Join Our Whats app Group Click Below Image

TNPSC:சேரர், சோழர், பாண்டியர்,POLITY - இந்திய அரசியலமைப்புச் சட்டம் - அறிமுகம்!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 TNPSC:சேரர், சோழர், பாண்டியர்,POLITY - இந்திய அரசியலமைப்புச் சட்டம் - அறிமுகம்!

சேரர், சோழர், பாண்டியர்.

சேரர்

" சங்க காலத்தின்போது மூவேந்தர்கள் தமிழகப் பகுதிகளை ஆட்சி புரிந்தனர் . வேந்தர் எனும் சொல் சேரர் , சோழர் , பாண்டியர் ஆகியோரைக் குறிப்பிடுவதற்காகப் பயன்படுத்தப்பட்டது .

சேரர்கள் தமிழகத்தைச் சேர்ந்த மத்திய மற்றும் வடக்குத் திருவிதாங்கூர் , கொச்சி , தெற்கு , மலபார் , கொங்கு மண்டலம் ஆகியவற்ற ஆண்டனர் , பதிற்றுப்பத்து சேர அரசர்கள் குறித்த செய்திகளை வழங்குகின்றன .

சேர அரசன் செங்குட்டுவன் வட இந்தியாவின் மீது படையெடுத்துச் சென்றார் . சிலப்பதிகாரக் காவியப் பாத்திரமான கண்ணகிக்கு சிலை எடுப்பதற்காக அவர் இமயமலையிலிருந்து கற்களைக் கொண்டு வந்தார் எனத் தெரியவந்துள்ளது .

பத்தினித் தெய்வ வழிபாட்டை அவர் அறிமுகம் செய்தார் . இளங்கோவடிகள் சேரன் செங்குட்டுவனின் தம்பியாவார் . அவர்தான் சிலப்பதிகாரத்தின் ஆசிரியர் சேரல் இரும்பொறை எனும் அரசன் தனது பெயரில் நாணயங்களை வெளியிட்டார் . சில சேர நாணயங்களில் அவர்களின் சின்னமான வில்லும் அம்பும் பொறிக்கப்பட்டுள்ளன .

சோழர்

" சங்க காலத்தில் சோழ அரசு வேங்கட மலைகள் வரை விரிந்திருந்தது . காவிரி கழிமுகப்பகுதி சோழ நாட்டின் மையப் பகுதியாக விளங்கியது . இப்பகுதி பின்னர் சோழ மண்டலம் என அறியப்பட்டது .

சோழ அரசர்களில் மிகவும் புகழ் பெற்றவர் கரிகால் வளவன் அல்லது கரிகாலன் ஆவார் . தமிழ்நாட்டின் வரலாறு , மரபு , பண்பாடு & சமூக அரசியல் இயக்கங்கள் அவர் தன்னை எதிர்த்த சேரர் , பாண்டியர் மற்றும் அவர்களை ஆதரித்த பதினொன்று வேளிர் தலைவர்களின் கூட்டுப்படையைத் தஞ்சாவூர் பகுதியில் உள்ள வெண்ணி எனும் சிற்றூரில் தோற்கடித்தார் .

அவர் காடுகளை விளைநிலங்களாக மாற்றினார் . வேளாண்மையை மேம்படுத்துவதற்காகக் காவிரி ஆற்றின் குறுக்கே கல்லணையைக் கட்டினார் . சோழர்களின் துறைமுகமான புகார் இந்தியப் பெருங்கடலின் பல பகுதிகளிலிருந்து வணிகர்களை அதன்பால் ஈர்த்தது .

பட்டினப்பாலை எனும் பதினெண் கீழ்க்கணக்கைச் சேர்ந்த நூல் , கரிகாலனின் ஆட்சியின் போது அங்கு நடைபெற்ற வணிக நடவடிக்கைகள் பற்றிய விரிவான செய்திகளை வழங்குகிறது.

பாண்டியர்

" பாண்டியர் இன்றைய தென்தமிழகத்தை ஆட்சி செய்தனர் . பாண்டிய அரசர்கள் தமிழ்ப்புலவர்களையும் அறிஞர்களையும் ஆதரித்தனர் .

பல பாண்டிய அரசர்களின் பெயர்கள் சங்க இலக்கியங்களில் குறிப்பிடப்பட்டுள்ளன . - நெடுஞ்செழியன் மிகவும் புகழ்பெற்ற போர்வீரராகப் போற்றப்படுகிறார் .

அவர் தலையாலங்கானம் என்னுமிடத்தில் சேரர் , சோழர் , ஐந்து வேளிர்குலத் தலைவர்கள் ஆகியோரின் கூட்டுப்படையைத் தலையாலங்கானம் என்னுமிடத்தில் தோற்கடித்தார் . அவர் கொற்கையின் தலைவன் எனப் போற்றப்படுகின்றார் . பாண்டிய நாடு முத்துக்குளிப்புக்குப் புகழ் பெற்றதாகும் . பாண்டிய அரசர்கள் பல நாணயங்களை வெளியிட்டனர் .

