டெல்டா பிளஸ் கொரோனா தொற்று குறித்து- மாநகராட்சி தலைமை கமிஷனர் அறிவுரை..!!
''டெல்டா பிளஸ் கொரோனா தொற்று பீதியை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய நேரத்தில், வெளியே சிற்றுண்டி, தின்பண்டங்கள் சாப்பிடுவது நல்லதல்ல," என, பெங்களூரு மாநகராட்சி தலைமை கமிஷனர் கவுரவ் குப்தா அறிவுறுத்தியுள்ளார்.
பெங்களூரில், அவர் நேற்று கூறியதாவது:
ரெஸ்டாரென்ட், ஓட்டல், சாலையோர உணவகங்களில், உணவு, சிற்றுண்டி சாப்பிட இது சரியான நேரமல்ல. ஏனென்றால் டெல்டா பிளஸ் தொற்று வேகமாக பரவுகிறது. மக்கள் எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும். வெளியே சாப்பிடுவதை தவிர்க்க வேண்டும்.
இந்த செய்தியையும் படிங்க...
மானிய சமையல் எரிவாயு உருளையின் விலை ரூ.25 உயர்வு..!!
முந்தைய ஆண்டு அனுமதியளித்ததை போல, நடப்பாண்டும் உணவகங்கள் இல்லாமல் மால்களை திறக்க அனுமதியளிக்கப்படும். கொரோனா விதிமுறைகளை பின்பற்றுவது கட்டாயம். சாலைகளில் கார், பைக்குகளில் செல்லும் போது, சீட் பெல்ட், ஹெல்மெட் அணிவது எப்படி கட்டாயமோ, அதுபோல, வெளியே நடமாடுவோர், முக கவசம் அணிவது, சமூக விலகலை தக்க வைத்துக்கொள்வதும் கட்டாயம்.
பஸ், ரயில் நிலையங்கள், அதிக மக்கள் நடமாட்டம் உள்ள இடங்களில், மக்களை பரிசோதிப்பது குறித்து, போலீஸ் துறையுடன் பேச்சு நடத்தப்படுகிறது. எந்த விதமான பிரச்னைகள் ஏற்படாமல், எங்கள் குழு பார்த்துகொள்கிறது.ஒரே வீட்டில், பலருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டிருந்தால், அந்த வீடுகள் 'மைக்ரோ கன்டெய்ன்மென்ட்' மண்டலமாக கருதப்படும். இப்பகுதியில் உள்ளவர்கள், வெளியே நடமாடாமல், மாநகராட்சி கண்காணிக்கும்.இவ்வாறு அவர் கூறினார
0 Comments