Join Our Whats app Group Click Below Image

NO EXAM; மாதம் ரூ.35,000/- சம்பளம் ICMR NIMR நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 NO EXAM; மாதம் ரூ.35,000/- சம்பளம் ICMR NIMR நிறுவனத்தில் வேலைவாய்ப்பு..!!

இந்திய மருத்துவ கவுன்சிலின் (ICMR) கட்டுப்பாட்டில் இயங்கும் தேசிய மலேரியா ஆராய்ச்சி நிறுவனத்தில் (NIMR) காலியாக உள்ள பணியிடங்களை நிரப்பும் பொருட்டு அதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பானது தற்போது வெளியாகியுள்ளது. அந்த அந்நிறுவனத்தில் Senior Project Research Fellow (SRF), Research Assistant and Project Technician I பணிகளுக்கு திறமையானவர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். 

Senior Project Research Fellow (SRF), Research Assistant and Project Technician I பணிகளுக்கு என 04 காலிப்பணியிடங்கள் உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

வயது வரம்பு :

பதிவாளர்கள் குறைந்தபட்சம் 25 முதல் அதிகபட்சம் 35 வயதிற்கு இடைப்பட்டவர்கள் இப்பணிகளுக்கு விண்ணப்பித்துக் கொள்ளலாம்.

கல்வித்தகுதி :

Senior Project Research Fellow (SRF) - Post Graduate Degree in Basic Science அல்லது Post Graduate Degree in Professional Course தேர்ச்சியுடன் 2 வருட அனுபவம் கொண்டிருக்க வேண்டும்.

Research Assistant - Graduate in Science தேர்ச்சியுடன் 3 வருடங்கள் வரை அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

Project Technician I - High School அல்லது அதற்கு இணையான தேர்ச்சி அல்லது ITI/ National Trade Certificate முடித்திருக்க வேண்டும்.

ஊதியம் :

தேர்வு செய்யப்படுபவர்களுக்கு குறைந்தபட்சம் ரூ.16,000/- முதல் அதிகபட்சம் ரூ.35,000/- வரை ஊதியம் பெறுவர் என அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பினை அணுகலாம்.

தேர்வு செயல்முறை:

பதிவாளர்கள் அனைவரும் நேர்காணல் அடிப்படையில் தேர்வு செய்யப்படுவர். இந்த நேர்காணல் ஆனது வரும் 20.10.2021 அன்று நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

விண்ணப்பிக்கும் முறை :

திறமையானவர்கள் வரும் 20.10.2021 அன்று நடைபெறவுள்ள நேர்காணலில் தங்களின் அசல் ஆவணங்களுடன் கலந்துக் கொள்ளுமாறு கேட்டுக் கொள்கிறோம்.

Official PDF Notification –

https://main.icmr.nic.in/sites/default/files/career_opportunity/Adv_38_04102021.pdf

Official Website – https://main.icmr.nic.in/career-opportunity

Post a Comment

0 Comments