Join Our Whats app Group Click Below Image

10,11,12-தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க.....

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 10,11,12-தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க.....


தேர்வு எழுதும் மாணவர்களின் தேர்வு பயத்தை போக்க சில அறிவுரைகள்:

  • பயம் என்பது ஒருவகையான முட்டாள்தனம்.
  • இந்த பயத்தினால் ஒருவகையான மன அழுத்தம் வரும். அந்த அழுத்தமே உங்களை தேர்வை சரியாக அணுக முடியாமல் செய்து விடும்.
  • ''தேர்வில் அதிக மதிப்பெண் பெறுவது தான், எல்லா விஷயத்துக்கும் தீர்வு என, நினைத்து விடக் கூடாது. இந்த மனநிலையில் இருந்து, மாணவர்கள் வெளியேற வேண்டும்,'' 
  •  தேர்வும், அதில் அதிக மதிப்பெண் பெறுவதும் தான் முக்கியம்; அது மட்டுமே எல்லா பிரச்னைக்கும் தீர்வு என்ற எண்ணம் உள்ளது. முதலில், அந்த எண்ணத்திலிருந்து மாணவர்கள் மீண்டு வர வேண்டும். 
  • அதிக மதிப்பெண் பெறுவது மட்டுமே, எல்லா பிரச்னைக்கும் தீர்வாகாது. 
  • தேர்வு என்பது, நம் வாழ்க்கையின் ஒரு அங்கம் மட்டும் தான். பொதுத் தேர்வு என்பது, நம் ஒட்டுமொத்த கல்வி பயணத்தின் ஒரு அங்கம். 
  • நல்ல மதிப்பெண் பெற வேண்டும் என்ற எண்ணத்தை மட்டுமே சார்ந்திருக்கக் கூடாது. எல்லா விஷயத்தையும் எளிதாக எடுத்துக் கொள்ள வேண்டும். மாணவர்களின் தனித் திறனை மேம்படுத்தும் எத்தனையோ விஷயங்கள் உள்ளன.
  •  தற்போதைய பெற்றோரிடையே, கவர்ச்சிகரமான சில திறன் மேம்பாட்டு பயிற்சிகளை, தங்கள் குழந்தைகள் பெற வேண்டும் என்ற எண்ணம் மேலோங்கியுள்ளது. இந்த மனநிலையில் இருந்து, பெற்றோர் மாற வேண்டும். தங்கள் விருப்பத்தை, குழந்தைகள் மீது திணிப்பதை விட, நம் குழந்தை எதை விரும்புகிறதோ, அந்த விஷயத்தில், அவர்களை ஊக்கப்படுத்த வேண்டும்.
  • 'படி... படி' என, குழந்தைகளுக்கு அழுத்தம் கொடுப்பதை தவிர்த்து, தேர்வுகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும், நெருக்கடி இல்லாமல் எப்படி தேர்வு எழுத வேண்டும் என்பதை விளக்கும் புத்தகங்களை படிக்கச் சொல்லாம்.  தேர்வு எழுதச் செல்லும்போது, மன அழுத்தத்துடன் செல்ல வேண்டாம். மற்றவர்கள் என்ன செய்கின்றனர் என்பதை நினைத்து கவலைப்பட வேண்டிய அவசியம் இல்லை.
  • நீங்கள், உங்களை நம்ப வேண்டும். எதற்காக தயாராக வந்துள்ளீர்களோ, அதை செய்யுங்கள். 
  • தற்போது தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது; அதை புறக்கணித்து விட முடியாது. அதற்காக, தொழில்நுட்பத்தின் கட்டுப்பாட்டிற்குள் நாம் வந்துவிடக் கூடாது. தொழில்நுட்பம், நம் கட்டுப்பாட்டிற்குள் இருக்க வேண்டும்; அது, நம் நேரத்தை வீணடித்து விடக் கூடாது.
  •  ஒவ்வொரு வீட்டிலும், மொபைல்போன், 'டிவி' போன்ற தொழில்நுட்ப வசதிகள் இல்லாத ஒரு அறை இருக்க வேண்டும். அந்த அறைக்குள் செல்லும்போது, தொழில்நுட்பம் சார்ந்த எந்த கருவியையும், நீங்கள் எடுத்துச் செல்லக் கூடாது. 
  •  நாட்டின் வளர்ச்சிக்கும், ஒருமைப்பாட்டுக்கும், இளைஞர்கள், தங்கள் பங்களிப்பை தர வேண்டும். 
  • நம் நாட்டின் எதிர்காலம், இளைஞர்களின் கைகளில் தான் உள்ளது. இளைஞர்கள், மகிழ்ச்சியான மனநிலையில் இருக்க வேண்டும். 
  • தேர்வு ஒன்றை மட்டுமே நினைத்து, மன அழுத்தத்துக்கும், சோர்வுக்கும் ஆட்படக் கூடாது. 
  • மாணவர்களும், தோல்வியிலிருந்து பாடம் கற்க வேண்டும். தேர்வுகளின் போது, தைரியமாக இருக்க வேண்டும். 
  • மாணவர்கள் பயத்தை விட்டொழித்து , குறிக்கோளை அடைவதற்கு, கடுமையாக முயற்சிக்க வேண்டும். 
*** வீண் தோல்வியை கண்டு அஞ்சாமல்
     விடாமுயற்சியால் தேர்வு பயத்தை ஒழித்து 
    வெற்றி கனியைப் பறிப்போம்***



Post a Comment

0 Comments