"விரைவில் நகை கடன் தள்ளுபடியை முதல்வர் விரைவில் அறிவிப்பார்"- அமைச்சர்..!!
கூட்டுறவு சங்கங்களில் வாங்கப்பட்ட நகை கடன் தள்ளுபடி குறித்து முதல்வர் விரைவில் அறிவிப்பார் என்று, சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் தெரிவித்துள்ளார்.
விழுப்புரம் மாவட்டம் செஞ்சியை அடுத்த செத்தவரை கிராமத்தில், திமுக சார்பில் நடைபெற்ற நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில் சிறுபான்மை நலத்துறை அமைச்சர் செஞ்சி மஸ்தான் இன்று கலந்துக்கொண்டிருந்தார். அப்போது பேசிய அவர், 'சில கூட்டுறவு சங்கங்களில் ஒரே நபருக்கு பலவிதமான கடன்களும் முறைகேடும் நடந்துள்ளது. இதனை பரிசீலனை செய்து வருகிறோம். அரசு பரிசீலனை செய்த உடன், இன்னும் மூன்று அல்லது நான்கு நாட்களில் நகை கடன் தள்ளுபடியை முதல்வர் அறிவிப்பார்' என்றார்.
இந்த செய்தியையும் படிங்க....
மேலும் பேசுகையில், 'விவசாய கடன் தள்ளுபடி குறித்து முதல்வர் சொல்லிவிட்டார். ஆனால் சில கூட்டுறவு சங்கங்களில் நில முறைகேடுகள் உள்ளதால் விவசாய கடன்களும் பரிசீலனை செய்யப்பட்டு தள்ளுபடி செய்யப்படும். கூட்டுறவு சங்கங்களில் கோயில் நிலங்கள், கல்லூரி நிலங்கள், பள்ளிக்கான இடங்கள், தாசில்தார் அலுவலகம் உட்பட பல இடங்களில் கூட சர்வே நம்பர் எடுத்து முறைகேடு நடந்துள்ளது. இதனை ஆய்வு செய்த பின்னர், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். பின்பு அதற்கான அறிவிப்பை விரைவில் வெளியிட உள்ளோம்' என்றார்.
0 Comments