ஊரடங்கை நீட்டிப்பது தொடர்பாக உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் ஆலோசனை..!!
தமிழ்நாட்டில் ஊரடங்கை நீட்டிப்பது குறித்து உயர் அதிகாரிகளுடன் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை நடத்தினார்.
தமிழ்நாட்டில் கொரோனா பரவலைக் கட்டுப்படுத்தும் விதமாக ஊரடங்கு அமலில் உள்ளது. இந்த தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு வரும் 15ஆம் தேதியுடன் நிறைவடைகிறது. கடந்த முறை வழங்கப்பட்ட தளர்வில், திரையரங்குகள் திறக்க அனுமதி, பள்ளி, கல்லூரிகள் திறக்க அனுமதி உள்ளிட்ட பல்வேறு அறிவிப்புகள் வெளியானது.
இந்த செய்தியையும் படிங்க...
1-8-ம் வகுப்பு மாணவர்களுக்கு பள்ளிகள் திறப்பு எப்போது..?? செப்டம்பர் 14-ம் தேதி ஆலோசனை..!!
இந்நிலையில், சென்னை தலைமைச் செயலகத்தில், ஊரடங்கு நீட்டிப்பில் கட்டுப்பாடுகள் விதிக்கலாமா? அல்லது கூடுதல் தளர்வுகளை வழங்கலாமா என்பது குறித்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற இந்த ஆலோசனை கூட்டத்தில், தலைமை செயலாளர் இறையன்பு மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
1 முதல் 8ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு வகுப்புகள் தொடங்குவது உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது. பள்ளிகளில் கொரோனா பரவல் அதிகரித்துள்ள நிலையில், அது குறித்தும் ஆலோசனை நடத்தப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
0 Comments