Join Our Whats app Group Click Below Image

ICICI BANK: ரூ. 1 கோடி வரை டிஜிட்டல் முறையில், (INSTA EDUCATION LOAN) கடன் வழங்குகிறது..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 ICICI BANK: ரூ. 1 கோடி வரை டிஜிட்டல் முறையில், (INSTA EDUCATION LOAN) கடன் வழங்குகிறது..!!


இன்ஸ்டான்ட் எஜூகேஷன் லோன்(INSTA EDUCATION LOAN):

ICICI. வங்கி  கல்விக்காக ரூ. 1 கோடி வரை டிஜிட்டல் முறையில், கடனை வழங்குகிறது. இந்த வாய்ப்பை பயன்படுத்திக்கொண்டு பண சிக்கலால் படிப்பை இழந்தவர்கள் படிப்பை தொடருங்கள். 

இன்ஸ்டான்ட் எஜூகேஷன் லோன்(INSTA EDUCATION LOAN) என்பது ப்ரீ அப்ரூவ்ட் லோனாக பார்க்கப்படுகிறது. எனவே நீங்கள் ஆவணங்களை சமர்பிக்க அதிகப்படியான பேப்பர் வொர்க்கினை செய்ய வேண்டியதில்லை. 

தகுதி:

வெளிநாடுகளில் உள்ள பல்கலைக்கழகங்களில் அல்லது உள்நாட்டு பல்கலைக்கழகங்களில் உயர் படிப்புக்காக விண்ணப்பித்து பணம் இன்றி சிரமப்படுவோர் விண்ணப்பிக்கலாம். இந்த கடன் பிணையமின்றி (Without Collateral) வழங்கப்படும்.ICICI வங்கி வாடிக்கையாளர்கள் வங்கியில் முன் ஒப்புதல் அளிக்கப்பட வேண்டும்.இணைய வசதி மூலம் நீங்கள் கல்வி கடனுக்கு விண்ணப்பம் அனுப்ப முடியும்.

9.25 சதவிகிதம் வட்டி.இது அதிகமாக இருக்கின்ற போதிலும் வட்டியானது ரெப்போ புள்ளிகளிடன் இணைக்கப்பட்டுள்ளது. இதனால் ரெப்போ விகிதம் குறையும் போது வட்டி விகிதமும் குறைவதற்கான வாய்ப்புகள் அதிகம் உள்ளது. 

ரூ. 1 கோடி வரை கடன் பெற்றுக் கொள்ள இயலும்:

உள்நாட்டு மற்றும் வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் படிக்க மாணவர்கள் குறைந்தபட்சமாக ரூ. 1 லட்சம் வரை கடன் பெற்றுக் கொள்ள இயலும். அதிகபட்சமாக ரூ. 1 கோடி வரை வெளிநாட்டு கல்வி நிறுவனங்களில் பயிலவும், ரூ. 50 லட்சம் உள்நாட்டில் கல்வி கற்கவும் கடனாக பெற்றுக் கொள்ள முடியும். கூடுதல் விவரங்களுக்கு அருகில் இருக்கு ICICI வங்கிக்கு சென்று விசாரிக்கலாம் அல்லது ஆன்லைனிலும் தெரிந்துக்கொள்ளலாம்.

Post a Comment

0 Comments