Join Our Whats app Group Click Below Image

உடல் எடையை குறைக்க, தொப்பை கொழுப்பை குறைக்க-எலுமிச்சை வெல்லம் பானம்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 உடல் எடையை குறைக்க, தொப்பை கொழுப்பை குறைக்க-எலுமிச்சை வெல்லம் பானம்..!!

 உடல் எடையை குறைக்க:

உடல் எடையை கூட்டுவது மிகவும் எளிதானது, ஆனால் அதை குறைப்பது கடினம். ஊரடங்கின் போது நம்மில் பலர் உடல் எடையை அதிகரித்துள்ளோம். குறிப்பாக ஏராளமானோர் தொப்பை கொழுப்பை குறைக்க முடியாமல் திணறுகின்றனர். உடல் எடையை குறைப்பதற்கான சிறந்த சவால்கள் ஆரோக்கியமான உணவு மற்றும் தவறாமல் உடற்பயிற்சி செய்வது என்பது நாம் அனைவரும் அறிந்திருந்தாலும், சில நேரங்களில் சில விரைவான மற்றும் எளிதான டிப்ஸ்கள் உங்கள் எடை இழப்பு திட்டத்திற்கு மிகவும் தேவையான ஊக்கத்தை அளிக்கும்.

பானக கல்பனா:

பானகம்/பானம் என்பது இனிப்பு, புளிப்புச் சுவை மிகுந்தும், காரம் குறைவாகவும் இருக்கும் ஒரு பானம். ஆயுர்வேதத்தில் இது, 'பானக கல்பனா' என்று சொல்லப்படுகிறது. "கல்பனா" என்றால் தயார் செய்தல் என்று பொருள். ஆயுர்வேதத்தில் உடனடி நிவாரணம் தரும் மருந்து தயாரிப்பு முறைகளில் இதுவும் ஒன்று. அதாவது, சில மருந்துகளைச் சாப்பிட்டால் முதலில் ஜீரணமாகும். அதன்பிறகு ரத்தத்தில் கலந்து மெட்டபாலிசத்தை அதிகரித்து பின், அதன் வேலையை மெதுவாகத் தொடங்கும். இதற்கு அதிக நேரம் எடுத்துக்கொள்ளும். ஆனால் பானம் என்பது சாப்பிட்ட உடனே விரைவாக அதன் பணியைச் செய்யும் மருந்தாகும். இதனால்தான் இதை குடித்ததும் உடனடி ஆற்றல் கிடைக்கிறது. எனவே, இதை மருத்துவத்தில் உள்ள குளுக்கோஸுக்கு முன்னோடியாகச் சொல்லாம்.

வெல்லம் எலுமிச்சை பானம் :

கரும்புச் சாறிலிருந்து தயாரிக்கப்படும் வெல்லத்தில் சத்துகள் மிகுந்து காணப்படுகிறது. ஆகையால் சர்கரையைவிட இது ஆரோக்கியமானது என்கிறார்கள் முன்னோர்கள். கரும்புச்சாறின் கசடுகள் நீங்க வடிகட்டி அதை பல மணி நேரம் சுண்டவைத்து அதிலிருக்கும் கசடுகளும் நீக்கப்பட்டு பெரிய அச்சுகளில் ஊற்றி கெட்டியானதும் அவை வெல்லமாக வருகிறது. உடல் பருமன், கொலஸ்ட்ரால், அதிக எடை உள்ளவர்கள், நீரிழிவு வியாதியால் அவதிப்படுப‌வர்கள் தினமும் ஒரு எலுமிச்சைச்சாறு அருந்தலாம். இது வயிற்றுவலி, வயிற்று உப்புசம், நெஞ்சு எரிச்சல், கண் வலி ஆகியவற்றை சரியாக்கும் ஒப்பற்ற சாறு, மற்றும் கிருமி நாசினியாகவும் செயல்படுகிறது.

