தமிழகம் முழுவதும்- இந்து சமய அறநிலையத்துறை காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப அதிரடி உத்தரவு..!!
தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டமன்ற தேர்தலில் பெரும்பான்மையான தொகுதிகளில் வெற்றி பெற்று 10 ஆண்டுகளுக்கு பிறகு திமுக ஆட்சியை பிடித்துள்ளது. அதன் பிறகு ஸ்டாலின் முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டார். இதனையடுத்து அரசுத் துறையில் பல்வேறு மாற்றங்களை தமிழக அரசு தொடர்ந்து செய்து வருகிறது. மேலும் பல அதிரடியான திட்டங்களையும் எடுத்து வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க...
எச்சரிக்கை:கொரோனா 3ஆவது அலை: அக்டோபா்-நவம்பரில் உச்சத்தில் இருக்கும்..!!
இந்நிலையில் தமிழகம் முழுவதும் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவில்களிலும் காலியாக உள்ள பணியிடங்களை நிரப்ப தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அனைத்து கோயில்களிலும் ஓதுவார், அர்ச்சகர், பூசாரி காலிப்பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது.
0 Comments