Join Our Whats app Group Click Below Image

ரூ.1,70,000/-வரை சம்பளம்;Oil India Limited நிறுவனத்தில் புதிய காலிப்பணியிட அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

ரூ.1,70,000/-வரை சம்பளம்;Oil India Limited நிறுவனத்தில் புதிய காலிப்பணியிட அறிவிப்பு..!! 

ஆயில் இந்தியா லிமிடெட் (Oil India Limited) (OIL) நிலத்தடி பெட்ரோலியப் பொருட்களை அகழ்ந்து எடுக்கும் இந்திய அரசின் இரண்டாவது பெரிய பொதுத்துறை நிறுவனம் ஆகும்.ஆயில் இந்தியா நிறுவனம், இயற்கை எரிவாயு, பெட்ரோலியப் பொருட்கள் கிடைக்கும் இடங்களை அறிந்து அகழ்வது, கச்சா எண்ணெயை சுத்திகரிப்பது, பெட்ரோலியப் பொருட்கள் மற்றும் திரவ பெட்ரோலிய வாயுவை உற்பத்தி செய்தல் இதன் முக்கியப் பணியாகும்.

மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்படும் ஆயில் இந்தியா லிமிடெட்(OIL) நிறுவனத்தில் புதிய காலிப்பணியிட அறிவிப்பு ஒன்று வெளியாகி உள்ளது. அதில் Consultant பணிக்கு காலிப்பணியிடம் இருப்பதாக அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. விருப்பமும், தகுதியும் உடையவர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி விண்ணப்பிக்கலாம்.

நிறுவனம்:ஆயில் இந்தியா லிமிடெட் நிறுவனம்

பணியின் பெயர்:Consultant

காலிப்பணியிடங்கள்:Various

தேர்வு செய்யப்படும் முறை:Personal Interaction முறையில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்படுவர்.

வயது:09.09.2021 தேதியில் அதிகபட்சம் 65 வயதிற்கு மிகாமல் உள்ளவர்களாக இருக்க வேண்டும்.

விண்ணப்பிக்க கடைசி தேதி:10.08.2021 - 09.09.2021

கல்வி தகுதி:

பதிவாளர்கள் ஏதேனும் ஒரு பொதுத்துறை நிறுவனங்களில் CGM/ED போன்ற பதவிகளில் பணியாற்றி ஓய்வு பெற்றவராக இருக்க வேண்டும்.

அனுபவம்:

IT சம்பத்தப்பட்ட பணிகளில் குறைந்தபட்சம் 15 ஆண்டுகள் வரை முன் அனுபவம் கொண்டிருக்க வேண்டியது கட்டாயமானதாகும்.

சம்பளம்:குறைந்தபட்சம் ரூ.1,43,000/- முதல் அதிகபட்சம் ரூ.1,70,000/- வரை

அதிகாரபூர்வ வலைத்தளம்: https://www.oil-india.com/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://www.oil-india.com/Document/Career/NOTIFICATION_consultant_10.08.2021.pdf

Post a Comment

0 Comments