Join Our Whats app Group Click Below Image

Group 1 & 2- மாதிரி வினாத்தாள்- விடையுடன்.

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 Group 1  & 2- மாதிரி வினாத்தாள்- விடையுடன்.

Group 1 - Development Administration in TN & Aptitude Development Administration In TN.

Group 1 - Development Administration in TN & Aptitude Development Administration In TN-CLICK HERE


Group 1-மாதிரி வினாத்தாள்

Group 1-மாதிரி வினாத்தாள்-CLICK HERE


Group 1 & 2- மாதிரி வினாத்தாள்- விடையுடன்

1. வாஸ்குலார் தாவரங்களின் ஓங்குத் தன்மைக்கும் வெற்றிகரமான வளர்ச்சிக்கும் காரணமாகவைகளில்  பொருந்தாதது எது?

 1.குறுகிய வேர்த்தொகுப்பு

 2. திறன்மிக்க கடத்து திசுக்கள் காணப்படுதல்

 3.உலர்தலை தடுப்பதற்கு கியூட்டிகிள் காணப்படுதல்

 4. வழிப்பறி மற்றும் திறம்பட செயல்பட இலைத்துளைகள் காணப்படுதல்

A. 1  மட்டும்✓

B. 2 மற்றும் 3

C. 3  மட்டும்

D. அனைத்தும்


2. சரியானதை தேர்ந்தெடு.

அ. அடியாண்டம் பொதுவாக மங்கையர் கூந்தல் பெரணி அல்லது நடக்கும் பெரணி என அழைக்கப்படுகிறது

ஆ. உலகின் வெப்ப மண்டல மற்றும் மிதவெப்ப மண்டல பகுதிகளில் பரவி காணப்படுகின்றன

A. அ மட்டும் சரி

B. ஆ மட்டும் சரி

C. அ&ஆ இரண்டும் சரி✓

D. அ&ஆ இரண்டும் தவறு


3. மிக உயர்ந்த பசுமைமாறா காடுகள் காணப்படும் தாவர வகை எது?

 A. டெரிடோபைட்டுகள்

 B. பிரையோபைட்டுகள்

 C. ஜிம்னோஸ்பெர்ம்கள்✓

 D. ஆஞ்சியோஸ்பெர்ம்கள்


4. ஜிம்னோஸ்பெர்ம்களில் மகரந்தச்சேர்க்கை எதன் மூலம் நடைபெறுகிறது?

A. காற்றின் மூலம்✓

B. பூச்சிகள் மூலம்

C. பறவைகள் மூலம்

D. நீரின் மூலம்


 5. தவறானது எது?

தொல்லுயிர் பூங்கா     -    மாநிலம்

 1.சிவாலிக்.                    - மத்திய பிரதேசம்

 2.மாண்ட்லா.                 - இமாச்சலப் பிரதேசம்

 3.ராஜ்மஹால் குன்று - ஒடிசா

 4.அரியலூர்.                  - தமிழ்நாடு

A.2 மட்டும்

B.2 மற்றும் 3

C.1, 2 மற்றும் 3✓

D.எதுவும் இல்லை


6. ஒருவித்திலைத் தாவரங்கள் பற்றிய தவறான கூற்று எது?

அ. இலைகளில் இணைப்போக்கு அமைப்பு நரம்பமைப்பு உள்ளது.

ஆ. சல்லிவேர் தொகுப்பு காணப்படுகிறது

இ. இரட்டை குழி உடைய மகரந்ததுகள் காணப்படுகிறது.

 ஈ.  மலர்கள் நான்கங்க அல்லது ஐந்தங்க வகையைச் சார்ந்தது.

A. அ மற்றும் ஆ

B. அ மற்றும் இ

C. அ மற்றும் ஈ

D. இ மற்றும் ஈ✓


7. பவழ வேர்கள் இதில் காணப்படுகின்றன?

 A. கைரா

 B. சைகஸ்✓

 C. லைக்காப்சிடா

 D. பியூனேரியா


8. இவற்றுள் மிகவும் மேம்பாடு அடைந்த தாவரக்குடும்பம் எது?

A. ஆஞ்சியோஸ்பெர்ம்✓

B. டெரிடோ ஃபைட்

C. ஜிம்னோஸ்பெர்ம்

D. பிரையோபைட்


9. பீர்பல் ஸானி தொல் தாவரவியல் நிறுவனம் எங்கு அமைந்துள்ளது?

