TNPSC:TAMIL: நூல் - ஆசிரியர்,POLITY:தலைமைச் செயலக பணிகள் பற்றிய குறிப்புகள்,
தலைமைச் செயலக பணிகள் பற்றிய குறிப்புகள்!
தலைமைச் செயலர் மாநிலச் செயலகத்தின் செயல்துறைத் தலைவராக உள்ளார் .
மாநில நிர்வாகத்தின் நிர்வாகத் தலைவராக அவர் உள்ளார் . மற்றும் மாநில நிர்வாகப் படிநிலையின் உச்சத்தில் நிற்கிறார் .
உண்மையில் , அவர் அனைத்துச் செயலர்களின் தலைவராக இருந்து அனைத்துத் துறைகளையும் கட்டுப்படுத்துகிறார் .
அவர் மாநிலத்தில் மிகவும் மூத்த சிவில் பணியாளராக இருக்கிறார் . மாநில அரசாங்கத்தால் தயாரிக்கப்பட்ட செயல் விதிகளில் குறிப்பிட்டுள்ள அதிகாரங்களையும் , பணிகளையும் அவர் பெற்றுள்ளார் .
அவர் பின்வருகின்ற பிரதான பணிகளையும் , மற்ற பணிகளையும் செய்கிறார் .முதலமைச்சருக்கு ஒரு ஆலோசகராக மாநில அமைச்சர்களால் அனுப்பப்படும் முன்வரைவுகளின் நிர்வாக உள்ளடக்கங்களை தலைமைச் செயலர் விளக்குகிறார் .
அமைச்சர் குழுவிற்கு செயலராக அமைச்சர் குழு கூட்டங்களுக்கான நிகழ்ச்சி நிரலை அவர் தயாரிக்கிறார் . மற்றும் அதன் செயல்பாடுகளின் பதில்களைப் பாதுகாக்கிறார் .
சிவில் பணியின் தலைவராக மூத்த மாநில சிவில் பணியாளர்களின் நியமனம் , இடமாற்றம் மற்றும் பதவி உயர்வு தொடர்பானவற்றை அவர் கவனிக்கிறார் .
தலைமை ஒருங்கிணைப்பாளராக துறைகளுக்கு இடையேயான ஒருங்கிணைப்பை நோக்கி அவர் பணிபுரிகிறார் .
துறைகளுக்கிடையேயான சிக்கல்களைப் போக்குவதற்கு அமைக்கப்பட்டுள்ள ஒருங்கிணைப்புக் குழுவின் தலைவராக இருக்கிறார் .
சில குறிப்பிட்ட துறைகளின் தலைவராக அவைகளை மேற்பார்வையிடுகிறார் . மற்றும் கட்டுப்படுத்துகிறார் .
சிக்கல் தீர்க்கும் நிர்வாகியாக வெள்ளம் , வறட்சி , இனக் கலவரங்கள் போன்ற சிக்கலான நேரங்களில் மிகவும் முக்கிய பங்கில் அவர் செயல்படுகிறார் .
மற்ற பணிகள்
துறைகளுக்குள் அடங்காத அனைத்து விவகாரங்களையும் தலைமைச் செயலர் கவனிக்கிறார் .
ஒட்டுமொத்த செயலகத்தின் மீதான பொது மேற்பார்வை மற்றும் கட்டுபாட்டை அவர் செயல்படுத்துகிறார்.
தொடர்புடைய மாநில உறுப்பினராக உள்ள மண்டலக் கவுன்சிலின் செயலராக சுழற்சி முறையில் அவர் செயல்படுகிறார் .
செயலகக் கட்டடம் , அமைச்சர்களுடன் தொடர்புடைய பணியாளர்கள் , செயலக நூலகம் மற்றும் செயலகத் துறைகளின் பணியாளர்கள் மீதான நிர்வாகம் கட்டுபாட்டை அவர் பெற்றுள்ளார் .
மாநில அரசாங்கம் , மத்திய அரசாங்கம் மற்றும் பிற மாநில அரசாங்கங்கள் போன்றவைகளுக்காக தகவலின் பிரதான வழியாக அவர் இருக்கிறார் .
தேசிய வளர்ச்சிக் கவுன்சிலின் கூட்டங்களில் அவர் கலந்து கொள்கிறார்.
மாநில அரசாங்கத்தின் தலைமை பொதுமக்கள் தொடர்பு அலுவலராக அவர் செயல்படுகிறார் .
மற்றும் அரசியலமைப்பு விதி 356 ன் படி மாநிலத்தில் ஜனாதிபதி ஆட்சி அமுல்படுத்தப்படும் போது , மத்திய ஆரோசகர்கள் நியமிக்கப்படாமல் இருக்கும்போது ஆளுநருக்கு முதன்மை ஆலோசகராக அவர் செயல்படுகிறார் .
இவ்வாறாக மொத்தத்தில் தமிழ்நாட்டின் தலைமைச் செயலகம் மாநில நிர்வாகத்தின் நரம்புமண்டலமாக இருக்கிறது . இதேபோல , தமிழ்நாட்டில் அனைத்துச் செயலர்களின் தலைவராக உள்ள தலைமைச் செயலர் குறிப்பாக செயலக நிர்வாகத்தின் நரம்பு முறைமையாக இருக்கிறார்.
நூல் - ஆசிரியர் எளிதில் நினைவில் கொள்ள
------------பூக்கள்---------------
1.உதிரி பூக்கள் - உலகநாதன்
2.புரட்சி பூக்கள் - புலமைப்பித்தன்
3.சுடு பூக்கள் - இரா.மீனாட்சி
4.புன்னகை பூக்கள் - பொன்னடியான்
5.கண்ணீர் பூக்கள் - மு.மேத்தா
6.சிரிக்கும் பூக்கள் - அழ.வள்ளியப்பா
7.காகித பூக்கள் - மு.கருணாநிதி
-----------விளக்கு-------------
1.அகல் விளக்கு - மு.வரதராசனார்
2.பாவை விளக்கு - அகிலன்
3.குடும்ப விளக்கு - பாரதிதாசன்
4.இரட்டை விளக்கு - ந.பிச்சைமூர்த்தி
5.கொடிவிளக்கு - இரா.மீனாட்சி
6.கோபுர விளக்கு - தி.ஜானகிராமன்.
7.கை விளக்கு - ராஜாஜி.
8.மா விளக்கு - பெரியசாமி [பெ.தூரன்]
------------இரவு----------------
1.ஓர் இரவு - அண்ணா
2.எச்சில் இரவு - சுரதா
3.அன்று இரவு - புதுமைப்பித்தன்
4.முதலில் இரவு - ஆதவன்
5.இரவில் - ஜெயகாந்தன்
6.இரவு வரவில்லை - வாணிதாசன்
7.கயிற்றிரவு - விருத்தாசலம்
8.இன்றிரவு பகலில் - கவிக்கோ
------------வாசல்------------------
1.மலை வாசல் - சாண்டில்யன்
2.வார்த்தை வாசல் - சுரதா
3.வாடி வாசல் - சி.சு.செல்லப்பா
4.சொர்க்க வாசல் - அண்ணா.
------------விஜயம்-----------------
1.மான விஜயம் - பரிதிமாற்கலைஞர்
2.மதுரா விஜயம் - கங்கா தேவி
3.கமலா விஜயம் - வ.வே.சு.ஐயர்
--------------காரி----------------
1.வேலைக்காரி - அண்ணா
2.பூக்காரி - நா.பிச்சைமூர்த்தி
3.நாட்டியக்காரி - வல்லி கண்ணு
4.நாடகக்காரி - கல்கி.
------------முத்தம்--------------
1.சாவின் முத்தம் - சுரதா
2.எதிர்பாராத முத்தம் - பாரதிதாசன்.
3.ஒரே முத்தம் - மு.கருணாநிதி
--------------பரிசு------------------
1.நன்றி பரிசு - நீலவன்
2.பாண்டியன் பரிசு - பாரதிதாசன்
3.பொங்கல் பரிசு - வாணிதாசன்
--------------மலர்---------------
1.கறுப்பு மலர் - நா.காமராசன்
2.வாடா மலர் - மு.வ
3.பொன் மலர் - அகிலன்
4.குறிஞ்சி மலர் - நா.பார்த்தசாரதி
-------------பூ-----------------
1.சூரியகாந்தி - நா.காமராசன்
2.செண்பகப்பூ - சுஜாதா
3.செம்பருத்தி - தி.ஜானகிராமன்
4.கனகாம்பரம் - கு.பா.ரா.
5.செந்தாமரை - மு.வ
-----------கோல்--------------
1.ஊன்றுகோல் - முடியரசன்
2.செங்கோல் - மா.பொ.சிவஞானம்.
-----------கோட்டம்-------------
1.காவல் கோட்டம் - சு.வெங்கடேசன்
2.பத்தினி கோட்டம் - ஜெகசிற்பியன்
3.குணவாயிற் கோட்டம் - மணிசேகரன்.
-------------கனி--------------
1.மாங்கனி - கண்ணதாசன்
2.கொய்யாக் கனி - பெருஞ்சித்திரனார்
3.செவ்வாழை - அண்ணா
4.நாவற்பழம் - நா காமராசன்
5.நெருஞ்சிபழம் - குழந்தை
6.ஆப்பிள் கனவு - நா காமராசன்
7.பலாப்பழம் - அசோகமித்ரன்
8. நெல்லிக்கனி - வ சுப மாணிக்கம்
---------இலக்கியம்-------------
1.குழந்தை இலக்கியம் - வாணிதாசன்
2.இளைஞர் இலக்கியம் - பாரதிதாசன்.
-----------மகன்------------
1.தேரோட்டியின் மகன் - தகலி சிவசங்கர்
2.தோட்டியின் மகன் - அண்ணா
3.மண்னின் மகன் - நீலம் பத்மநாபன்
4.இளைய மகன் - சிற்பி
5.போலீஸ்காரன் மகன் -பி.எஸ்.இராமையா
6.வண்டிக்காரன் மகன் - மு.கருணாநிதி
7.புலவர் மகன் - பூவண்ணண்
8.மகன் -ஜெயபிரகாசம்.
-----------வீடு--------------
1.மணல் வீடு - சி.சு செல்லப்பா
2.இருண்ட வீடு - பாரதிதாசன்
3.ஆகாயத்திற்கு அடுத்த வீடு - மு.மேத்தா
4.மாற்றப்படாத வீடு - தேவதேவன்.
----------இதயம்--------------
1.தமிழன் இதயம் - நாமக்கல் கவி
2.உளுத்த இதயம் - வை.மு.கோதைநாயகி.
0 Comments