Join Our Whats app Group Click Below Image

கேல் ரத்னா விருதுக்கு மிதாலி ராஜ், அஸ்வினை பரிந்துரைக்க BCCI முடிவு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

 கேல் ரத்னா விருதுக்கு மிதாலி ராஜ், அஸ்வினை பரிந்துரைக்க BCCI முடிவு..!!

விளையாட்டுத் துறையில் மிக உயர்ந்த விருதான கேல் ரத்னாவுக்கு இந்திய மகளிர் கிரிக்கெட் வீராங்கனையான மிதாலி ராஜ், ஆடவர் கிரிக்கெட் அணியின் சுழற்பந்து வீச்சாளரான ரவிச்சந்திரன் அஸ்வின் ஆகியோரது பெயர்களை பரிந்துரைக்க BCCI முடிவு செய்துள்ளது.

இந்த செய்தியையும் படிங்க... 

 JULY-1:ஓட்டுனர்கள் உரிய சான்றிதழுடன் RDO அலுவலகத்தில் 8 போடாமலேயே லைசென்ஸ் பெறலாம்..!! 

 அர்ஜூனா விருதுக்கு ஷிகர் தவண், கே.எல்.ராகுல், ஜஸ்பிரீத் பும்ரா ஆகியோரது பெயர்கள் பரிந்துரை செய்யப்பட உள்ளன. இதுதொடர்பாக BCCI நிர்வாகி கூறும்போது, 'அர்ஜூனா விருதுக்கு மகளிர் கிரிக்கெட் வீராங்கனைகளின்பெயர்கள் பரிந்துரைக்கப்பட வில்லை. கேல் ரத்னாவுக்கு மிதாலியின் பெயர் பரிந்துரைக்கப்பட்டுள்ளது' என்றார்.

38 வயதான மிதாலி ராஜ், கடந்த வாரம் சர்வதேச கிரிக்கெட்டில் 22 வருடங்களை நிறைவு செய்தார். சர்வதேச மகளிர் கிரிக்கெட்டில் அதிக ரன்கள் குவித்தவர்களின் பட்டியலில் மிதாலி ராஜ், 7 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ரன்களைக் குவித்து முதலிடத்தில் உள்ளார்.

ஏற்கெனவே அர்ஜூனா விருதை வென்றுள்ள ரவிச்சந்திரன் அஸ்வின், 79 டெஸ்ட் போட்டிகளில் விளையாடி 413 விக்கெட்களை வீழ்த்தியுள்ளார். ஒருநாள் போட்டிகளில் 150 விக்கெட்களையும், T- 20 ஆட்டங்களில் 52 விக்கெட்களையும் கைப்பற்றியுள்ளார்.

இந்த செய்தியையும் படிங்க... 

JULY-1:  SBI BANK ATM-களில் பணம் எடுக்க புதிய கட்டுப்பாடுகள்..!!

35 வயதான சீனியர் பேட்ஸ்மேனான ஷிகர் தவண், 142 சர்வதேச ஒருநாள் கிரிக்கெட் போட்டிகளில் விளையாடி 5,977 ரன்கள்குவித்துள்ளார். டெஸ்ட் கிரிக்கெட் போட்டிகளில் 2,315 ரன்களும் சர்வதேச டி20 ஆட்டங்களில் 1,673 ரன்களும் சேர்த்துள்ளார்.

Post a Comment

0 Comments