Post office scheme:ஆண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் செல்வ மகன் சேமிப்பு திட்டம்..!!
செல்வ மகன் சேமிப்பு திட்டம்:
பெண் பிள்ளைகளுக்காக அஞ்சல் துறையில் எப்படி செல்வமகள் சேமிப்பு திட்டம் உள்ளதோ? அதைப் போல தான் ஆண் பிள்ளைகளுக்காக அஞ்சல அலுவலகத்தில் உருவாக்கப்பட்டது செல்வ மகன் சேமிப்பு திட்டம். கடந்த 2015 ஆம் ஆண்டு அறிமுகப்படுத்தப்பட்ட இந்த திட்டம் மிகச் சிறந்த சேமிப்பு திட்டம் ஆகும். குறிப்பாக ஆண் பிள்ளைகளை கொண்டுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்காக கட்டாயம் இந்த திட்டத்தை தொடங்கிவிடுங்கள். எப்படி ஒரு குழந்தைக்கு நல்ல கல்வி, நல்ல சூழல், நல்ல உணவு முக்கியமோ அதைப்போல தான் அவர்களின் வருங்காலத்திற்காக நீங்கள் சேமிக்கும் பணமும்.
கூடுதல் வட்டி மட்டுமின்றி உயர்கல்விக்கு கணிசமான தொகை கிடைக்க கண்டிப்பாக இந்த திட்டம் உதவும். எதிர்பாராத இழப்புக்குப் பின்னரும் குழந்தையின் கல்வி பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்று நீங்கள் நினைத்தால் அதற்கு அவர்களின் சிறுவயதிலே இதுப்போன்ற சேமிப்பு திட்டங்களை தொடங்கி வைப்பது நல்லது.
சிறப்பு:
இந்த பொன்மகன் சேமிப்பு திட்டத்தின் சிறப்பே முதிர்வு தேதிக்கு முன்பாகவே பணம் பெற்றுக்கொள்ளும் வசதி உள்ளது.
ஆண்டுக்கு 12 முறை என குறைந்தபட்சம் ரூ.500 முதல் அதிகபட்சம் 1.5 லட்சம் ரூபாய் வரை சேமிப்பு தொகை செலுத்தலாம். ஏப்ரல் முதல் மார்ச் வரையிலான நிதியாண்டை அடிப்படையாகக் கொண்டு, 15 ஆண்டுகளுக்கு பணம் செலுத்த வேண்டும். இதற்கு 8.1% வட்டி அளிக்கப்படும். இந்தத் திட்டத்தில் இணைய வயது வரம்பு கிடையாது . 10 வயதுக்கு கீழ் உள்ள ஆண் குழந்தைகளுக்கு பெற்றோர்கள் அல்லது பாதுகாவலர் மூலமாக கணக்கு தொடங்கலாம். 10 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் தானாகவே கணக்கு துவங்கலாம். இத்திட்டத்தில் செலுத்தப்படும் தொகைக்கு 80-சி பிரிவில் வருமான வரி விலக்கும் உண்டு.
இதில் கடன் வசதி மற்றும் செலுத்திய தொகையை திரும்பப்பெறும் வசதியும் உண்டு. ஆண் பிள்ளைகளை கொண்டுள்ள பெற்றோர்கள் தங்கள் குழந்தைக்காக கட்டாயம் இந்த திட்டத்தை தொடங்கிவிடுங்கள்.
0 Comments