Join Our Whats app Group Click Below Image

WIPRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

WIPRO நிறுவனத்தில் வேலைவாய்ப்பு அறிவிப்பு..!!

இந்தியாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான WIPRO தற்போது புதிய வேலைவாய்ப்பு அறிவிப்புகளை வெளியிட்டுள்ளது. பொறியியல் பட்டதாரிகள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம். 

பணியின் பெயர் : Project Engineer (திட்ட பொறியாளர்.) 

கல்வித் தகுதி  :

--WIPRO-ன் வேலைவாய்ப்புக்கு விண்ணப்பிக்கும் நபர்கள் மத்திய அல்லது மாநில அரசால் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனங்களில் முழுநேர பட்டப் படிப்பை முடித்திருக்க வேண்டும்.

 --B.E, B.Tech பட்டப்படிப்பில் 5 ஆண்டு ஒருங்கிணைந்த படிப்பு மற்றும் M.Tech.படித்தவர்கள் விண்ணப்பிக்கலாம்.

--10 ஆம் வகுப்பு - 60% அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்

--12 ஆம் வகுப்பு - 60% அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்

--பட்டப்படிப்பு - 60% அல்லது CGPA 6.0 அல்லது அதற்கு மேல் மதிப்பெண்களை பெற்றிருக்க வேண்டும்

--பகுதி நேரம் அல்லது 10, 12ம் வகுப்புகள், பட்டப்படிப்பு ஆகியவற்றில் தொலைதூரக் கல்வி பயின்றவர்கள் விண்ணப்பிக்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இழப்பீடு:

ஆண்டுக்கு ரூ.3.50 லட்சம்.

சேவை ஒப்பந்தம்:

சார்பு விகித அடிப்படையில் 12 மாதங்களுக்குப் பொருந்தும் வகையில் ரூ.75,000 ஆகும்.

பிற அளவுகோல்கள் : (Other criteria)

கடந்த ஆறு மாதங்களில் WIPRO நடத்திய எந்த தேர்வு செயல்முறையிலும் பங்கேற்காத விண்ணப்பதாரர்கள் இந்த வேலைக்கு விண்ணப்பிக்கலாம். 

பங்கேற்ற விண்ணப்பதாரர்கள் விண்ணப்பிக்கத் தகுதியற்றவர்கள்.

விண்ணப்பதாரர்கள் இந்திய குடிமகனாக இருக்க வேண்டும்.

அல்லது PIO அல்லது OCI அட்டை வைத்திருக்க வேண்டும்

விண்ணப்பிக்க விரும்பும் பூடான் மற்றும் நேபாள நாட்டவர்கள் தங்கள் குடியுரிமை சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும்.

தேர்வு செயல்முறை:

விண்ணப்பதாரர்கள் ஆன்லைனில் 168 நிமிட தேர்வு எழுத வேண்டும்.

** முதலில் aptitude test 48 நிமிடங்கள் , 

**இரண்டாவதாக written communication test 20 நிமிடங்கள் 

**இறுதியாக programming test 1 மணி நேரம் இருக்கும்.

 என WIPRO தெரிவித்துள்ளது. 

விண்ணப்பதாரர்கள் ஜாவா, சி, சி ++ அல்லது பைதான் ஆகியவற்றில் ஏதேனும் ஒன்றை தேர்வு செய்யலாம். அதன் அடிப்படையில் தேர்வு இருக்கும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments