Join Our Whats app Group Click Below Image

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளில் அவரது பேரன் கேசவ் தேசிராஜா காலமானார்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

டாக்டர் ராதாகிருஷ்ணனின் பிறந்த நாளில் அவரது பேரன் கேசவ் தேசிராஜா காலமானார்..!!

முன்னாள் ஜனாதிபதி டாக்டர் சர்வபள்ளி ராதாகிருஷ்ணனின் பிறந்தநாளான இன்று அவரது பேரனும், முன்னாள் மத்திய சுகாதார துறை செயலளருமான கேசவ் தேசிராஜா உடல்நலக் குறைவால் சென்னையில் காலமானார்!

சென்னை ஆழ்வார் பேட்டையில் உள்ள தனியார் மருத்துவமனையில் இதய கோளாறு காரணமாக, சிகிச்சை பெற்று வந்த கேசவ் தேசிராஜா சிகிச்சை பலனளிக்காமல் காலமானார். அவருக்கு வயது 66.

கேசவ் தேசிராஜா, கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் பயின்று, இந்திய குடிமையியல் தேர்வில் தேர்ச்சி பெற்றார். மத்திய சுகாதார துறை செயலாளராக பதவி வகித்துள்ள கேசவ் தேசிராஜா, மனநல சுகாதார சட்டம் கொண்டு வருவதற்கு முக்கிய காரணமாக இருந்தவர்.

சென்னை ராயப்பேட்டையில் வசித்து வந்த கேசவ் தேசிராஜா, இதய கோளாறு காரணமாக தனியார் மருத்துவமனையில் சிகிச்சைகாக அனுமதிக்கப்பட்டு, சிகிச்சை பலனின்றி இன்று மரணமடைந்தார்.

Post a Comment

0 Comments