A. கொல்கத்தா

B. லக்னோ✓

C. மும்பை

D. பாட்னா


 10.தொப்பி செல்கள் காணப்படுவது இதன் தனிச்சிறப்பாகும்?

A. சைக்கஸ்

B. கேரா

C. ஊடோகோனியம்✓

D. லைக்காப்சிடா


11. கல் தாவரங்கள் என பிரபலமாக அறியப்படும் பாசி வகை எது?

A. ஸ்பைரோகைரா

B. கிளாட்டோ ஃபோரா

C. குளோரெல்லா

D. கேரா✓


12. மிகவும் குறைந்த சிற்றினங்கள் கொண்ட தாவர தொகுப்பு எது?

A. ஆஞ்சியோஸ்பெர்ம்

B. ஜிம்னோஸ்பெர்ம்✓

C. டெரிடோ ஃபைட்

D. பிரையோபைட்


13. பனி நிறைந்த மலைகளில் வளர்ந்து பனிக்கு சிவப்பு நிறத்தை தரும் பாசி வகை எது?

A. சர்காஸம்

B. கிரிப்பெனியா

C. டுனாலியல்லா சலைனா

D. கிளாமிடோமோனஸ் நிவாலிஸ்✓


14. பாசிகளை பற்றி படிக்கும் அறிவியல் பிரிவு எவ்வாறு அழைக்கப்படுகிறது?

A. Algology

B. Phycology

C. Michalogy

D. A&B✓


15. பொருத்துக.

அ.அடியாண்டம்.             1.கிளப் மாஸ்

ஆ.சொலானிஜெல்லா 2.ஸ்பைக் மாஸ்.

இ.அசோல்லா.                3.நீர்ப்பெரணிகள்

ஈ. லைக்கோபோடியம்.  4.நடக்கும் பெரணி

A. 4231✓

B. 4213

C. 3214

D. 3124


16. கீழ்க்கண்டவற்றுள் சூப்பர்நோவா நிகழ்வு என அழைக்கப்படுவது எது?

A. ஒரு நட்சத்திரம் சிறிய உருவத்தில் இருந்து பெரிய உருவமாக மாறியது

B. ஒரு நட்சத்திரம் தன் உருவத்திலிருந்து பாதியாக குறைவது

C. ஒரு நட்சத்திரம் மற்றொரு நட்சத்திரனுடன் மோதுவது

D. ஒரு நட்சத்திரம் வெடித்து மரணம் அடைவது✓


17. புவி எத்தனை வெப்பநிலை மண்டலங்களாக பிரிக்கப்பட்டுள்ளது?

A.3✓

B.4

C.5

D.6


18. கீழ்க்கண்ட  எந்த நிகழ்வை வைர மோதிரம் என அழைக்கிறோம்?

A. வளைய சூரிய கிரகணம்

B. அரை சூரியகிரகணம்

C. முழு சூரிய கிரகணம்✓

D. மேற்கண்ட எதுவுமில்லை


19. எகிப்தில் உள்ள பிரமிடுகள் எதன் அடிப்படையில் வடிவமைக்கப்பட்டு இருக்கலாம் என்று குறிப்பிடப்படுகிறது?

 A.கோடை கால நீண்ட பகல் நாள்

 B.குளிர் கால நீண்ட பகல் நாள்

 C.சூரியனின் தோற்றம் நகர்வு

 D.இலையுதிர் கால சம நாள்✓


20. நிலநடுக்கோட்டுப் பகுதி பருத்து காணப்படுவதற்கான காரணம் என்ன?

 A.புவியின் அடர்த்தி

 B.காந்த புல விசை

 C.மையவிலக்கு விசை✓

 D.புவியீர்ப்பு விசை


21. பின்வருவனவற்றுள் சரியான கூற்றை தேர்ந்தெடு.

 1.விண் கற்கள் பூமிக்கு வருவதற்கு முன் விண்வெளி கற்கள் என அழைக்கப்படும்.

 2.முழுவதும் எரியாமல் புவியில் விழும் மிகப்பெரிய விண்கற்களை எரிகற்கள் என அழைக்கிறோம்.

