ITI; கூடங்குளம் அணுமின் கழகத்தில் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு -2021..!!
இந்திய அணுசக்தி கழகத்தின் கீழ் தமிழகத்தின் திருநெல்வேலி மாவட்டம் கூடங்குளத்தில் உள்ள அணுமின் கழகத்தில் ஒரு ஆண்டு தொழில்பழகுநர் பயிற்சிக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு ஐடிஐ படித்தவர்களிடம் விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
விளம்பர எண்.NPCIL/KKNPP/HRM/02/2021
பயிற்சி: Trade Apprentices
மொத்த காலியிடங்கள்: 173
துறைவாரியான காலியிடங்கள் விவரம்:
1. Fitter - 50
2. Mechinist - 25
3. Welder (Gas & Electric) - 08
4. Electrician - 40
5. Electronic Mechanic - 20
6. Pump Operator Cum Mechanic - 05
7.Instrument Mechanic - 20
8. Mechanic (Chiller Plant) Industrial Air Conditioning - 05
தகுதி: 10th Pass; சம்மந்தப் பிரிவில் ITI முடித்திருக்க வேண்டும்.
வயதுவரம்பு: 16.08.2021 தேதியின்படி 18 முதல் 24 வயதிற்குள் இருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: ITI-இல் பெற்றுள்ள மதிப்பெண்கள் அடிப்படையில் பயிற்சிக்கு தேர்வு செய்யப்படுவர்.
பயிற்சி அளிக்கப்படும் இடம்: கூடங்குளம் அணுமின் கழகம்.
பயிற்சி காலம்: 1 ஆண்டு
உதவித்தொகை: சம்மந்தப்பட்ட பிரிவில் 2 ஆண்டு ஐடிஐ முடித்தவர்களுக்கு மாதம் ரூ.8.,855-ம், ஒரு ஆண்டு ஐடிஐ முடித்தவர்களுக்கு ரூ.7,700-ம் வழங்கப்படும்.
விண்ணப்பிக்கும் முறை: www.apprenticeshipindia.org என்ற இணையதளத்தின் மூலம் ஆன்லைனில் விண்ணப்பிக்க வேண்டும்.
ஆன்லைனில் விண்ணப்பித்த பின்னர் அதனை பிரிண்ட் அவுட் எடுத்து அதனுடன் தேவையான சான்றிதழ்களின் நகல்களில் சுய சான்றொப்பம் செய்து அதனை கீழ்வரும் அஞ்சல் முகவரிக்கு விரைவு அல்லது பதிவு அஞ்சலில் அனுப்ப வேண்டும்.
ஆன்லைன் விண்ணப்ப பிரிண்ட் அவுட்டை அனுப்ப வேண்டிய முகவரி:
The Senior Manager(HRM),
HR-Recruitment Section,
Kudankulam Nuclear Power Project,
Kudankulam(PO),
Radhapuram Taluk,
Tirunelveli District, - 627106.
0 Comments