Join Our Whats app Group Click Below Image

Reliance super scheme: வெறும் 500, 700 ரூபாய் முன் பணமாக செலுத்தி 4 ஜி JioPhone Next ஃபோன் வாங்கலாம்!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 Reliance super scheme: வெறும் 500, 700 ரூபாய் கொடுத்து 4 ஜி JioPhone Next ஃபோன் வாங்கலாம்!!

ஜியோ போன் நெக்ஸ்ட்(JioPhone Next):

ரிலையன்ஸ் நிறுவனம் மிகவும் குறைந்த விலையில் ஜியோபோன் நெக்ஸ்ட்(JioPhone Next) ஸ்மார்ட் போனை செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்த உள்ளது .

ரிலையன்ஸ் நிறுவனம் கூகுள் நிறுவனத்துடன் இணைந்து மலிவான விலையில் 4 ஜி ஸ்மார்ட் போனை உருவாக்கி உள்ளது . ஜியோ போன் நெக்ஸ்ட்(JioPhone Next) என பெயரிடப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் போன் , 2 மாடல்களில் உருவாக்கப்பட்டுள்ளது .

செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகம்:

இதனை ரிலையன்ஸ் நிறுவனம் விநாயகர் சதுர்த்தி நாளான செப்டம்பர் 10 ஆம் தேதி அறிமுகப்படுத்துகிறது . பேசிக் ஃபீச்சர்ஸ் வசதி கொண்ட ஜியோ போன் நெக்ஸ்ட்(JioPhone Next) ஸ்மார்ட் போன் 5,000 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படும் என தெரிகிறது.

மேம்பட்ட வசதி கொண்ட மற்றொரு ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போன் 7,000 ரூபாய் விலை நிர்ணயிக்கப்படும் என கூறப்படுகிறது. விலை குறித்து தெளிவான அறிவிப்பு வெளியாகவில்லை என்றாலும் கூட 10% கட்டணத்தை மட்டும் செலுத்தி ஸ்மார்ட் போனை பெற்றுக் கொள்ளலாம்.

அதாவது 500 அல்லது 700 ரூபாய் கொடுத்து ஸ்மார்ட் ஃபோன் வாங்கிக் கொள்ளலாம். மீதித் தொகையை மாதந்தோறும் குறைந்த அளவில் கட்டினால் போதுமானது.

எஞ்சிய கட்டணத்தை நீண்ட கால தவணையில் செலுத்தும் வகையில் திட்டங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. பாரத ஸ்டேட் வங்கி, பிரைமல் கேபிடல், ஐடிஎஃப்சி மற்றும் டிஎம்ஐ பைனான்ஸ் ஆகிய நிறுவனங்கள் மூலம் தவணை வசூலிக்கப்படும் என கூறப்படுகிறது.

வட்டி வசூலிக்கப்படுமா, இல்லையா என்பது குறித்து இந்த நிறுவனம் தெளிவாக விளக்கவில்லை. அடுத்த 6 மாதங்களில் 5 கோடி ஜியோ போன் நெக்ஸ்ட் ஸ்மார்ட் போனை விற்க அந்நிறுவனம் இலக்கு நிர்ணயித்துள்ளது.

Post a Comment

0 Comments