அவர்களின் நாணயங்கள் , ஒருபுறத்தில் யானையின் வடிவத்தையும் மற்றொருபுறத்தில் மீனின் உருவத்தையும் கொண்டுள்ளன . | முதுகுடுமிப் பெருவழுதி என்ற பாண்டிய அரசர் பல வேதவேள்விகளை நடத்தியதைக் கொண்டாடும் விதமாக நாணயங்களை வெளியிட்டார் .

POLITY - இந்திய அரசியலமைப்புச் சட்டம் - அறிமுகம்!

அரசியலமைப்புச் சட்டம்

அரசியலமைப்புச் சட்டம் என்பது அரசியல் முறைகளின் அடிப்படைக் கோட்பாடுகளுடைய தொகுப்பாகும் . இதன் அடிப்படையிலேயே நாட்டு மக்கள் ஆளப்படுகின்றனர் .

இந்திய அரசியலமைப்புச் சட்டம்

 அமைச்சரவை தூதுக்குழுவின் பரிந்துரைப்படி நம் இந்திய நாட்டிற்கான புதிய அரசியலமைப்பினை உருவாக்க இந்தியப் பிரதிநிதிகள் அடங்கிய அரசியல் நிர்ணய சபை 1946 இல் அமைக்கப்பட்டது .

1946 டிசம்பர் 9 - ஆம் நாள் டாக்டர் . சச்சிதாநந்த சின்கா தலைமையில் அரசியல் நிர்ணய சபையின் முதல் கூட்டம் நடைபெற்றது .

1946 டிசம்பர் 11 - ஆம் நாள்

நடைபெற்ற இரண்டாவது கூட்டத்தில் டாக்டர் இராஜேந்திர பிரசாத் அரசியல் நிர்ணய  சபையின் தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.

அரசியல் நிர்ணய சபை , அரசியலமைப்புச் சட்டமியற்றும் பணியை வரைவு குழுவிற்கு அளித்தது .

1947 ஆகஸ்ட் 29 - ஆம் நாள் வரைவுக்குழுவின் தலைவராக

 டாக்டர் பி . ஆர் அம்பேத்கர் நியமனம் செய்யப்பட்டார் .

திறமையான சட்ட வல்லுநரான டாக்டர் அம்பேத்கர் இந்திய அரசியலமைப்பு சட்டத்தின் ' சிற்பி ' ஆவார் .

சட்ட வரைவுக் குழு , 60 நாடுகளின் அரசியலமைப்புச் சட்டத்தை ஆய்ந்துப்படித்து , அவற்றில் உள்ள தகுதிமிக்க சிறப்புக் கூறுகளை ஏற்றுக் கொண்டது .

அரசியலமைப்புச் சட்டம் இயற்ற 2 ஆண்டுகள் 11 மாதங்கள் 18 நாட்கள் ஆனது .

11 திட்டமிட்டக் கூட்டங்களில் அரசியலமைப்புச் சட்டத்தை பற்றி கலந்துரையாட 144 நாட்கள் ஆயிற்று .

1929 - ஆம் ஆண்டு லாகூரில் நடைபெற்ற இந்திய தேசியக் காங்கிரஸ் மாநாட்டு பூரண சுயராஜ்யம் தீர்மானத்தின்படி 1930 - ஆம் ஆண்டு , ஜனவரி 26 - ஆம் நாள் முதல் இந்திய சுதந்திர தினம் கொண்டாடப்பட்டது .

அதனை நினைவு கூறும் வகையில் 1950 ஜனவரி 26ஆம் நாள் இந்திய அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது .

அரசியலமைப்பு நிர்ணய சபை 1950 ஜனவரி 24 - ஆம் நாள் கடைசியாக கூடியது .

இந்திய அரசியலமைப்பு ஏற்றுக் கொண்ட போது . 22 பாகங்களையும் , 8 அட்டவணைகளையும் 395 சரத்துக்களையும் கொண்டிருந்தது.

தற்போது இந்திய

அரசியலமைப்பு 25 பாகங்களையும் ,

12 அட்டவணைகளையும் 462 சரத்துக்களையும் கொண்டுள்ளது.

அரசியல் வரைவுக்குழு

 டாக்டர் பி . ஆர் . அம்பேத்கர்

( குழுத் தலைவர் )

என் . கோபால்சுவாமி அய்யங்கார்.

அல்லாடி கிருஷ்ணசாமி ஐயர்.

டாக்டர் கே . எம் . முன்சி .

சையத் முகமது சாதுல்லா.

பி . எல் . மித்ரா ( என் . மாதவராவ் )

டிடி கிருஷ்ணமாச்சாரி

( டி . பி . கைத்தான் )

குழுக்கள், குழுத் தலைவர்.

அடிப்படை உரிமைகள் மற்றும் சிறுபான்மையினர் குழு -

வல்லவாய் பட்டேல்.

மாகாண அரசியலமைப்பு குழு -

வல்லவாய் பட்டேல்.

மத்திய அதிகார குழு -

ஜவஹர்லால் நேரு.

மத்திய அரசியலமைப்பு குழு - ஜவஹர்லால் நேரு.

கொடிக் குழு - ஜெ .பி.கிருபளானி.

நெறிமுறைக் குழு - கே.எம்.முன்சி.

நடைமுறை விதிக் குழு -

இராஜேந்திர பிரசாத்.


Post a Comment

0 Comments