Join Our Whats app Group Click Below Image

இருதயக் கோளாறுகள் :(HEART FAILURE); FUNCTION OF HEART; SYMPTOMS OF HEART ATTACK;SYMPTOMSOF CARDIAC ARREST; WHAT TO DO TO AVOID HEART ATTACK..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

இருதயக் கோளாறுகள் :(HEART FAILURE); FUNCTION OF HEART; SYMPTOMS OF HEART ATTACK;SYMPTOMS OF CARDIAC ARREST; WHAT TO DO TO AVOID HEART ATTACK..!!

 இருதயம்(HEART) என்று சொல்லும்போது மனித உடலின் பிரதானமான உறுப்பு என்ற உணர்வு ஏற்படுகிறது.இருதயத்தில் ஏதேனும் சிறு மாற்றமும் பாதிப்போ ஏற்பட்டால் மனிதன் பதறிப் போகிறான். வாழ்வின் அந்திமக்  கட்டத்தில் நுழைந்து விட்டதாக பீதி அடைகிறான்.

 இன்றைய வேகமான உலகத்திலே அதிகமாய் பாதிக்கப்படுவது இருதயமே. இருதய நோய் (HEART FAILURE)ஏற்பட முக்கிய காரணமாக விளங்குவது இரத்த அழுத்தம், நீரிழிவு நோய்.


ஆரோக்கியமான இதயம் ஆரோக்கியமான மனதுக்கும் உடலுக்கும் ஒரு திறவுகோலாகும். உலகில் தினமும் 2500-க்கும் மேற்பட்டோர் இருதய பிரச்சினைகளால் பாதிக்கப்படுவதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன. சிறு வயதிலிருந்தே வலுவான இதயத்தைப் பராமரிப்பது உங்கள் வயதைக் காட்டிலும் நீங்கள் சிறப்பாக வாழ உதவும்.

நீங்கள் நீண்ட, சுறுசுறுப்பான வாழ்க்கையை அனுபவிக்க திட்டமிட்டால், உங்கள் இதயத்தை நல்ல நிலையில் வைத்திருக்க வேண்டும். நீங்கள் செய்யும் ஒவ்வொரு செயலும் உடல் இயக்கம் மற்றும் ஆற்றலை எரிக்கிறது. எனவே உங்கள் இதய ஆரோக்கியத்தை அதிகரிக்கும் செயல்கள் மற்றும் உணவு முறைகளுக்கு ஏற்றவாறு உங்கள் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது உங்கள் ஆயுளை அதிகரிக்கும்.

இதயம் பல காரணங்களால் பாதிக்கப்படும், மாரடைப்பு(HEART ATTACK) ஏற்படும்.

மாரடைப்புக்கான அறிகுறிகள்(Symptoms of a heart attack):

இருதயம் இரத்தக் குழாய்கள் மூலம் உடல் உறுப்புகளுக்கு இரத்தம் அனுப்புகிறது. அந்த இருதயத்திற்கு ரத்தம் செலுத்தும் சிறிய ரத்தக் குழாய்கள் "கரோனரி தமனிகள்" (CORONARY ARTERIES)என அழைக்கப்படுகின்றன. உடலின் எல்லா தசைகளையும் போலவே இருக்கும். பிராண வாயுவும்(OXYGEN) ஆற்றலும் கலந்த ரத்த ஓட்டம் தேவை. இதற்கான ரத்தத்தைக் கொண்டு செல்லும்.

' கரோனரி தமனிகள்'(CORONARY ARTERIES)  தவறான உணவு பழக்க வழக்கங்கள், முதுமை, கொழுப்புச்சத்து சேமிப்புகள்(CHOLESTROL), தீவிர கோபம், துயரம்  போன்ற காரணங்களால் அடைப்பு ஏற்படுகிறது. இது(CORONARY THROMBOSIS) எனப்படுகிறது .மூடிக்கொண்ட தமனி மூலம் ரத்தம் சென்று வளர்க்கப்பட வேண்டிய இதய தசை  பாதிக்கப்பட்டு அழிவு ஏற்படுகிறது.

மாரடைப்பு (HEART ATTACK)காரணமாக மூச்சு முட்டுகிறது. வியர்த்துக் கொட்டுகிறது. பயமும், பதட்டமும், பலவீனமும், வேதனையும் விவரிக்க முடியாத அளவு ஏற்படுகிறது. கரோனரி தமனிகள்  பாதிப்பு மூலம் இருதயம் போதிய அளவு சுருங்கி விரியும் தன்மையை இழக்கிறது. இதுவே முழுமையான இருதய  செயலிழப்புக்கு (HEART FAILURE) வழிவகுக்கிறது.

