Join Our Whats app Group Click Below Image

தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியைகளுக்கு நல்லாசிரியர் விருது-குடியரசுத் தலைவர் வழங்கினார்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியைகளுக்கு நல்லாசிரியர் விருது-குடியரசுத் தலைவர் வழங்கினார்..!!

இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஒரு சிறந்த கல்வியியலாளருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5, ஆசிரியர் தினமாக கொண்டாடப்படுகிறது.

இந்நிலையில், ஆசிரியர் தினமான இன்று, புதுமையான கற்பித்தல் முறைகளை மேம்படுத்துவதில் அளித்த பங்களிப்பிற்க்காக நாடு முழுவதும் இருந்து 44 ஆசிரியர்களுக்கு நல்லாசிரியர் விருதுகளை குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் ஞாயிற்றுக்கிழமை வழங்கினார். 

இதில், தமிழகத்தை சேர்ந்த இரு ஆசிரியைகள் அடங்குவர்.

ஈரோடு மாவட்டத்தில் உள்ள மொடக்குறிச்சி அரசு பெண்கள் உயர்நிலை பள்ளி தலைமை ஆசிரியையான லலிதாவிற்கும், திருச்சியில் உள்ள, மணிமண்டபம் பஞ்சாயத்து நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியை ஆஷா தேவியும் நல்லாசிரியர் விருதை பெற்றுக் கொண்டனர்.

ஆசிரியர்களின் தனித்துவமான சிறந்த பங்களிப்பை பாராட்டி அங்கீகாரம் அளிப்பதற்கு நல்லாசிரியர் விருது வழங்கப்படுகிறது. தனது பணியில் அர்ப்பணிப்பின் மூலம், பள்ளிக் கல்வியின் தரத்தை மேம்படுத்துவது மட்டுமல்லாமல், மாணவர்களின் வாழ்க்கையை வளப்படுத்தியவர்களைக் கவுரவிப்பதற்காகவும் ஆசிரியர் தினத்தன்று தேசிய அளவிலான விருதுகள் வழங்கப்படுகின்றன.

ஒவ்வொரு குழந்தை இடத்திலும், தனித்துவமான திறமைகள் பொதிந்துள்ளன என குறிப்பிட்ட குடியரசுத் தலைவர் ராம் நாத் கோவிந்த், ஆசிரியர்கள் மாணவர்களின் பல்வேறு தேவைகளையும் நலன்களையும் மனதில் வைத்து அனைத்து வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும் என்றார்.

"ஒவ்வொரு மாணவருக்கும் வெவ்வேறு திறன், திறமை மற்றும் உளவியல், சமூக அமைப்பு மற்றும் பின்னணி உள்ளது என்பதை ஆசிரியர்கள் மனதில் கொள்ள வேண்டும். எனவே, அவர்கள் குழந்தையின் தேவைகள், ஆர்வங்கள் மற்றும் திறன்களுக்கு ஏற்ப ஒவ்வொரு குழந்தையின் வளர்ச்சியிலும் கவனம் செலுத்த வேண்டும்," என்று அவர் கூறினார். 

விருது வழங்கும் விழா, காணொலி காட்சி வாயிலாக நடந்தது.

"மாணவர்களிடம் படிப்பு மீதான ஆர்வத்தை வளர்ப்பது ஆசிரியர்களின் கடமையாகும். தனது பங்களிப்பின் மூலம் ஆசிரியர்கள் தங்கள் மாணவர்களின் எதிர்காலத்தை பிரகாசமாக்க முடியும்," என்று அவர் மேலும் கூறினார்.

நல்லாசிரியர் விருதுகள் வழங்குவது முதன் முதலில் 1958 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இளைஞர்களின் மனதையும் எதிர்காலத்தையும் வடிவமைப்பதில் ஆசிரியர்களின் சிறப்பையும் அர்ப்பணிப்பையும் அங்கீகரிப்பதற்காக வழங்கப்படும் இந்த நல்லாசிரியர் விருது, 60 ஆம் ஆண்டுகளில், இந்தியாவின் முன்னாள் குடியரசுத் தலைவரும் ஒரு சிறந்த கல்வியியலாளருமான சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளான செப்டம்பர் 5ஆம் அதேதி வழங்கப்படும் பழக்கம் தொடங்கியது.

தொடக்க மற்றும் நடுநிலைப் பள்ளிகளில் பணிபுரியும் திறமையான ஆசிரியர்களுக்கு அங்கீகாரம் வழங்குவதற்காக இந்த விருது வழங்கப்படுகிறது. மெய்நிகர் நிகழ்ச்சியாக நடந்த விருது வழங்கும் விழாவின் போது 44 விருது பெற்ற ஆசிரியர்கள் அனைவரின் ஆவணப்படமும் காண்பிக்கப்பட்டது.

Post a Comment

0 Comments