EMIS இணையதளத்தில் பதிவேற்ற வேண்டும்; அரசு பள்ளிகளில் ஆசிரியரல்லாத காலிப்பணியிடங்களை உருவாக்க - அரசாணை வெளியீடு..!!
2020-21 பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கை:
தமிழகத்தில் 2020-21 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மானிய கோரிக்கைகளின் போது வெளியான அறிவிப்பின் படி அரசு உயர்நிலை / மேல்நிலைப் பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளர்/ பதிவறை எழுத்தர் ஆகிய பணியிடங்களை அனுமதிக்காத பள்ளிகளுக்கு பணியிடங்களை உருவாக்க அரசாணை வெளியிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
பணியிடங்களை உருவாக்க அரசாணை :
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் அலை தாக்கம் காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் 2020-21 ஆம் ஆண்டு பள்ளிக் கல்வித்துறை மானியக் கோரிக்கைகள் போது அறிவிக்கப்பட்ட அறிவிப்பின் படி அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் உதவியாளர் / இளநிலை உதவியாளர்/ பதிவறை எழுத்தர் ஆகிய பணியிடங்களை அனுமதிக்காத பள்ளிகளுக்கு பணியிடங்களை உருவாக்க அரசாணை பள்ளிக்கல்வித்துறை இணை இயக்குனர் வெளியிட்டுள்ளார்.
அதன்படி 2019-2020 ஆம் ஆண்டில் உள்ள மாணவர்களின் எண்ணிக்கை மற்றும் ஆசிரியரல்லாத பணியிடங்கள் அனுமதிக்கப்பட்ட பணியிடங்களின் எண்ணிக்கையின் அடிப்படையில் உத்தேசமாக நிர்ணயம் செய்யப்பட்டது.
EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும்:
தற்போது 2021-2020 ஆம் கல்வியாண்டில் மேற்காணும் அரசாணையில் தெரிவித்துள்ளவாறு அரசு உயர்நிலை/ மேல்நிலைப் பள்ளிகளில் பணியாளர்கள் நிர்ணயம் செய்வது குறித்தான பணிகள் EMIS இணையதளம் வாயிலாக மேற்கொள்ளப்பட வேண்டியுள்ளதால் கீழ் குறிப்பிட்டுள்ள விவரங்களை EMIS இணையதளத்தில் பதிவேற்றம் செய்ய வேண்டும் என முதன்மை கல்வி அலுவலர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இவ்வாறு அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
தமிழகத்தில் தேசிய ஊரக வேலைவாய்ப்பு திட்டத்தில் -ஊதியம் ரூ.300/- ஆக உயர்வு? அமைச்சர் தகவல்!!
விவரங்கள்:
1. தற்போது பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவர்களின் எண்ணிக்கை
2. அனுமதிக்கப்பட்ட உதவியாளர்/ இளநிலை உதவியாளர்/ பதிவறை எழுத்தர் பணியிடங்கள்
3. பணிபுரியும் ஆசிரியரல்லாத பணியாளர்களின் விவரங்கள்
0 Comments