Join Our Whats app Group Click Below Image

தமிழக அரசு அதிரடி அரசாணை; தமிழக அரசு பணியில் தனி இடஒதுக்கீடு..!!

Welcome to Our Tamil Crowd Website...

 தமிழக அரசு அதிரடி அரசாணை; தமிழக அரசு பணியில் தனி இடஒதுக்கீடு..!!\

 தமிழ் வழியில் கல்வி-அரசு பணியில் தனி இடஒதுக்கீடு:

தமிழக அரசு பிறப்பித்துள்ள அரசாணையில், "தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்திற்கான 2020 - ஆம் ஆண்டு திருத்தச் சட்டம் ஆகியவை சட்டப்படி செல்லத்தக்கவை என மாண்பமை நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளதுடன், அச்சட்டங்களை நடைமுறைப்படுத்துவது தொடர்பான ஆணைகளையும் பிறப்பித்துள்ளது.

முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் :

சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை வழங்கிய மேற்படி தீர்ப்பினை செயல்படுத்துவது குறித்து தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் கருத்தினை பெற்று அரசு விரிவாக ஆய்வு செய்து, அதன்படி, 2010 - ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்திற்கான 2020 ஆம் ஆண்டு திருத்தச் சட்டம் ஆகியவற்றை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக, பின்வரும் வழிகாட்டு நெறிமுறைகளை வெளியிட்ட முடிவு மேற்கொண்டு அவ்வாறே ஆணையிடுகிறது:

முன்னுரிமை வழங்கப்பட தகுதியுடையவர்கள் :

ஒன்றாம் வகுப்பு முதல், தொடர்புடைய பணி விதிகளில் நேரடி நியமன முறைக்கென வரையறுக்கப்பட்ட கல்வித் தகுதி வரையில் (10 | 12 - ஆம் வகுப்புகள், பட்டயம், இளங்கலை | முதுகலைப் பட்டங்கள்) முழுவதுமாக தமிழ்வழியில் கல்வி பயின்றவர்கள் மட்டுமே, 2010- ஆம் ஆண்டு தமிழ்நாடு தமிழ் வழியில் கல்வி பயின்றவர்களை அரசின் கீழ்வரும் பணிகளில் முன்னுரிமையின் அடிப்படையில் பணி நியமனம் செய்தல் சட்டம் மற்றும் அச்சட்டத்திற்கான 2020 - ஆம் ஆண்டு திருத்தச் சட்டத்தின் கீழ் முன்னுரிமை வழங்கப்பட தகுதியுடையவர்கள் ஆவர்:

முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.:

1) இதர மொழிகளை பயிற்று மொழியாக (Medium of Instruction) கொண்டு பயின்று, தேர்வுகளை மட்டும் தமிழில் எழுதியவர்கள், இம்முன்னுரிமை ஒதுக்கீட்டிற்கு தகுதியுடையவர்கள் அல்லர்.

2) 1 முதல் 9 - ஆம் வகுப்பு வரை பள்ளிக்கு செல்லாமல் நேரடியாக 10 - ஆம் வகுப்பு தேர்வினை எழுதி தேர்ச்சி பெற்ற தனித் தேர்வர்கள் மற்றும் பிற மாநிலங்களில், தமிழ் அல்லாமல் இதர மொழியினை பயிற்று மொழியாக கொண்டு பயின்று , பின்பு இம்மாநிலத்தில் நேரடியாகச் சேரும் வகுப்பிலிருந்து பள்ளி இறுதி வகுப்புகள் வரை தமிழ் வழியில் பயின்றவர்கள் இம்முன்னுரிமைக்கு தகுதியுடையவர்கள் அல்லர்.

உறுதி செய்தல்:

கல்வித் தகுதி சான்றிதழ், மாற்றுச் சான்றிதழ் (Transfer Certificate) மற்றும் மதிப்பெண் பட்டியல் ஆகியவற்றின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை சம்பந்தப்பட்ட தெரிவு முகமைகள்/ நியமன அலுவலர்கள் (Recruiting Agencies | Appointing Authorities) உறுதி செய்து கொள்ள வேண்டும்.

