Join Our Whats app Group Click Below Image

NEET தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் - நீட்டிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website...

 NEET  தேர்வுக்கு விண்ணப்பிப்பதற்கான கால அவகாசம் - நீட்டிப்பு..!!

தேசிய தகுதித் தேர்வு:

மருத்துவ படிப்பில் சேருவதற்கு மாணவ மாணவியர்களுக்கு NEET  தேர்வு எனப்படும் தேசிய தகுதித் தேர்வு நடத்தப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டுக்கான இளநிலை மருத்துவ படிப்புகளுக்கு நாடு முழுவதும் செப்டம்பர் 12-ஆம் தேதி முதல் NEET தேர்வு நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. இந்த தேர்வுக்கு ஜூலை 13ஆம் தேதி முதல் விண்ணப்பிக்கலாம் என்று தெரிவித்திருந்தது.

இந்த செய்தியையும் படிங்க...

 GATE தேர்வுக்கான தேதிகள் அறிவிப்பு- மத்திய அரசு அதிகாரபூர்வமாக அறிவிப்பு..!!

 NEET தேர்வுக்கு விண்ணப்பிக்கும் கால அவகாசம் நீட்டிப்பு:

NEET  தேர்வு எழுத விருப்பமுள்ள மாணவர்கள் ஆகஸ்ட் 6-ஆம் தேதி வரை இந்த இணையத்தின் மூலம் பதிவு செய்து கொள்ள அவகாசம் வழங்கப்பட்டிருந்தது. இந்நிலையில் தேர்வுக்கு விண்ணப்பிக்க ஆகஸ்ட் 10-ஆம் தேதி வரை தேசிய தேர்வு முகமை நீட்டித்து உத்தரவிட்டுள்ளது. 

விண்ணப்பங்களை சரிசெய்து கொள்ள அவகாசம்:

மேலும், விண்ணப்பங்களை சரிசெய்து கொள்ள வரும் 11-ம் தேதி முதல் 14-ம் தேதி வரை அவகாசம் வழங்கப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. ((இது குறித்த முழுமையான விவரங்களை அறிய http://neet.nta.nic.in என்ற இணையதளத்தை அணுகலாம் என மாணவர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments