JULY -5: தமிழகம் முழுவதும் பேருந்து சேவை.!!
தமிழகம் முழுவதும் தற்போது கொரோனா நோய்த்தொற்று பரவல் படிப்படியாக குறைந்து நாளொன்றுக்கு நான்காயிரம் பாதிப்பு என்ற அளவிற்கு வந்துள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் போடப்பட்ட ஊரடங்கில் படிப்படியாக பல்வேறு தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகின்றன.
இந்த செய்தியையும் படிங்க...
வழிபாட்டுத்தலங்கள் JULY -5 திறப்பு-இதற்கெல்லாம் தடை: பக்தர்களுக்கு அறிவுறுத்தல்..!!
இந்த நிலையில்,(JULY 5) முதல் தமிழகம் முழுவதும் ஒரே மாதிரியான ஊரடங்கு தளர்வுகளை அறிவித்து தமிழக முதலமைச்சர் மு.க ஸ்டாலின் அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
அதன்படி, தமிழகம் முழுவதும் மாவட்டங்களுக்கு இடையே பொது போக்குவரத்துக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. தற்போது வரை தமிழகத்தின் 27 மாவட்டங்களுக்கு மட்டுமே பேருந்து போக்குவரத்து சேவை அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கோவை,
ஈரோடு,
நீலகிரி,
திருப்பூர்
உள்ளிட்ட 11 மாவட்டங்களை சேர்த்து தமிழகம் முழுவதும் பேருந்து சேவை தொடங்கப்பட உள்ளது. பேருந்து சேவை தொடங்க உள்ள நிலையில், கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை முழுமையாக கடைப்பிடிக்க பேருந்தின் ஓட்டுனர், நடத்துனர்களுக்கு அறிவுரை வழங்கப்பட்டுள்ளது.
- 50 சதவீத இருக்கைகளில் மட்டுமே பயணிகளை அனுமதிக்க வேண்டும் என்றும்,
- குளிர்சாதன வசதியுடைய பேருந்துகளை, குளிர்சாதன வசதி இல்லாமல் இயக்கவும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
- பேருந்து நிலையங்களில் அதிகமாக கூட்டம் கூட வாய்ப்பு உள்ளதால், நோய்த்தொற்று பரவல் அதிகம் ஏற்பட்டு விடாமல் தடுப்பதற்காக அனைத்துப் பேருந்து நிலையங்களிலும் விழிப்புணர்வு பிரச்சாரங்களை மேற்கொள்வதற்கு போக்குவரத்து அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர்.
- மேலும், பேருந்து நிலையங்களில் பயணிகள் முக கவசம் அணிந்து உள்ளார்களா என்பதை கண்டறியவும், ஆய்வு செய்யவும் குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன.
- இந்த குழுவினர் பேருந்தின் பயணத்தின் போதும், பேருந்து நிலையங்களிலும் அவ்வப்போது ஆய்வு செய்து முகக் கவசம் உள்ளிட்ட கொரோனா வழிகாட்டு நெறிமுறைகளை கண்காணித்து, விதிமுறைகளை பின்பற்றாதவர்களுக்கு அபராதம் விதிக்கவும் முடிவு செய்துள்ளனர்.
எனவே பொதுமக்கள் முகக்கவசம் அணிந்து வெளியில் செல்வதையும், பேருந்தில் பயணம் செய்வதையும் தவறாமல் பின்பற்றி, கொரோனா பரவலை தடுக்க தமிழக அரசுக்கு ஒத்துழைப்பு தர வேண்டும்.
0 Comments