திடீரென நெஞ்சு வலி ஏற்பட்டு மயங்கிக் கீழே விழுவார்கள்

 மூச்சுத் திணறல் ஏற்படலாம்

 இடது தோள்பட்டை, கை பகுதிகளில் வலி ஏற்படலாம்

 படபடப்பு, வாந்தி போன்ற தொந்தரவுகள் ஏற்படலாம்

 சிலரால் பேசவே முடியாது

 மயங்கிச் சரிந்து விழுந்துவிடுவார்கள்

'மாரடைப்பு'(HEART ATTACK) நோயாளிக்கு இதய ரத்த ஓட்டம், அடைப்பால் பாதிக்கப்படும். அவருக்கு நெஞ்சு வலி ஏற்படும். ஆனால், மூச்சு இருக்கும். பேச்சு இருக்கும். சுயநினைவு இருக்கும்.

இதய நிறுத்தத்துக்கான அறிகுறிகள்(Symptoms of cardiac arrest):

'இதயம் நின்ற' நோயாளிக்கு இதய ரத்த நாளம் பெரிதும் அடைபடுவதில்லை. இவர்களுக்கு நெஞ்சு வலி ஏற்படும். உடனே மயங்கி நினை விழந்துவிடுவார்கள். இதயத் துடிப்பு (நாடித்துடிப்பு) இருக்காது, சுவாசிக்க மாட்டார். இதனால், மூளைக்குச் செல்லும் ரத்த ஓட்டமும் தடைப்படும். மூளைக்குக் கிடைக்க வேண்டிய ஆக்ஸிஜனும்(OXYGEN), ஆற்றலும் கிடைக்காது. சுயநினைவு இருக்காது. எவ்வளவு பேசி தூண்டிப் பார்த்தாலும் கண் திறந்து பார்க்க மாட்டார்.

உடனே அவருக்கு முதலுதவி (CPR) செய்து அவரைத் தீவிர சிகிச்சைப் பிரிவுக்குக் கொண்டு செல்லாவிட்டால், தீவிர சிகிச்சை செய்யாவிட்டால் சில நிமிடங்களில் அவர் இறந்துவிடக்கூடும். மாரடைப்பு(HEART ATTACK) நோயாளிகளுக்கும் இதே போலத்தான் சிகிச்சையைத் தொடங்க வேண்டும். இல்லையென்றால் அவர்களும் எந்த விநாடியிலும் இதய நிறுத்த நிலைக்குப் போய்விடுவார்கள். மாரடைப்பும், இதய நிறுத்தமும் ஒன்றுக்கொன்று தொடர்புடையவை என்பதால் மக்கள் மாரடைப்பு என்றால் இரண்டையும் ஒன்று என்றே கருதுகிறார்கள்.

மாரடைப்பைத் தவிர்க்க/தள்ளிப்போட என்ன செய்ய வேண்டும்?What to do to avoid / postpone a heart attack:

 உடல் பருமனைக் கட்டுக்குள் வையுங்கள்

 ரத்தத்தில் கொழுப்பு, ட்ரைகிளிசரைட்களின் அளவு உயர்வதைத் தடுத்து நிறுத்துங்கள்

உயர் ரத்த அழுத்தத்தைக் குறைத்து, சீரான அளவில் வைத்துக்கொள்ளுங்கள்.

நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துங்கள்

ரத்த சர்க்கரை அளவு மீறிவிடாமல் மட்டுப்படுத்துங்கள்

போதுமான உறக்கம் தேவை

மதுப் பழக்கத்தைக் கட்டுப்படுத்துங்கள்

புகைப் பழக்கத்தைக் கைவிடுங்கள்

வழக்கமான உடற்பயிற்சியைத் தொடருங்கள்

ஆரோக்கியமான உணவை, சரியான நேரத்துக்கு உண்ணுங்கள்

எந்தப் பிரச்சினை வந்தாலும் பதறாதீர்கள்

இதயக் கோளாறு சார்ந்த பிரச்சினை உள்ளவர்கள் ECG., பயிற்சி ECG., இதய ஸ்கேன்-எக்கோ, கழுத்துப்பகுதி முக்கிய ரத்த நாளத்தில் 3D ஸ்கேன் பரிசோதனை, ஆஞ்சியோ போன்ற பரிசோதனைகளைக் குறிப்பிட்ட கால இடைவெளியில் செய்துகொள்வது நல்லது. கவனத்துடன் இருந்தால், தீடிர் மாரடைப்பைத் தவிர்க்க முடியும்.இதயப் பாதிப்புகள் பிறப்பிலேயே ஏற்படலாம். சிறுவயதிலும் ஏற்படலாம். நடுத்தர வயதிலும் ஏற்படலாம், வயதானவருக்கும் ஏற்படலாம்.

                                                

இதில், நடுத்தர வயதினருக்கும் முதியவருக்கும் வரும் இதய நோய்களை நாம் முதன்மையாகக் கவனிக்க வேண்டும்.நோய் வந்து வருந்தி, திருந்தி மருந்துடன் வாழ்வதற்குப் பதிலாக, நோய் வரக் காரணமாக இருக்கும் நம் வாழ்க்கை முறையை மாற்றிக்கொள்வது நல்லது.


Post a Comment

0 Comments