Join Our Whats app Group Click Below Image

9 மாவட்ட (5 பொது, 4 தனி ) ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

9 மாவட்ட (5 பொது, 4 தனி ) ஊரக உள்ளாட்சி தேர்தலுக்கான இட ஒதுக்கீடு பட்டியல் வெளியீடு..!!

தமிழ்நாட்டில் அண்மையில் பிரிக்கப்பட்ட மாவட்டங்கள் மற்றும் அவற்றின் தாய் மாவட்டங்கள் என 9 மாவட்டங்களில் விரைவில் ஊரக உள்ளாட்சி தேர்தல் நடைபெற உள்ளது.

இந்த செய்தியையும் படிங்க...

கல்வி ஆண்டு தொடங்கும் 6 மாதத்திற்கு முன்பே மடிக்கணினி வழங்கும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் : தமிழக அரசு..!! 

இதையொட்டி 9 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கு தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளை தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையம் தீவிரமாக மேற்கொண்டு வருகிறது.

அதன்படி வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்ப்பு, முகவரி மாற்றம் போன்ற பணிகள் நடைபெற்றன. கடந்த 31-ந்தேதி வாக்காளர் பட்டியலும் வெளியிடப்பட்டது.

இந்நிலையில் ஊரக உள்ளாட்சி தேர்தல் தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளுடன் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் இன்று ஆலோசனை நடத்தினார்.

சென்னை கோயம்பேட்டில் உள்ள தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணைய அலுவலகத்தில் மதியம் 12 மணிக்கு நடைபெற்ற இந்த கூட்டத்தில் தி.மு.க, அ.தி.மு.க உள்ளிட்ட அங்கீகரிக்கப்பட்ட 11 அரசியல் கட்சிகள் கலந்து கொண்டன.

இந்நிலையில், எந்தெந்தப் பதவிகள், கிராம ஊராட்சிகள், ஊராட்சி ஒன்றியங்கள், மாவட்ட ஊராட்சிகள் யார் யாருக்கு ஒதுக்கப்படும் என்று விரிவான அட்டவணையை வெளியிட்டது மாநில தேர்தல் ஆணையம்.

இந்த செய்தியையும் படிங்க...

BREAKING: STATE GOVERNMENT EMPLOYEES-  JANUARY 2022 - DAஉயர்வு; முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிவிப்பு..!! 

9 மாவட்ட ஊரக உள்ளாட்சி தேர்தலில் மாவட்ட ஊராட்சி தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், கிராம ஊராட்சி தலைவர் உள்ளிட்ட பதவிகளுக்கான இடஇதுக்கீடு பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

மாவட்ட ஊராட்சி தலைவர் பதவிக்கான இட ஒதுக்கீடு விவரம் வருமாறு:

பொதுப்பிரிவு - நெல்லை, வேலூர், விழுப்புரம், காஞ்சிபுரம், திருப்பத்தூர்

பொது (பெண்கள்) - தென்காசி, ராணிபேட்டை

எஸ்.சி (பெண்கள் ) - செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி

அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளின் பிரதிநிதிகளுடனான ஆலோசனைக் கூட்டத்தில், இட ஒதுக்கீடு பட்டியலை வெளியிட வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டிருந்த நிலையில் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments