Join Our Whats app Group Click Below Image

கறிவேப்பிலை உட்கொள்வதால் உண்டாகும் பலன்கள் (Benefits of curry leaves)..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 கறிவேப்பிலை உட்கொள்வதால் உண்டாகும் பலன்கள் (Benefits of curry leaves)..!!

 இதயம் பலம் பெறும்:

  • கறிவேப்பிலையைப் பொடி செய்து சாப்பிட்டு வந்தால் இதயம் பலம் பெறும்.
  • கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புக்களை கரைப்பதோடு, நல்ல கொழுப்புக்களை அதிகரித்து, இதய நோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனையில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

கொழுப்புக்கள் கரையும்:

  • காலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை( curry leaves) இலையை உட்கொண்டு வந்தால், வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புக்கள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.
  • இரத்த சோகை உள்ளவர்கள், காலையில் ஒரு பேரிச்சம் பழத்துடன், சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் இரத்த சிவப்பணுக்களின்(RBC) அளவு அதிகரித்து, இரத்த சோகை நீங்கும்.

ஜீரண கோளாறுகள் சரியாகும்:

  • கறிவேப்பிலையுடன், சுட்ட புளி, வறுத்த உப்பு, வறுத்த வர மிளகாய் ஆகியவற்றை சேர்த்து துவையல் செய்து சாப்பிட்டால் ஜீரண கோளாறுகள் சரியாகும் .

சர்க்கரை நோய் குணமாகும்:

  • உலர்ந்த கறிவேப்பிலை (curry leaves), சுக்கு, மிளகு, சீரகம். உப்பு தலா 10 கிராம் எடுத்து பொடி செய்து தினமும் சூடான சாதத்தில் போட்டு பிசைந்து சாப்பிட்டால் சர்க்கரை நோய் குணமாகும்.

  • சர்க்கரை நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால், இரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்:

  • கருவேப்பிலை, நிலாவரை இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடியாக்கி தினமும் இரவு உணவுக்குப் பிறகு ஒரு ஸ்பூன் அளவுக்கு சாப்பிட்டால் பெருவயிறு மறையும், மலச்சிக்கல் தீரும்.
  •  நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்தித்து வருபவராயின், அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால், செரிமான பிரச்சனைகள் நீங்கிவிடும்.
  • கருவேப்பிலை( curry leaves)யை உலர்த்தி பொடி செய்து அதில் பெருங்காயத்தூள் சேர்த்து தினமும் உணவுக்குப் பிறகு 2 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் வாயுக் கோளாறுகள் நீங்கும்.

நன்றாக பசி எடுக்கும்:

  • கருவேப்பிலையை பொடி செய்து சாப்பிட்டு வந்தால் நன்றாக பசி எடுக்கும்.
  •  கருவேப்பிலையை, மிளகாய் சேர்க்காமல் துவையல் செய்து சாப்பிட்டால் பித்த வெடிப்பு குணமாகும்.
  • கருவேப்பிலை பொடி செய்து, எருமைத் தயிரில் கலந்து சாப்பிட்டு வந்தால் சீதபேதி குணமாகும்.
  • மிளகு, சீரகம், சுக்கு ஆகியவற்றை சம அளவு எடுத்து சாப்பிட்டால் மந்தம் மலக்கட்டு நீங்கும்.
  • கருவேப்பிலையை அன்றாட உணவில் சேர்த்துக்கொண்டால் பித்தம், மூலம் குணமாகும்.
  •  உலர்ந்த கறிவேப்பிலை, முந்திரிப் பருப்பு, நெல்லி முள்ளி மூன்றையும் சம அளவு எடுத்து அரைத்துப் பாலில் கலக்கிக் குடித்தால் உடல் வலிமை பெறும். 

சளி முறிந்து வெளியேறிவிடும்:

  • சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு டீஸ்பூன் கறிவேப்பிலை பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறிவிடும்.

தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்:

  • கருவேப்பிலை, கரிசலாங்கண்ணி கீரை இரண்டையும் சம அளவு எடுத்து உலர்த்தி பொடி செய்து தினமும் காலை, மாலை இரு வேளையும் 5 கிராம் அளவுக்கு சாப்பிட்டால் தலைமுடி கருமையாகவும், அடர்த்தியாகவும் வளரும்.

  • கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால், முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.
  • கறிவேப்பிலையை அரைத்து சாறு எடுத்து தேங்காய் எண்ணெயில் கலந்து தலைக்கு தேய்த்து வந்தால் நரைமுடி மறையும்.
  • கருவேப்பிலையை அரைத்து தலையில் தேய்த்து குளித்து வந்தால் முடி கறுப்பாக வளரும்.

Post a Comment

0 Comments