அரசு ஊழியர்களுக்கு குடும்ப பாதுகாப்பு நிதி வழங்குவதில் புதிய சலுகைகள்- தமிழக அரசு..!!
தமிழகத்தில் ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றது முதல் பல அதிரடி நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார். அவற்றில் பல செயல்பாடுகள் மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளன. அந்த வகையில் தற்போது பணிக்காலத்தில் உயிரிழக்கும் அரசு ஊழியர்களின் குடும்பத்துக்கு வழங்கப்படும் குடும்ப பாதுகாப்பு நிதியை உயர்த்தி அரசாணை வெளியிட்டுள்ளார்.
இந்த செய்தியையும் படிங்க...
3% இட ஒதுக்கீட்டின் கீழ் சிலம்பம் விளையாட்டை சேர்க்க நடவடிக்கை-விளையாட்டுத்துறை தகவல்..!!
அதன்படி ஏற்கனவே ரூ.3 லட்சமாக இருந்த குடும்ப பாதுகாப்பு நிதி தற்போது ரூ.5 லட்சமாக உயர்த்தி அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.இந்த உத்தரவின் படி இதுவரை குடும்ப பாதுகாப்பு நிதியாக மாதம் ரூ60 பிடித்தம் செய்யப்பட்டு வந்தது.
தற்போது அந்தத் தொகை ரூ110ஆக உயர்த்தி பிடித்தம் செய்யப்படும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த நடைமுறை செப்டம்பர் மாதத்தில் இருந்தே செயல்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments