Join Our Whats app Group Click Below Image

No Exam; 10th Pass; 12,000 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 No Exam; 10th Pass; 12,000 சம்பளத்தில் அஞ்சல் துறையில் வேலை..!!

அஞ்சல் துறையில் கிராம அஞ்சல் சேவையில் பணிபுரிய காலியிடங்கள் ஏராளமாக உள்ளன. இதில் 10-வது தேர்ச்சி அடைந்தவர்கள், 50 வயது வரை உள்ளோர் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து இந்திய அஞ்சல் துறை சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, உத்திரபிரதேசத்தின் எல்லா கோட்டங்களிலும் அஞ்சல் துறையின் கிராம அஞ்சல் சேவையில் மொத்தம் 4,264 காலிப்பணியிடங்களை அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக எந்த தேர்வும் எழுத தேவையில்லை.

கல்வித் தகுதி: அரசு அங்கீகாரமுள்ள பள்ளியில் 10-ஆம் வகுப்பில் தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். குறிப்பாக கணக்கு, ஆங்கிலம் மற்றும் மொழிப்பாடத்தில் மதிப்பெண்கள் பெற்றிருக்க வேண்டும்.

வயது வரம்பு: ஆகஸ்ட் 23, 2021 அன்று, 18 முதல் 50 வரை இருந்திருத்தல் வேண்டும்.

சுய தொழில் செய்பவர்கள், வேலை தேடுபவர்கள், ஆயுள் காப்பீட்டின் முன்னாள் முகவர்கள், முன்னாள் படை வீரர்கள் மற்றும் தகுதியுள்ள அனைவரும் விண்ணப்பிக்கலாம்.

எப்படி விண்ணப்பிப்பது?

இதற்கு விண்ணப்பிப்பதற்கு அஞ்சல் துறையின் அதிகாரப்பூர்வ வலைப்பக்கமான appost.in ற்கு சென்று அதில் கிடைக்கும் வழிகாட்டுதலை பின்பற்றினாலே போதும். அதில் குறிப்பிடப்பட்டுள்ள மூன்று படி நிலைகள்,

ரிஜிஸ்ட்ரேஷன் (பதிவு செய்தல்): 

முதலில் வேலைக்கு விண்ணப்பிக்கும் நபர் பதிவு செய்து தனிப்பட்ட பதிவு எண்ணைப் (Unique Registration Number) பெற வேண்டும்.

கட்டணம் செலுத்துதல் UR/OBC/EWS ஆகியவற்றில் ஆண்கள்/திருநம்பிகள் ஆகியோர் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைனில் பணம் செலுத்தும் போது, விண்ணப்பதாரரின் வங்கிக் கணக்கிலிருந்து தொகையை எடுத்துக்கொண்ட பின் எந்த உறுதிப்படுத்தலும் கிடைக்கவில்லை என்றால், விண்ணப்பதாரர் பதிலுக்காக 72 மணிநேரம் வரை காத்திருக்கலாம். எல்லா தலைமை தபால் அலுவலகத்திலும் நேரடியாக பணம் செலுத்தலாம்.

ஆன்லைனில் விண்ணப்பித்த பிறகு, விண்ணப்பத்தை நிரப்பவும். பின் ஆவணங்களைப் பதிவேற்றவும். பின்னர் அஞ்சல் அலுவலக விருப்பங்களைச் சமர்ப்பிக்கவும். உங்கள் விண்ணப்பத்தை சரி பார்த்து விட்டு, பிரிண்ட் அவுட் எடுத்துக்கொள்ளவும். இந்த மூன்று படிகளை முடித்தால், விண்ணப்பம் சமர்பிக்க பட்டுவிடும்.

இந்த லிங்க்கில் சென்று விண்ணப்பிக்கவும் https://www.appost.in/gdsonline/home.aspx.

விண்ணப்பங்கள் வந்து சேரவேண்டிய கடைசி நாள் 22.09.2021. 

தானியங்கி மெரிட் சிஸ்டம் வரையறைகளுக்குட்பட்டு தகுதியானவர்களை மதிப்பெண் மூலம் தேர்ந்தெடுக்கும். தேர்வு பெற்றவர்கள் உத்தரப்பிரதேசத்தின் பல பகுதிகளில் வேலை செய்யலாம். வேலைக்கு தேர்வானவர்களுக்கு 10,000/- முதல் 12,000/- வரை சம்பளம் கிடைக்கும்.

Post a Comment

0 Comments