அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளிலும் 7.5 % இடஒதுக்கீடு : தமிழக அமைச்சரவை ஒப்புதல்..!!
அரசுப் பள்ளி மாணவர்களுக்கு ஏனைய தொழில்படிப்புகளிலும் 7.5 சதவீத இடஒதுக்கீடு - தமிழக அமைச்சரவை ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
இந்த செய்தியையும் படிங்க...
அரசு ஊழியர்கள் ஓய்வு வயது 58 ஆக குறைப்பு..?? முதல்வர் முக்கிய ஆலோசனை..??
சென்னையில் உள்ள தலைமைச் செயலகத்தில் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் 04-082021 அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது.
இக்கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்களின் விவரம் பின்வருமாறு :-
நடப்பாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை, வரும் 13-8-2021 (வெள்ளிக்கிழமை) அன்று தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில் தாக்கல் செய்யலாம் எனத் தீர்மானிக்கப்பட்டது.
வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை:
அதோடு, திராவிட முன்னேற்றக் கழகம் ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை, தமிழ்நாடு சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படுமென்று ஏற்கெனவே தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டிருந்தவாறு, வேளாண்மைத் துறைக்கென தனி நிதிநிலை அறிக்கை நடப்புக் கூட்டத் தொடரிலேயே தாக்கல் செய்ய முடிவு செய்யப்பட்டது.
டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. த. முருகேசன் அறிக்கை:
கடந்த ஆண்டுகளில் பொறியியல், வேளாண்மை, கால்நடை, மீன்வளம், சட்டம் போன்ற தொழிற்கல்வி படிப்புகளில் அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களின் சேர்க்கை விகிதம் குறைவாக இருந்த காரணத்தால், அரசுப் பள்ளி மாணவர்கள் தொழிற்கல்வி பயிலுவதற்குத் தடையாக உள்ள காரணிகள் என்னவென்று ஆய்வு செய்வதற்கும், அவர்களின் சேர்க்கை விகிதத்தை உயர்த்துவதற்கு எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகளைக் கண்டறிந்து, உரிய தீர்வுகளை, பரிந்துரைகளைச் செய்திடவும் ஓய்வு பெற்ற மாண்பமை டெல்லி உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி திரு. த. முருகேசன் அவர்கள் தலைமையில் ஆணையம் அமைக்கப்பட்டு, அவ்வாணையத்தின் அறிக்கை பெறப்பட்டது.
இந்த செய்தியையும் படிங்க...
நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் :
அந்த ஆணையத்தின் பரிந்துரைகளை ஏற்று, அதனைச் செயல்படுத்தும் விதமாக, மருத்துவக் கல்வி மாணவர் சேர்க்கையில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்கியதைப்போன்றே, அரசுப் பள்ளிகளில் பயின்ற மாணவர்களுக்கு ஏனைய தொழிற் கல்விப் படிப்புகளில் 7.5 சதவிகிதம் ஒதுக்கீடு வழங்க வகை செய்யும் சட்டமுன்வடிவினை நடப்புச் சட்டமன்றக் கூட்டத் தொடரிலேயே அறிமுகம் செய்வதென்றும் தீர்மானிக்கப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
0 Comments