இதில் பொட்டாசியமும் உள்ளது. எலுமிச்சை பற்றி நம்மில் பலருக்கும் தெரியும். உடலில் உள்ள தேவையற்ற கொழுப்புகளை எரிப்பதற்கு எலுமிச்சை அதிக நன்மை அளிக்கும். அதனால் இந்த பானம் உங்களுக்கு நன்மையை தரும். இந்த பானத்தில் வெல்லம் மற்றும் எலுமிச்சை என்ற இரண்டு முதன்மை பொருட்கள் உள்ளன. இரண்டு பொருட்களும் ஒவ்வொரு இந்திய சமையலறையிலும் எளிதாகவே பயன்படுத்தப்படும், மேலும் அவை ஒரு ஆரோக்கியமான கலவையாகும்.

எலுமிச்சை வெல்லம் பானம் எவ்வாறு செயல்படுகிறது :

வெல்லம் வளர்சிதை மாற்றத்தை அதிகரிக்க உதவுகிறது, இது விரைவாக உடல் எடையை குறைக்க உதவுகிறது. எடை இழப்பில் மிக இன்றியமையாத பங்கைக் கொண்டிருக்கும் ஊட்டச்சத்துக்களும், புரதம் மற்றும் நார்ச்சத்துக்களும் வெல்லத்தில் உள்ளன. எலுமிச்சை சாறு உடலில் உள்ள நச்சுத்தன்மையை குறைக்க உதவுகிறது அதோடு கூட எடை இழப்பை ஊக்குவிக்கிறது. இதில் பாலிபினால் ஆன்டிஆக்ஸிடன்ட்கள் உள்ளன, இது நம் எடையை திறம்பட நிர்வகிக்க உதவுகிறது. இந்த ஆக்ஸிஜனேற்றிகள் உடலில் கொழுப்பு சேருவதை நிறுத்தி எல்.டி.எல் கொழுப்பைக் குறைக்கும். வெல்லம் மற்றும் எலுமிச்சை கலந்த பானம் உங்கள் உடலில் தேவையற்ற கொழுப்புகளையும் அதிக தசைகளையும் குறைக்கும்.

பானம் செய்வது எப்படி ..?

ஒரு கிளாஸில் மிதமான தண்ணீரை எடுத்து அதில் ஒரு டீஸ்பூன் வெல்லத்தை சேர்க்கவும். இப்போது இதை நன்றாக கலந்து இதனுடன் ஒரு டீஸ்பூன் எலுமிச்சை சாறு சேர்த்து, மீண்டும் கலக்கவும், இப்போது உங்கள் பானம் தயாராக உள்ளது. எடை இழப்புக்கு வெறும் வயிற்றில் ஒவ்வொரு நாளும் இந்த பானத்தை நீங்கள் குடிக்கலாம். இதனுடன் நீங்கள் பெரும்பாலும் வெல்லம் மற்றும் எலுமிச்சை சாறை உங்களது உணவில் அடிக்கடி சேர்ப்பதன் மூலம் எடை இழப்பை குறைப்பதற்கான நல்ல வாய்ப்பை அளிக்கும். உதாரணத்திற்கு லெமன் ஜூஸ் செய்யும்போது சர்க்கரைக்கு பதிலாக சிறிது உப்பை சேர்த்து கொள்ளலாம். லெமன் ரைஸ் செய்து சாப்பிடலாம்.

காபி டீ குடிப்பதை குறைத்துக் கொண்டு அதற்கு மாற்றாக இந்த வெல்லம் மற்றும் எலுமிச்சை பானத்தை குடிப்பது உங்களுக்கு மேலும் நன்மையை அளிக்கும். சமீப காலமாகத்தான் பலராலும் சர்க்கரை பரவலாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. அதனால்தான் இன்று உலகமே உடல் எடை அதிகரிப்பு உட்பட பல நோயால் அவதிப்பட்டு வருகிறது. அந்த வகையில் சர்க்கரைக்கு சரியான மாற்றாக வெல்லத்தை பயன்படுத்துவது நன்மையே அளிக்கும். வெல்லம் எலுமிச்சையின் கலவை உங்களுக்கு உடல் எடை குறைப்பு மட்டுமல்லாது பல்வேறு ஆரோக்கிய நன்மைகளையும் அளிக்கும்.


Post a Comment

0 Comments