A.1 மட்டும்

B.2 மட்டும்

C.இரண்டும்✓

D.இரண்டும் இல்லை


22. தமக்கென சுற்றுப்பாதை இல்லாமல் சூரியனைச் சுற்றி வரும் வட்ட வடிவ  உருவத்தை----------  என்கிறோம்

 A.குள்ளக் கோள்✓

 B.கோள்கள்

 C.குறுங்கோள்கள்

 D.துணைக்கோள்கள்


23. நமது சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் காற்று அதிகமாக வீசும் கோள் எது?

A.நெப்டியூன்✓

B.யுரேனஸ்

C. பூமி

D.வியாழன்


24. கீழ்க்கண்ட வாயுக்களில் யுரேனஸ் கோளில் காணப்படும் மூன்று முக்கிய வாயுக்களில் இல்லாதது எது?

 A. ஹைட்ரஜன்

 B. நைட்ரஜன்✓

 C. ஹீலியம்

 D. மீத்தேன்


25. சூரிய குடும்பத்தில் உள்ள கோள்களில் நீரைவிட அடர்த்தி குறைவான கோள் எது?

 A. சனி✓

 B. புதன்

 C. செவ்வாய்

 D. யுரேனஸ்


26. கீழ்க்கண்டவற்றுள் பாறைக்கோள் அல்லாதது எது?

 A. வியாழன்✓

 B. செவ்வாய்

 C. பூமி

 D. புதன்


27. A,B,C,D மற்றும் E ஆகிய ஐவரும் ஒரு தெருவில் நடந்து செல்கின்றனர்.D என்பவர் A-க்கு  முன்பாகவும், E என்பவர் B-க்கு அடுத்தும், C என்பவர் A மற்றும் B க்கு இடையிலும் செல்கின்றனர். எனில் நடுவில் இருப்பவர் யார்?

 1. A

 2. C✓

 3. B

 4. D


28. சூரியன் பால்வெளி மண்டலத்தின் எந்த வளைவு பகுதியில் அமைந்துள்ளது?

 A. நோர்மா மற்றும் சிக்னஸ் வளைவு

 B. சகிட் டாரியஸ்✓

 C. பெர்ஸியஸ்

 D. ஸ்கூடம் கர்க்ஸ்


29. திங் வெளிர் தேசிய பூங்கா எங்கு அமைந்துள்ளது?

A. குயின்ஸ்லாந்து

B. நெதர்லாந்து

C. பின்லாந்து

D. ஐஸ்லாந்து✓


30. பிளவு பள்ளத்தாக்கு வழியாக பாயும் நதி எது?

A. கங்கை

B. காவிரி

C. நர்மதா✓

D. பிரம்மபுத்திரா


31. தவறாக பொருந்தியுள்ள இணையைக் கண்டறிக.

A.புவியின் மிக உயர்ந்த பகுதி - மவுண்ட் எவரெஸ்ட்

B.புவியின்  மிகவும்ஆழமான பகுதி - மரியானா அகழி

C. சேன் ஆன்ட்ரியாஸ் பிளவு     - குவியும் புவித்தட்டு எல்லைகள்✓

D.பெனியெப்மண்டலம்       - நிலநடுக்கம் ஏற்படும் பகுதி


32. புவி கரு எதனால் ஆனது?

 A. சிலிக்கா மற்றும் அலுமினியம்

 B. சிலிக்கா மற்றும் மெக்னீசியம்

 C. நிக்கல் மற்றும் இரும்பு✓

 D. நிக்கல் மற்றும் சிலிக்கா


33. ப்யூகா (Pugal valley) பள்ளத்தாக்கு எங்கு அமைந்துள்ளது?

A. ஆஸ்திரேலியா

B. இமாச்சலப் பிரதேசம்

C. மியான்மர்

D. இந்தியா✓



34. பின்வரும் கூற்றுக்களை கருத்தில் கொள்க.

I. உலகிலேயே மிக நீளமான கடலடி மலைத் தொடர் அட்லாண்டிக் மலைத்தொடர் ஆகும்.

II.கண்ட பகுதியில் விலகும் எல்லை இருக்குமானால் கண்டம் இரண்டாக பிரிந்து பிளவு பள்ளத்தாக்கு தோன்றுகிறது

 மேற்கூறியவற்றில் சரியானது எது?

A.I  மட்டும்

B.II மட்டும்

C.இரண்டும்✓

D.இரண்டும் இல்லை


35. பின்வரும் எந்த புவித்தட்டின் நிலைகளில் கடல் அகழிகள் உருவாக்கப்படுகின்றன?

 A. குவியும் புவித்தட்டு எல்லைகள்✓

 B. விலகும் புவித்தட்டு எல்லைகள்

 C. பக்கவாட்டு புவித்தட்டு எல்லைகள்

 D. ஆக்கபூர்வமான புவித்தட்டு எல்லைகள்


36. கீழ்க்கண்ட எந்த அலைகள் திட நிலையில் உள்ள பொருட்களின் வழியே மட்டும் செல்கின்றன?

A. P அலைகள்

B. S அலைகள்✓

C. லோ அலைகள்

D. ரேலே அலைகள்


37. பொருந்தாதது எது

A. எட்னா எரிமலை                - இத்தாலி

B. கொட்டபாக்ஸி எரிமலை -ஈக்வடார்

C. போப்பா எரிமலை.            - கிழக்கு ஆப்பிரிக்கா✓

D. வெசுவியஸ் எரிமலை.      - இத்தாலி


38.  எரிமலை வெடிப்பில் இருந்து வெளிவரும் கீழ்கண்ட எந்த வாயு அமிலமழை ஏற்படவும் காற்று சீர்கேடுகளுக்கும் காரணமாக அமைகிறது?

A.CO

B.CO2

C.SO2✓

D.CH3


39. நார்க் கொண்டம் எந்த தீவு பகுதியில் அமைந்துள்ளது?

A.அந்தமான் மற்றும் நிக்கோபர்✓

B.லட்சத்தீவு

C. மினிகாய் தீவு

D. இலங்கை


40.புவி பரப்பிற்கு ஏறக்குறைய செங்குத்தாக அமைந்து குளிர்ந்து சுவர் போன்ற அமைப்பைக் கொண்டிருக்கும  தீப்பாறை எது?

A.டைக்✓

B.சில்

C.லாப்போலித்

D.லாக்கோலித்


41. தேசிய துறைமுக வாரியம் உருவாக்கப்பட்ட ஆண்டு?

A. 1948

B. 1950✓

C. 1952

D.1965


42. நேருவின் கருத்துப்படி திட்டமிடல் என்பது என்ன?

I. தொழில்மயமாதல்

II. தற்சார்புடைமை

III.  மக்களின் பங்களிப்பு

IV. சேவை சார்ந்தது

A.I மற்றும் II✓

B.I  மட்டும்

C.I II II  இவை மூன்றும்

D.IV  மட்டும்


43. அம்பேத்கர் தொடர்பாக பின்வருவனவற்றில் தவறானது எது?

 A) இவரின் 'பிரிட்டிஷ் இந்தியாவின் மாகாண நிதி பரவலாக்கம்' என்ற ஆய்வுக் கட்டுரை 1921 M.sc பட்டத்திற்கு ஏற்றுக்கொள்ளப்பட்டது.

B) இவரின் "ரூபாயின் பிரச்சனை" என்ற ஆய்வு கட்டுரை 1923 ஆம் ஆண்டு லண்டன் பொருளாதாரப் பள்ளியால் D.Sc பட்டம் வழங்குவதற்காக ஏற்றுக்கொள்ளப்பட்டது.

C) அம்பேத்கர் தனது "பிரிட்டிஷ் இந்தியாவில் ஏகாபத்திய நிதியத்தின் மாகாண பரவலாக்கம்" என்ற புத்தகத்தில் வழங்கிய வழிமுறைகளின்படி ரிசர்வ் வங்கி கருத்தாக்கம் பெற்றது.✓

 D)அம்பேத்கர் கட்டுரைகளில் 'பழங்கால இந்திய வர்த்தகமும்' அடங்கும்.


44.பின்வருபவர்களில் விடுதலைக்கு முன்பும் மற்றும் விடுதலைக்கு பின்பும் இந்திய பொருளாதார அறிஞர்களின் சிறந்த மும்மூர்த்திகள் என பிரம்மானந்தரின் கருத்துப்படி அழைக்கப்பட்டவர்கள் யார்?

I. டி.ஆர் காட்கில்

II. தாதாபாய் நௌரோஜி

III. சி.என் வகில்

IV. வி. கே. ஆர். வி. ராவ்

A. I & II& III

B. I & III & IV✓

C. II & III & IV

D. I & II & III


45. இந்திய பொருளியல் வாழ்வில் என்ன தவறு என்ற நூலின் ஆசிரியர் யார்?

A.அமர்த்தியா சென்

B. ராவ்✓

C. ஜே எம் கின்ஸ்

D. ஜவகர்லால் நேரு


46. கீழ்க்கண்ட எந்த இயக்கத்தின்போது ஜே. சி. குமரப்பா 'யங் இந்தியா' பத்திரிகையில் பணியாற்றிக் கொண்டிருந்தார்?

A. ஒத்துழையாமை இயக்கம்

B.கிலாபத் இயக்கம்

C.ரௌலட் சட்டம்

D.உப்பு சத்தியாக்கிரகம்✓


47. அனைத்திந்திய கிராம தொழில் கழகம் தோற்றுவிக்கப்பட்ட ஆண்டு?

A.1931

B.1934

C.1935✓

D.1942


48. முழு வேலைவாய்ப்பும் பொருளாதார முன்னேற்றமும் யாருடைய ஆய்வுக்கட்டுரை வேலைவாய்ப்பு துறையில் மிகச் சிறந்த ஒன்றாக கருதப்பட்டது?

A. பி ஆர் அம்பேத்கார்

B. ராவ்✓

C. நேரு

D. அமர்த்தியா சென்


49. வாழ்வின் பெரும் ஆதாரமாக திருவள்ளுவர் கருதுவது?

A. இயற்கை

B. மழை✓

C. உழைப்பு

D. உணவு


50. இந்திய கல்விமுறை எத்தனை அடிப்படைகளைக் நிலைகளை கொண்டுள்ளது?

A.5

B.6✓

C.7

D.8


51. எந்த ஆண்டு "மக்கள் தொகை மாறுதலை" குறிக்கும்?

A.1921

B.1951

C.1961

D.2011✓


52.UNECE  என்பதன் விரிவாக்கம்?

A.Unity Nations Economic Commission for Europe

B.Union Nations Economic Commission for Europe

C.United Nationality Economic Commission for Europe

D.United Nations Economic Commission for Europe✓


53. தங்கம் கிடைக்கும் இடங்களில் பொருந்தாதது எது?

A. கோலார்

B. ஹட்டி

C. கர்னூல்✓

D. அனந்தபூர்


54. இந்தியாவிலேயே மதுரை மாவட்டத்திலுள்ள கரடிக்குட்டம் என்னும் ஊரில் கிடைக்கும் அரிய வகை தாது எது?

 A.மாங்கனீசு

 B.வேர்மிகுலைட்

 C.மெக்னீசியம்

 D.மாலிப்டினம்✓


55. பழங்கள் உற்பத்தியில் தமிழகத்தின் நிலை?

 A.மூன்றாவது இடம்✓

 B.இரண்டாவது இடம்

 C.நான்காவது இடம்

 D.ஆறாவது இடம்


56. இந்நாட்டின் பொருளாதாரம் " நிலைத்த,உறுதிவாய்ந்த, சிறந்த எதிர்காலம் கொண்ட பேரியல் பொருளாதார சொர்க்கம்" என குறிப்பிடப் படுகிறது?

A) சீனா

B) ரஷ்யா

C) இந்தியா✓

D) பிரேசில்


57.1951ல் இந்திய மக்கள் தொகை பெருக்கம் வீதம் ____ லிருந்து ____ ஆக குறைந்தது?

A) 1.25 - 1.02%

B) 1.33 - 1.25%✓

C) 13% - 12%

D) 2 - 1.96%


58. சுத்திகரிக்கப்படாத எண்ணெய் எடுக்கப்படும் ருத்ராபூர் எந்த மாநிலத்தில் உள்ளது??

A) குஜராத்

B) கேரளா

C) ஆந்திரா

D) அஸ்ஸாம்✓


59. பசிக்கொடுமையில் இருந்து பெறும் விடுதலையே ஒவ்வொரு மனிதனும் பெறக்கூடிய அடிப்படை சுதந்திரம் என்றவர் ?

A) தாலமஸ்

B) திருவள்ளுவர்✓

C) பெரியார்

D) காந்தி


60. "திட்டமிடுதலின் சாரம் என்பது மனித சக்தி வளங்கள், பணம் இவற்றை சிறந்த வழிகளில் பயன்படுத்துவதை குறிக்கும்" என்றவர்?

A) காந்தி

B) திருவள்ளுவர்

C) நேரு✓

D) அம்பேத்கர்


61. தொழில் நுட்பத் தெரிவு" என்னும் புத்தகத்தை இயற்றியவர்?

A) குமரப்பா

B) ராவ்

C) அம்பேத்கர்

D) அமர்த்தியா சென்✓


62. தமிழ்நாட்டில் உள்ள ஆறுகளின் எண்ணிக்கை?

A) 19

B) 21

C) 17✓

D) 14


63. மக்காச்சோளம் உற்பத்தியில் தமிழகத்தின் இடம்?

A) இரண்டாம்

B) முதலாம்✓

C) நான்காம்

D) மூன்றாம்


64. கூடங்குளத்தில் ஒரு அணு உலையில் உற்பத்தி செய்யப்படும் மின்சாரத்தின் அளவு?

A) 1000 Mw

B) 235 Mw

C) 917 Mw✓

D) 900 Mw


65. சென்னையில் மெட்ரோ ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு?

A) 2017 ஜனவரி

B) 2017 மே✓

C) 2017 ஜூன்

D) 2017 ஏப்ரல்


66. கீழ்க்கண்ட எந்த நூற்றாண்டுவரை சங்ககால பாண்டியர் வரலாறு குறிப்பிடப்படுகிறது?

A. பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டு வரை✓

B. பொ.ஆ.மு. மூன்றாம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. நான்காம் நூற்றாண்டு வரை

C. பொ.ஆ.மு. நான்காம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டு வரை

D. பொ.ஆ.மு. இரண்டாம் நூற்றாண்டு முதல் பொ.ஆ. மூன்றாம் நூற்றாண்டு வரை


67. பல்லவ மன்னன் மூன்றாம் நந்திவர்மனிடம் தோற்ற பாண்டிய மன்னர் யார்?

A. முதலாம் வரகுணன்

B. இரண்டாம் வரகுணன்

C. ஸ்ரீ மாற ஸ்ரீ வல்லபர்✓

D. சடையவர்மன் ஸ்ரீவல்லபன்


68. ஐந்து பாண்டிய குறுநில மன்னர்களை எதிர்த்து போரிட்டு வென்ற சோழ அரசன் யார்?

A. முதலாம் ராஜேந்திரன்

B. ராஜராஜ சோழன்

C. முதலாம் குலோத்துங்கன்✓

D. முதலாம் பராந்தக சோழன்


69. முதலாம் குலோத்துங்கனுடைய அதிகாரத்திற்கு கட்டுப்பட்டு பாண்டிய நாட்டில் ஆட்சியை துவக்கிய சடையவர்மன் ஸ்ரீவல்லபன் அவர்களுக்கு முடிசூட்டு விழா எங்கு நடைபெற்றது?

A. கொற்கை

B. ஸ்ரீரங்கம்

C. கங்கைகொண்ட சோழபுரம்

D. மதுரை✓


70. சேர அரசரான மலைநாட்டுத் தலைவரை அடக்கி தனக்கு கப்பம் செலுத்த வைத்த பாண்டியன்?

A. சடையவர்மன் சுந்தரபாண்டியன்✓

B.  மாறவர்மன் குலசேகரன்

C. சடையவர்மன் ஸ்ரீவல்லபன்

D. முதலாம் வரகுணன்


71. பாண்டியர்கால சமூகத்தில் மர வேலை செய்பவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நிலம் எவ்வாறு அழைக்கப்படுகிறது?

 A. தட்டார் காணி

 B. தச்சர் மானியம்✓

 C. பட்ட விருத்தி

 D. சாலபோகம்


72. சரியான  கூற்றை தேர்ந்தெடு.

 I.இஸ்லாமியர்களை தமிழ்நாட்டுக்குள் முதன்முதலாக வரவழைத்து மாலிக் காபூரின் படையெடுப்பு அல்ல.

 II.ஏழாம் நூற்றாண்டிலேயே தென்னிந்தியாவின் கிழக்கு கடற்கரையில் அரபுக்குடியிருப்புகள் தோன்றிவிட்டன.

A.I மட்டும் சரி✓

B.II மட்டும் சரி

C.I மற்றும் II சரி

D.I  மற்றும்II தவறு


73. பிற்கால பாண்டியர் காலத்தில் கீழ்க்கண்ட எந்த கோயில் நிலங்கள் பாசன வசதி பெற பெண்ணை ஆற்றிலிருந்து வாய்க்கால் அமைக்கப்பட்டது?

A. திருவண்ணாமலை கோயில்✓

B. மதுரை மீனாட்சி அம்மன் கோயில்

C. ஸ்ரீரங்கம் கோவில்

D. திருவரங்கம்


74. பாண்டியர் ஆட்சி காலத்தில் இயற்றப்பட்ட முக்கிய இலக்கிய நூல்களில் பொருந்தாதது எது?

A. திருவிளையாடல் புராணம்✓

B. திருவாசகம்

C. திருமந்திரம்

D. திருப்பாவை


75. வேத சடங்குகளை செய்த சங்க காலத்தைச் சேர்ந்த பாண்டிய அரசர்?

A. சடையவர்மன் சுந்தரபாண்டியன்

B. மாறவர்மன் குலசேகரன்

C. மாறன் ஸ்ரீவல்லபன்

D. பல்யாகசாலை முதுகுடுமிப்பெருவழுதி✓


76. பண்டித சோழன் என்றழைக்கப்படும் சோழ அரசன்?

A. முதலாம் ராஜராஜன்

B. முதலாம் ராஜேந்திரன்✓

C. முதலாம் குலோத்துங்கன்

D. இரண்டாம் ராஜராஜன்


77. சோழ அரசர்கள் அரசராக பட்டம் சூட்டும் விழாவின்போது அவரது பெயருக்கு பின் எந்த சொல்லை  பின்னொட்டாக சேர்க்கும் நடைமுறை இருந்தது?

A. சோழன்

B. தேவன்✓

C. பண்டிதன்

D. வானவன்


78. சோழ அரசர்கள் நிலங்களை வகைப்படுத்தி அளவீடு செய்து அதற்கேற்றவாறு வரிகளை விதித்தனர். இதில் பொருந்தாத சோழ அரசர் யார்?

A. முதலாம் ராஜராஜன்

B. முதலாம் ராஜேந்திரன்✓

C. முதலாம் குலோத்துங்கன்

D. மூன்றாம் குலோத்துங்கன்


79. கீழ்கண்டவற்றுள் தவறானவை தேர்ந்தெடு

 I.வடி என்பது நீர் வடக்கு தெற்காக ஓடுவதாகும்.

 II.வாய்க்கால் என்பது கிழக்கு மேற்காக ஓடுவதாகும்.

A.I மட்டும்

B.II மட்டும்

C.I II இரண்டும்

D. எதுவும் இல்லை✓


80. 'ஜலமய ஜெயஸ்தம்பம்' தொடர்புடைய கோவில் எது?

A. தஞ்சைப் பெருவுடையார் கோயில்

B.  கங்கைகொண்ட சோழபுரம்✓

C. தாராசுரம் கோவில்

D. மாமல்லபுரம் கடற்கரை கோவில்


81. தேவ-கன்னி என்பது?

A. கோயில் கணக்காளர்

B. கோயிரமர்

C. கடவுளின் பிரதிநிதி✓

D. கோயில் மேலாளர்


82.  கீழ்க்கண்ட எந்த கோவிலில் நிருத்தியம், கர்ணம் போன்ற நடன நிலைகள் சிற்ப வடிவில் காட்டப்பட்டுள்ளன?

A. தஞ்சை பெரிய கோவில்✓

B. கங்கைகொண்ட சோழபுரம்

C. ஐராவதீஸ்வரர் கோவில்

C. கழுகுமலை வெட்டுவான் கோவில்


83. சோழர்கால கடல்வழி வணிகர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

 A.அஞ்சு வண்ணத்தார்✓

 B.மணிக்கிராமத்தார்

 C.வளஞ்சியர்

 D.இவற்றில் எதுவுமில்லை


84. யாருடைய அரசு" இராஜகம்பீர ராஜ்யம்" எனப்பட்டது?

