Join Our Whats app Group Click Below Image

ரூ.24,000 சம்பளம்:தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டசங்கத்தில் வேலை-2021..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 ரூ.24,000 சம்பளம்:தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டசங்கத்தில் வேலை-2021..!!

திண்டுக்கல் மாவட்டத்தில் தேசிய குழந்தைத் தொழிலாளர் திட்டசங்கத்தில் காலியாக உள்ள திட்ட இயக்குனர் பணியிடத்தை நிரப்பிட விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திண்டுக்கல் மாவட்டம் தேசிய, குழந்தை தொழிலாளர் திட்ட சங்கத்தில் காலியாக உள்ள திட்ட இயக்குனர் பணியிடத்தை நிரப்பிட திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. திட்ட இயக்குநர் பணியிடத்தை நிரப்ப திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவரால் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.

திட்ட இயக்குனர் பணி நியமனத்திற்கு கல்வித்தகுதி/ வயது ,வரம்பு மற்றும் மற்றைய தகுதிகள் கீழ்காணும் படி நிர்ணயம் செய்யப்படுகின்றது.

கல்வித் தகுதி : எம்.பி.ஏ சோசியல் ஒர்க் / எம்.ஏ சோசியல் சயின்ஸ்

வயது வரம்பு : 25 முதல் 45 வரை

முன் அனுபவம்: 

தனிச்சையாக திட்டத்தை கையாளும் திறன்

சமூக வளர்ச்சித் திட்டங்கள் பற்றிய ஈடுபாடு

மதிப்பூதியம்: மத்திய அரசால் நிர்ணயம் செய்யப்பட்ட ரூ.24,000 மதிப்பூதியம் மாதம்தோறும் வழங்கப்படும்.

பாலினம் : ஆண் / பெண் இருபாலரும் விண்ணப்பிக்கலாம்.

தலைமை இடம்: தேர்வு செய்யப்படுபவர்கள் தலைமை இடமான மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் பணியாற்ற வேண்டும். பதவி தற்காலிகமானது

திட்ட இயக்குனர் பணி இடத்திற்கான விண்ணப்பபடிவம் திண்டுக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலகம், முதல் தளத்தில் அறை எண் 161 தேசிய குழந்தை தொழிலாளர் திட்டச் சங்கம் அலுவலகத்தில் 20.09.2021 முற்பகல் வரை அலுவலக நாட்களில் நேரில் பெற்றுக்கொள்ளலாம்.

பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை 20.09.2021ம் பிற்பகல் 5.45மணி வரை மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதைவியாளர் (கணக்குகள் ) 

அறை எண் : 186 

மாவட்ட ஆட்சியரகம் 

திண்டுக்கல் 

என்ற முகவரிக்கு நேரிலோ அல்லது தபால் மூலமாகவோ அனுப்பி வைத்திட தெரிவிக்கப்படுகின்றது. 

காலதாமதமாக பெறப்படும் விண்ணப்பங்கள் ஏற்றுக்கொள்ளப்பட மாட்டாது.

என மாவட்ட ஆட்சித் தலைவர் முனைவர் ச.விசாகன் தெரிவித்துள்ளார்.



Post a Comment

0 Comments