'மூத்த குடிமக்கள் வைப்புத்தொகை வட்டி குறைப்பு-மத்திய அரசு பரீசிலிக்கும்படி அறிவுறுத்தல்..!!
மூத்த குடிமக்களின் வைப்புத் தொகைக்கான வட்டி குறைக்கப்பட்டதை எதிர்த்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க இயலாது எனத் தெரிவித்த சென்னை உயர் நீதிமன்றம், முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனை மத்திய அரசு பரீசிலிக்கும்படி அறிவுறுத்தியது.
இந்த செய்தியையும் படிங்க...
PF (பிஎஃப்) விதிகளில் இந்த நிதியாண்டு முதல் புதிய மாற்றம் செய்துள்ளது- மத்திய அரசு..!!
மூத்த குடிமக்கள் முதலீடு செய்யும் வைப்புத்தொகைக்கான வட்டியைக் குறைத்ததை எதிர்த்து வழக்கறிஞர் கார்த்திகா அசோக் பொது நல வழக்கு தொடர்ந்திருந்தார்.
அந்த மனுவில், கொரோனாவுக்கு முன் மூத்த குடிமக்களின் வைப்புத் தொகைகளுக்கு 8.5 முதல் 9 சதவீதம் வட்டி வழங்கப்பட்டு வந்ததாகவும், கொரோனாவுக்கு பின் இந்த வட்டித்தொகை 7 சதவீதமாகக் குறைக்கப்பட்டுள்ளதாகவும் கூறியுள்ளார்.
இந்த வழக்கு தலைமை நீதிபதி சஞ்ஜிப் பானர்ஜி மற்றும் நீதிபதி ஆதிகேசவலு அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்த போது, எந்த வருமானமும் இல்லாத மூத்த குடிமக்கள், இந்த டிபாசிட்கள் மூலம் கிடைக்கும் மாத வட்டியை மட்டுமே நம்பி வாழ்வதாக மனுதாரர் வாதிட்டார்.
இதையடுத்து, மூத்த குடிமக்கள் நலன்கள் பாதுகாக்கப்பட வேண்டும் எனத் தெரிவித்த நீதிபதிகள், மூத்த குடிமக்கள் டிபாசிட்களுக்கு எவ்வளவு வட்டி வழங்க வேண்டும் என்பது மத்திய அரசின் கொள்கை முடிவு என்பதால், இந்த வழக்கில் எந்த உத்தரவும் பிறப்பிக்க முடியாது எனக்கூறி, வழக்கை முடித்து வைத்தனர்.
இந்த செய்தியையும் படிங்க...
Post office scheme:ஆண் குழந்தைகளுக்காக அஞ்சல் துறையில் செல்வ மகன் சேமிப்பு திட்டம்..!!
அதேசமயம், இந்த முதலீடுகளின் வட்டியை மட்டும் நம்பியிருக்கும் மூத்த குடிமக்களின் நலனைக் கருத்தில் கொண்டு மனுதாரரின் கோரிக்கையைப் பரிசீலிக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீதிபதிகள் அறிவுறுத்தினர்.
0 Comments