வீடில்லாத கட்டுமான தொழிலாளர்களுக்கு நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகம் -அமைச்சர்..!!
சட்டப்பேரவையில் தொழிலாளர் நலன், திறன் மேம்பாட்டுத் துறை மானியக் கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் சி.வி.கணேசன் பேசுகையில், “கட்டுமான தொழிலாளர் நல வாரியத்தில் பதிவு செய்த வீடு இல்லாத தொழிலாளர்கள் சொந்த வீட்டுமனை வைத்திருந்தால், அவர்கள் வீடு கட்டிக் கொள்வது அல்லது தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் ஏற்கெனவே கட்டப்பட்டுள்ள குடியிருப்பில் ஒதுக்கீடு பெற நிதி உதவி அளிக்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
இந்த செய்தியையும் படிங்க...
BREAKING: STATE GOVERNMENT EMPLOYEES- JANUARY 2022 - DAஉயர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!!
1,000/- வழங்கும் திட்டம் அறிமுகம்:
கட்டுமானம், அமைப்புசாரா ஓட்டுநர், உடல் உழைப்பு தொழிலாளர் சமூக பாதுகாப்பு நலவாரியம் மற்றும் 15 நல வாரியங்களில் பதிவு செய்துள்ள தொழிலாளர்களின் குழந்தைகளில் 6 முதல் 9ஆம் வகுப்பு வரை படிப்பவர்களுக்கு சமூக நலத்திட்ட உதவியாக ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் அறிமுகம் செய்யப்படும்.
உதவித் தொகை அதிகரிக்கப்படும்:
10ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் தேர்ச்சி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் தற்போது வழங்கும் கல்வி உதவித் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 2 ஆயிரத்து 400 ரூபாயாக உயர்த்தப்படும். கட்டுமானத் தொழிலாளர்களின் 11ஆம் வகுப்பு படிக்கும் பெண் குழந்தைகளுக்கான கல்வி உதவித் தொகை ஆயிரம் ரூபாயிலிருந்து 3 ஆயிரம் ரூபாயாக அதிகரிக்கப்படும்.
அதேபோல 12ஆம் வகுப்பு பயிலும் பெண் குழந்தைகள் மற்றும் தேர்ச்சி பெற்ற அனைத்து குழந்தைகளுக்கும் கல்வி உதவித்தொகை 3 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தப்படும். கட்டுமானத் தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர் நல வாரிய தொழிலாளர்கள் குழந்தைகளுக்கு வழங்கப்படும் பட்டப்படிப்புக்கான 4 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்.
கட்டுமான தொழிலாளர் நலவாரிய தொழிலாளர்கள், அமைப்புசாரா ஓட்டுநர் நலவாரிய தொழிலாளர்கள் இயற்கை மரணம் அடைந்தால் அவர்களது குடும்பத்துக்கு வழங்கப்படும் உதவித்தொகை 20 ஆயிரம் ரூபாயிலிருந்து 50 ஆயிரம் ரூபாயாக உயர்த்தி வழங்கப்படும்.
இந்த செய்தியையும் படிங்க...
அமைப்புசாரா ஓட்டுநர் நலவாரிய உறுப்பினர்கள் விபத்துமரணம் அடைந்தால் வழங்கப்படும் உதவித் தொகை 1 லட்சத்தில் இருந்து 2 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். தமிழ்நாடு உடல் உழைப்பு தொழிலாளர்கள் சமூக பாதுகாப்பு மற்றும் 15 நலவாரியங்களின் தொழிலாளர்கள் விபத்து மரணம் அடைந்தால், குடும்பத்துக்கு வழங்கும் உதவித் தொகை 1.25 லட்சம் ரூபாயாக உயர்த்தப்படும். இயற்கை மரணத்துக்கான உதவித் தொகை 30 ஆயிரம் ரூபாயாக உயர்த்தப்படும்" என்றார்.
0 Comments