Join Our Whats app Group Click Below Image

PG TRB-தேர்வர்களுக்கான அறிவிப்பு- எதற்கு அனுமதி.?? எதற்கு தடை..??

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 PG TRB-தேர்வர்களுக்கான அறிவிப்பு- எதற்கு அனுமதி.?? எதற்கு


 தடை..??

PG TRB-தேர்வர்களுக்கான அறிவிப்பு:

PG TRB-தேர்வு காலை மற்றும் மாலை இரு வேளைகளிலும் நடைபெறவுள்ளது. தேர்வுகள் காலை தேர்வு 09.00 மணி, பிற்பகல் தேர்வு 02.00 மணி என இரு வேளைகளில் நடைபெறவுள்ளதால் காலை வேளையில் தேர்வெழுத வரும் தேர்வர்கள் 07.30 மணிக்குள்ளாகவும், பிற்பகல் தேர்வு எழுத வரும் தேர்வர்கள் 12.30 மணிக்குள்ளாகவும் தேர்வு மையத்தில் ஆஜராகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கெல்லாம் அனுமதி:

தேர்வர்கள் தேர்வுக்கூட நுழைவுச்சீட்டு(HALL TICKET)டன், Hard copy of photo மற்றும் கீழ்க்காணும் அடையாள அட்டைகளுள் ஏதேனும் ஒரு அசல் அடையாள அட்டை இணையும் கொண்டுவர வேண்டும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

  • Aadhar Card
  • Voter ID
  • Driving License 
  • PAN card
  • Passport

இதற்கெல்லாம் தடை:

12.02.2022 முதல் 20.02.2022 வரை (19.02.2022 மட்டும் விடுமுறை ) தேர்வு நடைபெறும் தேர்வுக் கூடத்திற்குள் தேர்வர்கள் 

  • விலையுயர்ந்த ஆபரணங்கள் அணிந்துவரக் கூடாது.
  •  Mobile Phone,
  •  Micro Phone, 
  • Calculator,
  •  log Tables,
  • Pager, 
  • Digital Diary,
  • Books 

போன்ற பொருட்களை பயன்படுத்த அனுமதி கிடையாது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு உத்தரவு:

மேற்படி முதற்கட்டமாக நடைபெறும் 9 தேர்வு மையங்களிலும் 24 மணி நேரமும் ஆயுதம் தாங்கிய பாதுகாவலர் வசதி ஏற்பாடு செய்யவும், தடையில்லா மின்சாரம் வழங்கிடவும், போதுமான போக்குவரத்து வசதி ஏற்பாடு செய்து தரவும் சம்மந்தப்பட்ட துறைகளுக்கு அறிவுறுத்தப்படுள்ளது.

மேலும், தேர்வு மையங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள முன்னேற்பாடு பணிகள் மற்றும் எவ்வித முறைகேடு ஏற்படா வண்ணம் மேற்படி தேர்வுகளை கண்காணிக்கும் பொருட்டு, வருவாய்த்துறை அதிகாரிகள் நேரடியாக பார்வையிட அனைத்து முன்னேற்பாடுகளும் செய்யப்பட்டுள்ளன என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Post a Comment

0 Comments