Join Our Whats app Group Click Below Image

இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம்(RTE) 25 % ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 இலவச கட்டாயக் கல்வி உரிமை சட்டம்(RTE)  25 % ஒதுக்கீடு: தனியார் பள்ளிகளில் சேர்வதற்கு நாளை முதல் விண்ணப்பிக்கலாம்..!!

கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ்,தனியார் பள்ளிகளில் வறுமைக் கோடுக்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகளுக்கான 25 விழுக்காடு ஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்களுக்கு (JULY 5) முதல் விண்ணப்பிக்கலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.

நடப்பு கல்வியாண்டில் குழந்தைகளுக்கான இலவச கட்டாய கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் தனியார் பள்ளிகளில் மாணவர் சேர்க்கைக்கான அரசாணையை பள்ளிக்கல்வித்துறை செயலாளர் காகர்லா உஷா வெளியிட்டுள்ளார்.

 இந்த செய்தியையும் படிங்க...

 "இதையெல்லாம் செய்தாலே கொரோனா நம்மை அண்டாது" - முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்..!!

அதனைத் தாெடர்ந்து குழந்தைகளுக்கான இலவச மற்றும் கட்டயாக் கல்வி உரிமைச் சட்ட மாநில முதன்மைத் தொடர்பு அலுவலரும், மெட்ரிக்குலேசன் பள்ளிகள் இயக்குனருமான கருப்பசாமி கூறியதாவது,:

தமிழகத்தில் உள்ள 3696 மெட்ரிக்குலேசன் பள்ளிகள் உள்ளிட்ட நர்சரி பிரைமரி பள்ளிகளையும் சேர்த்து 8 ஆயிரத்திற்கும் மேற்பட்டப் பள்ளிகளில் , 1 லட்சத்து 13 ஆயிரத்து 400 இடங்கள் நிரப்பப்பட உள்ளது. 

குழந்தைகளுக்கான இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டம் 2009 இன் படி, சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் பொருளாதாரத்தில் பின் தங்கியவர்கள், வறுமை கோட்டிற்கு கீழ் உள்ளவர்களின் குழந்தைகளை 25 விழுக்காடு இடங்களில் சேர்க்க வேண்டுமென 2013ஆம் ஆண்டு அரசு உத்தரவிட்டு,2020-21 ம் கல்வியாண்டு வரையில் சேர்க்கப்பட்டுள்ளனர்.

 மேலும் தற்போது கொரோனா வைரஸ் தொற்றின் காரணமாக சிறுபான்மையற்ற தனியார் பள்ளிகளில் மாணவர்களை ஆன்-லைன் மூலம் விண்ணப்பங்களை பெற்று,கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்றி நுழைவு வகுப்புகளில் (LKG அல்லது 1 ம் வகுப்பு) 2021-22 கல்வி ஆண்டில் மாணவர்கள் சேர்க்கை நடத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், 25 சதவீத இட ஒதுக்கீட்டில் குழந்தைகளை சேர்க்க, மாணவர்களின் பெற்றோர்கள் https://rte.tnschools.gov.in/ என்ற இணையதளத்தில் ஜூலை 5 ஆம் தேதி முதல் ஆகஸ்ட் 3 ஆம் தேதி வரை நுழைவு நிலை வகுப்புகளில் சேர்க்க ONLINE மூலம் விண்ணப்பிக்கலாம்.

விண்ணப்பம் செய்யும் மாணவர்களின் இருப்பிடத்திற்கும், பள்ளிக்கும் இடையான தூரம் 1 கிலோ மீட்டருக்குள் இருக்க வேண்டும். 

பெற்றோர்கள்:

மாணவரின் புகைப்படம், 

பிறப்பு சான்றிதழ்,

 ஆதார் அல்லது குடும்ப அட்டை, 

பொருளாதாரத்தில் பின்தங்கிய வகுப்பினருக்கான வருமான சான்றிதழ்,

 சாதி சான்றிதழ் , 

சிறப்பு பிரிவினர் எனில் அதற்கான சான்றிதழ் ஆகியவற்றை பதிவேற்றம் செய்ய வேண்டும்

 என்றும் அவர் கூறியுள்ளார்.

மாணவர்களின் பெற்றோர்கள் விண்ணப்பம் செய்வதற்கு கல்வித்துறை அலுவலகங்களிலும் , பள்ளிகளிலும் வசதிகள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. அங்குச் சென்று ONLINE  மூலம் பதிவு செய்துக் கொள்ளலாம் என்று குறிப்பிட்டுள்ள அவர், இது தொடர்பகா பள்ளிகளிலும், கல்வித்துறை அலுவலகங்களிலும் விளம்பரப்பலகையும் வைக்கப்பட்டுள்ளதாக விளக்கமளித்தார்.

 இந்த செய்தியையும் படிங்க...

 எச்சரிக்கை:கொரோனா 3ஆவது அலை: அக்டோபா்-நவம்பரில் உச்சத்தில் இருக்கும்..!! 

மாவட்ட கல்வி அதிகாரியிடம் ஒப்படைக்க வேண்டும்:

விண்ணப்பித்த மாணவர்களில் தகுதியான மாணவர்களின் விபரங்களை பள்ளிகள் அவர்களின் அறிவிப்புப் பலகையிலும், பள்ளிக்கல்வித்துறையின் இணையதளத்திலும் ஆகஸ்ட் 9ஆம் தேதி வெளியிட வேண்டும் என்றும் பள்ளியில் உள்ள இடங்களுக்கு மேல் மாணவர்கள் விண்ணப்பித்து இருந்தால் ஆகஸ்ட் 10-ஆம் தேதி குலுக்கல் முறையில் தேர்வு செய்ய வேண்டும் என்றும் அறிவுறுத்தியுள்ள அவர், பள்ளிகளில் உள்ள இடங்களைவிட குறைவாக விண்ணப்பித்து இருந்தால் அவர்களைத் தேர்வு செய்து மாணவர் சேர்க்கை நடத்த வேண்டும்.இலவச கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தின் கீழ் மாணவர்கள் சேர்க்கப்பட்ட விபரங்களை ஆகஸ்ட் 14ஆம் தேதி மாவட்ட கல்வி அதிகாரியிடம் தனியார் பள்ளிகள் ஒப்படைக்க வேண்டும் என தெரிவித்தார்.


Post a Comment

0 Comments