B.Ed ., படிப்புக்கு ரூ.30,000க்கும் மேல் வசூலித்தால்நடவடிக்கை : அமைச்சர் பொன்முடி எச்சரிக்கை..!!
B.ED., படிப்புக்கான கல்விக் கட்டணத்தை ரூ,30 ஆயிரத்துக்கு மேல் வசூலித்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் தற்போது இயங்கி வரும் கல்லூரிகளில் 26ம் தேதி முதல் சேர்க்கை விண்ணப்பங்கள் வழங்கப்படும் என்று கடந்த வாரம் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி தெரிவித்து இருந்தார்.
இந்த செய்தியையும் படிங்க...
தமிழக அரசு ஊழியர்கள் ஓய்வு வயதை- 58 ஆக குறைக்க வலியுறுத்தல்..!!
இந்நிலையில், இன்று காலை முதல்வர் மு.க.ஸ்டாலினுடன் நடந்த ஆய்வுக் கூட்டத்தில் கலந்து கொண்ட
உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி, கூறியதாவது:
தமிழகத்தில் இயங்கி வரும் 143 அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரிகளில் இந்த ஆண்டுக்கான மாணவர் சேர்க்கை தொடங்க உள்ளது. இதையடுத்து இன்று முதல் விண்ணப்பங்கள் ஆன்லைன் மூலம் பெறப்படுகிறது. மாணவர்கள் ஆகஸ்ட் 10ம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். அதேபோல பொறியியல் கல்லூரிகளில் சேர்க்கை நடக்க உள்ளதை அடுத்து இன்று முதல் அதற்கும் விண்ணப்பங்கள் பெறப்படுவது தொடங்கியுள்ளது.
ரூ.30 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்க கூடாது :
இந்த வகை மாணவர்கள் ஆகஸ்ட் 24ம் தேதி வரை விண்ணப்பிக்க வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் இயங்கி வரும் பல்கலைக்கழங்களில் பல்வேறு பல்கலைகள் மீது புகார்கள் வந்தன. அவற்றின் மீது விசாரணை நடத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. மேலும், B.ED., பட்டப் படிப்பு என்பது அரசு மற்றும் தனியார் B.ED., கல்லூரிகள் மூலம் நடத்தப்பட்டு வருகின்றன.
இந்த செய்தியையும் படிங்க...
பொறியியல் மற்றும் கலை, அறிவியல் படிப்புகளில் சேர இணையதளம் மூலம் விண்ணப்பப் பதிவு தொடக்கம்..!!
அவற்றில் நீதிமன்றத்தீர்ப்பின் அடிப்படையில் முன்னாள் நீதிபதி வெங்கட்ராமன் தலைமையில் அமைக்கப்பட்ட கட்டணக் குழுவின் பரிந்துரையின் பேரில் இந்த B.ED., கல்லூரிகளில் கட்டணமாக ரூ.30 ஆயிரத்துக்கு மேல் வசூலிக்க கூடாது என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
நடவடிக்கை எடுக்கப்படும்:
இருந்தாலும் அதையும் மீறி சில கல்லூரிகள் அதிக கட்டணத்தை வசூலிப்பதாக புகார்கள் வந்தவபடி இருக்கிறது. அதனால் மீண்டும் கல்வித்துறை அது குறித்து ஆலோசித்து ரூ.30 ஆயிரத்துக்கு மேல் வசூலித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என்று உயர்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. இதற்கான உத்தரவும் பிறபிக்கப்பட்டுள்ளது. இதற்கு உள்பட்டு தனியார் கல்லூரிகள் செயல்பட வேண்டும்.
B.ED., கல்லூரிகள் அதிக கட்டணம் வசூலித்தால் புகார் வந்தால் நடவடிக்கை எடுக்கப்படும். பிற கல்லூரிகளில் படித்து வரும் மாணவர்களிடம் கல்விக் கட்டணம் வசூலிக்கும் போது 75 சதவீதம் வசூலிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. அண்ணாமலை பல்கலைக் கழகம் இணைப்பு பல்கலையாக மாற்றப்பட்டுள்ளதால் ஆசிரியர்கள் மாறுதல் குறித்த பிரச்னைகள் தீர்த்து வைக்கப்படும். புதிய பல்கலைக் கழகங்கள் கடந்த காலத்தில் தொடங்கியும் அதற்கு நிதி ஒதுக்கவில்லை. கடந்த காலங்களில் விதிகள் பின்பற்றப்படவில்லை என்ற புகார் வந்தது. அதற்காக குழுக்கள் அமைக்கப்பட்டு விசாரிக்கப்பட்டு வருகிறது.
இந்த செய்தியையும் படிங்க...
மருத்துவ படிப்பில் 7.5 % இடஒதுக்கீடுக்கு எதிராக வழக்கு- ஒத்திவைப்பு..!!
எங்கெல்லாம் புகார்கள் வருகிறதோ அதன் மீது விசாரிக்கப்பட்டு தீர்வு காணப்படும். பழைய புத்தகங்களில் உள்ள பிரச்னைகள் மாற்றி அமைக்கப்பட்டு புதிய புத்தகங்கள் வழங்கப்பட்டுள்ளன. அனைத்து புத்தகத்திலும் ஒன்றிய அரச என்று தான் இருக்கும் என்பது முதல்வர் எடுத்த முடிவு . தற்போது கொரோனா தொற்று முடிவுக்கு வராத நிலையில் அனைத்து சேர்க்கை நடவடிக்கைகளும் ஆன்லைன் மூலம் தான் நடக்கிறது. முடியாதவர்கள் நேரடியாகவும் விண்ணப்பங்கள் வழங்கவும் பல வாய்ப்புகள் வழங்கப்பட்டுள்ளது. போதிய அவகாசம் கொடுக்கப்பட்டுள்ளது.
0 Comments