CEO-களுக்கு சுற்றறிக்கை -ஆசிரியர்கள் இடமாறுதல் மற்றும்
கலந்தாய்வு ஒத்திவைப்பு-DSE..!!
தொடக்கக் கல்வி இயக்குனரிடம் இருந்து அனைத்து மாவட்ட CEO-களுக்கும் அனுப்பப்பட்ட சுற்றறிக்கை:
பொதுமாறுதல் கலந்தாய்வு ஒத்திவைப்பு:
2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகள் சார்பாக நெறிமுறைகள் ஆணை வெளியிடப்பட்டது. அதன் தொடர்ச்சியாக பொதுமாறுதல்கள் / பதவி உயர்வுகளுக்கான கால அட்டவணைகள் வெளியிடப்பட்டது. இதன் தொடர்ச்சியாக 28 .1.2022 நாளிட்ட செயல்முறைகளில் 2021-22ம் கல்வியாண்டிற்கான ஆசிரியர்களுக்கான பொதுமாறுதல்கள் மற்றும் பதவி உயர்வுகளுக்கான திருத்திய கால அட்டவணை வெளியிடப்பட்டது.
தொடக்கக் கல்வி இயக்குனர் அறிவிப்பு:
தற்போது நிர்வாகக் காரணங்களுக்காக பள்ளிக் கல்வி ஆணையரக கட்டுப்பாட்டின் கீழ் பணிபுரியும் அரசு / நகராட்சி உயர் / மேல்நிலைப் பள்ளிகளில் பணிபுரியும் அனைத்துவகை ஆசிரியர்களுக்கு 15.02.2022 முதல் நடக்கவிருந்த மாறுதல் மற்றும் பதவி உயர்வு கலந்தாய்வுகள் தற்காலிகமாக ஒத்தி வைக்கப்படுகிறது . இது குறித்த அறிவிப்பு பின்னர் வெளியிடப்படும்.
0 Comments