A) சதாவாகனர்கள்

B) சம்புவராயர்கள்✓

C) சாளுக்கியர்கள்

D) சோழர்கள்


85. இராஜநாராயணன் சம்புவராயன் எத்தனை ஆண்டுகள் ஆட்சி புரிந்து பின்னர் குமார கம்பணரால் தோற்கடிக்கப்பட்டார்?

A) 30

B) 23

C) 20✓

D) 35


86. எந்த நூற்றாண்டில் கோல்கொண்டா ஒரு சிறந்த வைர தந்தையாக திகழ்ந்தது?

A.14 ஆம்

B.16 ஆம்

C.17 ஆம்✓

D.21 ஆம்


87. பீடாரில் ஒரு மதரஸாவை நிறுவி அங்கு ஒரு பெரிய நூலகத்தை அமைத்தவர்?

A. முதலாம் முகமது

B.  அமோகவர்ஷர்

C. மூன்றாம் முகமது

D. முகமது கவான்✓


88. விஜயநகர அரசு தங்க நாணயங்களில் இடம்பெறாத உருவம் எது?

A. குதிரை✓

B. காளை

C. யானை

D கண்ட பெருண்டா


89. ஹரிஹரனின் முடிசூட்டு விழா நடைபெற்ற ஆண்டு?

A.1345

B.1346✓

C.1347

D.1349


90. அமீர்-இ-ஜும்லா என்பது எப்பணியை குறிப்பதாகும்??

A) வெளியுறவு அமைச்சர்

B) நிதி அமைச்சர்✓

C) நிதித்துறை இணை அமைச்சர்

D) தலைமை நீதிபதி


91. சாளுவ வம்சத்தின் ஆட்சி காலம்??

A) 1455- 1535

B) 1570-1650

C) 1458-1550

D) 1485-1505✓


92. கிருஷ்ண தேவராயர் தன்னுடைய வெற்றி தூணை நிறுவிய இடம்??

A) பீடார்

B) பெட்வா

C) பத்கல்

D) சிம்மாச்சல்✓


93. விஜயநகர அரசு ____க்கு மேற்பட்ட நாயக்குகளாகப் பிரிக்கப்பட்டிருந்தது??

A) 45

B) 20

C) 450

D) 200✓


94. A என்பவர் B யை விட பணக்காரர், C என்பவர் A ஐ விட பணக்காரர், D என்பவர் C ஐ விட பணக்காரர்,E  என்பவர் அனைவரையும் விட பணக்காரர் எனில் நடுவில் உள்ளவர் யார்?

A) A

B) B

C) C✓

D) D


95. பாமினி அரசு சிதைந்த ஆண்டு?

A.1347

B.1509

C.1518✓

D.1565


96 . சோழப் பேரரசில் பல ஊர்களின் தொகுப்பு _____ என அழைக்கப்பட்டது??

A) நகரம்

B) நாடு✓

C) மாநகர்

D) ஊர்


97. "புறவுவரித்திணைக்களம்" என்னும் துறை எதற்கானது?

A) நில அளவை

B) வேளாண்மை

C) நிலவருவாய்✓

D) நகர விரிவாக்கம்


98. எண்ணெய் ஆட்டுபவர்கள் எவ்வாறு அழைக்கப்பட்டனர்?

A) எண்ணெய்யான்

B) உழுரோன்

C) சங்கர பாடியார்✓

D) சக்கர வல்லோன்


99. நாயன்மார்களில் ஒருவரான சுந்தரரின் கதையை சித்திரிக்கும் சுரோவியம்  எங்கு காணப்படுகிறது?

A) கங்கை கொண்ட சோழபுரம்

B) தாராசுரம் கோவில்✓

C) இராஜராஜேஸ்வரம்

D) தஞ்சை பெருவுடையார் கோயில்


100. ____ குழு வெட்டிய ஐநூற்றுவப்போரேரி என்ற பாசன ஏரி ____ உள்ளது ?

A) ஐநூற்றுவர், புதுக்கோட்டை

B) வளஞ்சியர், மானாமதுரை

C) திசை ஆயிரத்து ஐநூற்றுவர், புதுக்கோட்டை

D) வளஞ்சியர், புதுக்கோட்டை✓




Post a Comment

0 Comments