்.

மத்திய அரசு

இத்திட்டத்தை அறிமுகம் செய்யும்போது அதிகப்படியான வட்டி (9.1 சதவீதம்) வருமானத்தை அளித்த மத்திய  அரசு , அதன் பின் 9.2 சதவீதமாக உயர்த்தியது. ஆனால் தற்போது வட்டி விகிதம் குறைந்து கொண்டே வருகிறது.

SSY வட்டி விகிதம்: 

03.12.2014 முதல் 31.03.2015 வரை - 9.10 சதவீதம்

01.04.2015 முதல் 31.03.2016 வரை - 9.20 சதவீதம்

01.04.2016 முதல் 30.09.2016 வரை - 8.60 சதவீதம்

01.10.2016 முதல் 31.03.2017 வரை - 8.50 சதவீதம்

01.04.2017 முதல் 30.06.2017 வரை - 8.40 சதவீதம்

01.07.2017 முதல் 31.12.2017 வரை - 8.30 சதவீதம்

01.01.2018 முதல் 30.09.2018 வரை - 8.10 சதவீதம்

01.10.2018 முதல் 30.06.2019 வரை - 8.50 சதவீதம்

01.07.2019 முதல் 31.03.2020 வரை - 8.40 சதவீதம்

01.04.2020 முதல் 31.03.2022 வரை - 7.60 சதவீதம்

வட்டி விகிதம் குறைந்தாலும் சந்தையில் கிடைக்கும் பிற சிறு முதலீடு திட்டத்தைக் காட்டிலும் சற்று அதிகமான வட்டி வருமானம் சுகன்யா சம்ரித்தி யோஜனா(SSY) திட்டத்திற்குக் கிடைக்கிறது.

Post a Comment

0 Comments