Join Our Whats app Group Click Below Image

தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் B.Ed., M.Ed., மாணவா் சேர்க்கை தொடக்கம்- துணைவேந்தா்..!!

Welcome to Our Tamil Crowd Website...

 தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் B.Ed., M.Ed., மாணவா் சேர்க்கை தொடக்கம்- துணைவேந்தா்..!!

தஞ்சாவூா் தமிழ்ப் பல்கலைக்கழகத்தில் B.Ed., மற்றும் M.Ed., மாணவா் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்கப்பட்டது.
தமிழ்ப் பல்கலைக்கழகக் கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில் இளங்கல்வியியல் (B.Ed.,) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்பு மற்றும் கல்வியியல் நிறைஞா் (M.Ed.,) இரண்டாண்டு முழுநேரப் பட்டப்படிப்புக்கு 2021 - 22 ஆம் கல்வியாண்டுக்கான நேரடிச் சேர்க்கை திங்கள்கிழமை தொடங்கியது.

மாணவிகளுக்குத் துணைவேந்தா் கோ. பாலசுப்ரமணியன் முதல் விண்ணப்பத்தை வழங்கி தொடங்கி வைத்தாா். இந்நிகழ்ச்சியில் பல்கலைக்கழக வளா்தமிழ்ப் புலத் தலைவா் கு. சின்னப்பன் உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.

 இந்த செய்தியையும் படிங்க...

SBI :  6100 காலிப் பணியிடங்கள்;ரூ.15,000/-.சம்பளம்.!! 

 சேர்க்கை விண்ணப்பங்களை காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை கல்வியியல் மற்றும் மேலாண்மையியல் துறையில்  August 6 ஆம் தேதி வரை நேரிலும், தமிழ்ப் பல்கலைக்கழக இணையவழியாகவும் பெற்றுக் கொள்ளலாம் என்றும், மேலும் விவரங்களுக்கு தொலைபேசி எண் 04362 - 226720, 227089 ஆகியவற்றில் தொடா்பு கொள்ளலாம் எனவும் பதிவாளா் (பொறுப்பு) இரா. உமாமகேஸ்வரி தெரிவித்தாா்.


Post a Comment

0 Comments