RATION CARD:ரேஷன் பொருட்களை பெறுவதற்கான தகுதி நிர்ணய விதிகளில் மாற்றம்..!!
ரேஷன் கார்டு தொடர்பான முக்கிய முடிவு:
உணவு மற்றும் பொது விநியோகத் துறை ரேஷன் கார்டு தொடர்பான முக்கிய முடிவை எடுத்துள்ளது. அரசு ரேஷன் கடைகளில் இருந்து ரேஷன் பொருட்களை பெறும் தகுதியுள்ளவர்கள் தொடர்பான தர நிர்ணய விதிகளில் உணவு மற்றும் பொது விநியோகத் துறை மாற்றங்களை மேற்கொள்ள உள்ளது. இதனால், இனி சிலருக்கு ரேஷன் பொருட்கள் பெற முடியாத நிலை ஏற்படலாம்.
இந்த செய்தியையும் படிங்க...
தமிழகத்தில் செப்டம்பர் 30ம் தேதி முதல் இதற்கு தடை -தமிழக அரசு அதிரடி அறிவிப்பு..!!
ரேஷன் பொருட்களை பெறுவதற்கான தகுதி நிர்ணய விதிகளில் மாற்றத்தை கொண்டுவருவதற்கான, பணி கிட்டத் தட்ட நிறைவடைந்துள்ள நிலையில், இது தொடர்பாக மாநில அரசுகளுடன் பல சுற்று ஆலோசனை கூட்டங்களும் நடத்தப்பட்டுள்ளன.
தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டம்:
தற்போது நாடு முழுவதும் 80 கோடி மக்கள் தேசிய உணவுப் பாதுகாப்புச் சட்டத்தின் (NFSA) கீழ் ரேஷன் பொருட்களை (Ration) பெற்று வருகின்றனர் என உணவு மற்றும் பொது விநியோகத் துறை கூறியுள்ளது. அவர்களில் பொருளாதார ரீதியாக வளமாக உள்ள, பணம் படைத்தவர்களும் உள்ளனர் என குறிப்பிட்டுள்ள பொது விநியோகத் துறை, இதை மனதில் வைத்து, தகுதியானவர்கள் மட்டுமே பலனை அடையும் வகையில் தர நிலைகளில் மாற்றங்களைச் செய்ய உள்ளதாக தெரிவித்துள்ளது.
உணவு மற்றும் பொது விநியோகத் துறை (PDS) :
இதுதொடர்பாக, உணவு மற்றும் பொது விநியோகத் துறை (PDS) செயலாளர் சுதன்ஷு பாண்டே கூறுகையில், கடந்த ஆறு மாதங்களாக, மாநிலங்களில், ரேஷன் பொருட்கள் பெறுவதற்கான தகுதியை நிர்ணயிக்கும் விதிகளில் மாற்றம் ஏற்படுத்துவது குறித்து ஆலோசனை கூட்டம் நடத்தப்படுகிறது. மாநிலங்கள் வழங்கிய பரிந்துரைகளை கருத்தில் கொண்டு, புதிய விதிகள் ஏற்படுத்தப்படுகின்றன.
புதிய விதிகள், இந்த மாதம் இறுதி செய்யப்படும்:
புதிய விதிகள் அமல்படுத்தப்பட்ட பிறகு, தகுதியுள்ள நபர்களுக்கு மட்டுமே பலன் கிடைக்கும், தகுதியற்றவர்களுக்கு பலன் கிடைக்காது. பொருளாதார ரீதியாக மேம்பட்டுள்ள மக்களும் இந்த சேவையை பெற்று வரும் வேளையில், தேவைப்படுபவர்களுக்கு பலன் கிடைக்க வேண்டும் என்பதை மனதில் வைத்து இந்த மாற்றம் செய்யப்படுகிறது.
இந்த செய்தியையும் படிங்க...
BREAKING: STATE GOVERNMENT EMPLOYEES- JANUARY 2022 - DAஉயர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!
'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டம்':
2020 டிசம்பர் வரை, நாட்டில் உள்ள 32 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களில் 'ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு (ONORC) திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது என உணவு மற்றும் பொது விநியோகத் துறை கூறியுள்ளது. NFSA திட்டத்தில், சுமார் 69 கோடி பயனாளிகள் அதாவது 86 சதவீத மக்கள் இந்தத் திட்டத்தைப் பயன்படுத்தி ரேஷன் பொருட்களை வருகின்றனர். ஒவ்வொரு மாதமும் சுமார் 1.5 கோடி மக்கள் ஒரு இடத்திலிருந்து இன்னொரு இடத்திற்குச் இடம் பெயரும் நிலையில், இந்த ஒரே நாடு ஒரே ரேஷன் கார்டு திட்டம் அவர்களுக்கு பெரிதும் பயனளிக்கிறது.
0 Comments