விண்ணப்பதாரர்களால் சமர்ப்பிக்கப்படும், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களின் உண்மைத் தன்மையினை சம்பந்தப்பட்ட பள்ளி மற்றும் கல்லூரிகள் மூலம் பணியாளர் தெரிவு முகமைகள் நியமன அலுவலர்கள் (Recruiting Agencies | Appointing Authorities) உறுதி செய்து கொள்ள வேண்டும்.

தேர்வர்கள் மேற்குறிப்பிட்ட வழிமுறைகளின் மூலம் தமிழ் வழியில் கல்வி பயின்றவர்கள் என்பதை உறுதி செய்ய இயலாத நிலையில், தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை, இணைப்புகள் 1 மற்றும் பல் உள்ள படிவங்களில் சம்பந்தப்பட்ட கல்வி நிறுவனங்களிடமிருந்து பெற்று விண்ணப்பிக்க வேண்டும்.

பள்ளிகள் மூடப்பட்ட நிகழ்வுகளில், சம்பந்தப்பட்ட மாவட்ட கல்வி அலுவலர்/முதன்மைக் கல்வி அலுவலர்| உரிய அலுவலரிடமிருந்து தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களை தேர்வர்கள் பெற்று சமர்ப்பிக்க வேண்டும்.

தொடக்க நிலை (5 ஆம் வகுப்பு), உயர்நிலை (10 - ஆம் வகுப்பு), மேல்நிலை வகுப்பு (12 - ஆம் வகுப்பு), பட்டயம் (Diploma), இளங்கலை பட்டம் மற்றும் முதுகலை பட்டம் ஆகிய கல்வித் தகுதி சான்றிதழ்கள் மற்றும் மாற்றுச் சான்றிதழ்களில் (Transfer Certificate) மாணவர்களின் பயிற்று மொழி (தமிழ் / ஆங்கிலம் / இதா மொழிகள்) கட்டாயம் குறிப்பிடப்படும். தேவையான வழிகாட்டு நெறிமுறைகள் பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகளால் வெளியிடப்படும்.

தமிழ் வழியில் கல்வி பயின்றதற்கான சான்றிதழ்களில், மாணவர்களின் பெயர், பயின்ற பள்ளி/கல்லூரி/ கல்வி நிறுவனங்களின் பெயர், முகவரி, வகுப்புகள், சான்றிதழ் வழங்கிய அதிகாரி ஆகிய விவரங்கள் அடங்கிய விரைவு தகவல் குறியீட்டினை (QR code) இடம்பெறச் செய்வதுடன், அச்சான்றிதழை இசேவை மையங்கள் மூலம் வழங்குவதற்கு பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகள் உரிய ஆணைகளை வெளியிடும்.

தமிழ் இலக்கியத்தில் கல்வித் தகுதி பெற்றவர்களை மட்டுமே பள்ளி மற்றும் கல்லூரிகளில் தமிழ் பாடத்திற்கான ஆசிரியர்களாக நியமிக்க வேண்டும் மற்றும் தமிழ் பாடத்திலும் மாறுபட்ட வேறு ஒரு பாடத்திலும் (Cross Major Subject Degrees in Tamil) பட்டம் பெற்றவர்களை தமிழ் ஆசிரியர்களாக நியமனம் செய்யக் கூடாது என்பதற்கான திருத்தங்களை மேற்கொள்வது தொடர்பாக பள்ளிக் கல்வி மற்றும் உயர் கல்வித் துறைகள் நடவடிக்கை மேற்கொள்ளும்.

மேற்படி சட்டத்தில் வழிவகை செய்யப்பட்டுள்ள விழுக்காடு முன்னுரிமை ஒதுக்கீடானது, நேரடி பணி நியமனத்திற்கான ஒவ்வொரு தெரிவு நிலையிலும் (முதல்நிலைத் தேர்வு, முதன்மைத் தேர்வு, நேர்முகத் தேர்வு மற்றும் இதர நிலைகள்) பதவி வாரியாக பின்பற்றப்பட வேண்டும்" என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments