Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..
ஏப்ரல் 1 முதல் அமலுக்கு வரும் அதிரடி மாற்றங்கள் இதோ..!!
புதிய மாற்றங்கள்:
மாதாந்திர சேமிப்பு திட்டம், மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம்,டைம் டெபாசிட் திட்டங்களுக்கு வழங்கப்பட்டு வரும் வட்டி நேரடியாக அஞ்சலக சேமிப்பு கணக்குகளுக்கு அனுப்பப்படும். மாதம் தோறும் வட்டி பெறுபவர்கள், காலாண்டுக்கு ஒரு முறை வட்டி பெறுபவர்கள் என அனைவருக்கும் இது பொருந்தும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கிரிப்டோகரன்சி பரிவர்த்தனை மூலம் கிடைக்கும் வருமானத்திற்கு 30% வரி விதிக்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்திருந்தார். இந்த வரி விகிதம் இன்று முதல் அமல்.
ஏப்ரல் 1ஆம் தேதி முதல், PF கணக்கில் ஆண்டுக்கு 2.5 லட்சம் ரூபாய்க்கு மேல் பங்களிப்பு இருந்தால், வட்டித் தொகைக்கு வரி வசூலிக்கப்படும்.
ஆண்டுக்கு ரூ.20 கோடிக்கு மேல் விற்பனை செய்யும் நிறுவனங்கள் B2B பரிவர்த்தனைகளுக்கான மின்னணு விலைப்பட்டியல்களை இன்று முதல் உருவாக்கப்பட வேண்டும் .
மாநில அரசு ஊழியர்களுக்கு 14% வரி விலக்கு சலுகை அளிக்கப்பட்டுள்ளது. இதனை இன்று முதல் மாநில அரசு ஊழியர்கள் பெற்றுக் கொள்ளலாம்.
2018 முதல் முதன்முறையாக வீடு வாங்குபவர்களுக்கு ரூ 2லட்சத்திற்கு 80EEA ன் கீழ் கூடுதல் வரி விலக்கு அளிக்கப்பட்டு வந்தது. இன்று முதல் இந்த வரிவிலக்கு சலுகை கிடையாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
பாராசிட்டாமால் உட்பட சுமார் 800க்கும் மேற்பட்ட அவசிய மற்றும் அவசர கால மருந்துகள் விலை இன்று முதல் 10.70% உயர்த்தப்பட உள்ளன.
நள்ளிரவு 12 மணி முதல் சுங்கச்சாவடிகளில் கட்டண உயர்வு.
0 Comments