ITI, Diploma; துணை ராணுவப் படையில் வேலை வாய்ப்பு அறிவிப்பு-2021..!!
இந்திய உள்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்படும் துணை ராணுவப் படையில் (எஸ்எஸ்பி) துணை ஆய்வாளர் பணிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.338/RC/SSB/Combined Advt./Sub-Inspectors/2020
பணி: Sub-Inspector(Pioneer)
காலியிடங்கள்: 18
வயதுவரமபு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: பொறியியல் துறையில் சிவில் பிரிவில் டிப்ளமோ முடித்திருக்க வேண்டும்.
பணி: Sub-Inspector(Draughtsman)
காலியிடங்கள்: 03
வயதுவரம்பு: 18 முதல் 30க்குள் இருக்க வேண்டும். தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ஐடிஐ முடித்து ஒரு ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்
பணி: Sub-Inspector(communication)
காலியிடங்கள்: 56
வயதுவரம்பு: 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: எலக்ட்ரானிக்ஸ் மற்றும் கம்யூனிகேசன், கணினி அறிவியல், இயற்பியல், தகவல் தொடர்பியல் போன்ற ஏதாவதொறு பிரிவில் இளநிலைப் பட்டம் பெற்றிருக்க வேண்டும்.
பணி: Sub-Inspector (Staff Nurse)
காலியிடங்கள்: 39
வயதுவரம்பு: 21 முதல் 30க்குள் இருக்க வேண்டும்.
தகுதி: அறிவியல் பாடப்பிரிவில் பிளஸ் 2 தேர்ச்சியுடன் 3 ஆண்டு பொது நர்சிங் பிரிவில் டிப்ளமோ முடித்து 2 ஆண்டு பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.
சம்பளம்: மாதம் ரூ.35,400 - 1,12,400
விண்ணப்பக் கட்டணம்: ரூ.200. இதனை ஆன்லைனில் செலுத்தலாம். எஸ்சி, எஸ்டி மற்றும் மாற்றுத்திறனாளிகள், பெண்கள் பிரிவினர் கட்டணம் செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.
விண்ணப்பிக்கும் முறை: www.ssbrectt.gov.in என்ற அதிகாரப்பூர்வ இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பிப்பதற்கான கடைசி தேதி: 07.08.2021
0 Comments