Join Our Whats app Group Click Below Image

JOB NEWS:பல்வேறு வங்கிகளில் 5830 காலிப்பணியிடங்கள் -2021..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 JOB NEWS:பல்வேறு வங்கிகளில் 5830 காலிப்பணியிடங்கள் -2021..!!

IBPS கிளர்க் முதல்நிலைத் தேர்வுகள் வருகின்ற ஆகஸ்ட் 28, 29 மற்றும் செப்டம்பர் 4 ஆகிய தேதிகளில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. பொதுத்துறை வங்கிகளில் கிளர்க் பணியிடங்களுக்கான ஆட்சேர்ப்பு மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசம் வாரியாக செய்யப்படுவதால், ஒரு விண்ணப்பதாரர், ஒரே ஒரு மாநிலத்திற்கு மட்டுமே விண்ணப்பிக்க முடியும்.

எந்த மாநிலத்திற்கு விண்ணப்பிக்க விரும்புகிறீர்களோ அந்த மாநிலத்தின் வட்டார மொழியில் பேசவும், எழுதவும், படிக்கவும் தெரிந்தவர்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். மேலும் நீங்கள் விண்ணப்பிக்கும்போது, தேர்வு செய்த மாநிலத்தில் உள்ள தேர்வு மையங்களே உங்களுக்கு தேர்வு எழுதுவதற்காக வழங்கப்படும்.

நிறுவனம்:Institute of Banking Personnel Selection

பணி: IBPS Clerk

காலிப்பணியிடங்கள்:5,830

தமிழ்நாட்டில் மட்டும் 268 காலிப்பணியிடங்கள் உள்ளன.

தேர்வுகள் அனைத்தும் ஆன்லைன் எழுத்து தேர்வுகளாக மட்டுமே நடைபெறும்.

வயது:

Minimum: 20 years Maximum: 28 years

விண்ணப்பிக்க ஆரம்ப தேதி:12.07.2021

விண்ணப்பிக்க கடைசி தேதி:01.08.2021

கல்வி தகுதி:

அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் பட்டப்படிப்பை முடித்திருக்க வேண்டும்.

கணினி இயக்க தெரிந்திருக்க வேண்டும். கணினி தொடர்பாக டிப்ளமோ, டிகிரி அல்லது சான்றிதழ் படிப்பு அவசியம்.

இந்த ஆண்டு பங்கேற்கும் வங்கிகள்:

  • பாங்க் ஆப் பரோடா, 
  • பாங்க் ஆப் இந்தியா, 
  • பாங்க் ஆப் மகாராஷ்டிரா, 
  • கனரா வங்கி, 
  • சென்ட்ரல் பாங்க் ஆப் இந்தியா, 
  • இந்தியன் வங்கி, 
  • இந்தியன் ஓவர்ஸீஸ் வங்கி, 
  • பஞ்சாப் நேஷனல் வங்கி, 
  • பஞ்சாப் & சிந்து வங்கி, 
  • யூகோ வங்கி மற்றும் யூனியன் பாங்க் ஆப் இந்தியா

விண்ணப்ப கட்டணம்:Others - Rs. ரூ.850 -

SC/ST/PWD/Women - 175

அதிகாரபூர்வ வலைத்தளம்: https://ibps.in/

மேலும் விவரங்களை தெரிந்து கொள்ள அதிகாரபூர்வ அறிவிப்பை காண: https://ibpsonline.ibps.in/crpcl11jun21/

Post a Comment

0 Comments