Join Our Whats app Group Click Below Image

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..??

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா..??

தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படுமா என்பது குறித்து முக்கிய தகவல் வெளியாகியுள்ளது.

நாடு முழுவதும் பெரும்பாலான மாநிலங்களில் கடந்த இரண்டு வருடங்களாக கொரோனா தீவிரமாக பரவியிருந்தது. இதன் காரணமாக இரவு நேர ஊரடங்கு, வார இறுதி நாட்களில் முழு ஊரடங்கு போன்ற நடவடிக்கைகளை மாநில அரசு மேற்கொண்டது. இதனையடுத்து கடந்த ஜனவரி மாத இறுதியில் தொற்று குறைந்ததை தொடர்ந்து இரவு நேர ஊரடங்கில் தளர்வு அளிக்கப்பட்டிருந்தது. இதன் ஒரு பகுதியாக தமிழகம் உள்ளிட்ட மாநிலங்களில் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு முன்னெச்சரிக்கையுடன் வகுப்புகள் நடத்தப்பட்டது.

இதற்கிடையில் கொரோனா தொற்றின் பிறப்பிடமாகக் கருதப்படும் அண்டை நாடான சீனாவில் கடந்த சில நாட்களாக தொற்றின் வேகம் அதிகரித்து வருகிறது.சுமார் இரண்டு ஆண்டுகளுக்கு பின் அந்நாட்டில் தினசரி பாதிப்பு அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக சாங்சுன், ஷாங்காய் போன்ற நகரங்களில் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் சீனாவில் பரவும் கொரோனா வைரஸ் தொற்று காரணமாக இந்தியாவில் மீண்டும் கொரோனா விஸ்வரூபம் எடுக்க வாய்ப்பு உள்ளதாக கூறப்படுகிறது. மேலும் சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகளை தீவிரமாக கண்காணிக்க வேண்டும் எனவும் கோரிக்கை எழுந்துள்ளது.

இதன் காரணமாக தமிழகத்தில் மீண்டும் முழு ஊரடங்கு போன்ற கட்டுப்பாடுகள் கடுமையாக படுமா? என்ற அச்சம் தமிழக மக்களிடையே எழுந்திருக்கிறது. இதுதொடர்பாக சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர். இந்நிலையில் இதுபற்றி சுகாதாரத்துறை அதிகாரிகளிடம் விசாரித்த போது, "தமிழகத்தில் கொரோனா பரவல் தாக்கம் முற்றிலும் குறைந்துள்ளது. 

தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் கட்டாயம் கடைப்பிடிக்க வேண்டும் எனவும், 

வெளியே செல்லும்போது முகக்கவசம் மற்றும் சமூக இடைவெளிகளை கடைபிடிக்கவேண்டும்.

தற்போதைக்கு முழு ஊரடங்கு என்ற பேச்சுக்கே இடம் இல்லை. ஒருவேளை கொரோனா தொற்று அதிகரிக்கும் பட்சத்தில் முதலமைச்சரால் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும் என கூறியுள்ளார். அண்டை மாநிலங்கள் மற்றும் நாடுகளில் தொற்று பரவல் அதிகரித்து வருவதால் தடுப்பு நடவடிக்கைகளை கட்டாயம் கடைபிடிக்க வேண்டும் என தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் மா சுப்பிரமணியன் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது ஆகும்.

Post a Comment

0 Comments