Join Our Whats app Group Click Below Image

AUGUST-1: ATM, Credit, Debit Card பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிகள் அமல்- Reserve Bank அறிவிப்பு..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

AUGUST-1: ATM, Credit, Debit Card பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிகள் அமல்- Reserve Bank அறிவிப்பு..!!

நாடு முழுவதும் கொரோனா பரவலை கட்டுப்படுத்த முழு ஊரடங்கு அமலில் உள்ளது. அதில் பல கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளதால் மக்கள் வேலைக்கு செல்ல முடியாமல் தங்கள் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகிறார்கள். அதுமட்டுமல்லாமல் அனைவரும் பொருளாதார நெருக்கடியில் உள்ளனர்.

ATM, Credit, Debit Card  முதல் அறிவிப்பு:

 முதல் ATM ,Credit ,Debit Card, பரிவர்த்தனைகளுக்கு புதிய விதிகள் அமலுக்கு வருகின்றது.

வங்கி பரிவர்த்தனைகளில் புதிய விதிகள் அமலுக்கு வருவதாக ரிசர்வ் வங்கி(Reserve Bank) சமீபத்தில் அறிவித்திருந்தது. அதன்படி வங்கிகள் தங்களது வாடிக்கையாளர்களிடம் இருந்து பெறப்படும் சேவைக் கட்டணங்களை உயர்த்தி கொள்ள அனுமதி கிடைத்துள்ளது. 

இந்த செய்தியும் படிங்க...

 7th Pay Commission: மத்திய அரசு ஊழியர்களுக்கு ஏமாற்றம்;ஊழியர்களின் மாதாந்திர அடிப்படை சம்பளத்தில் உயர்வு இருக்காது ..!! 

தனியார் மற்றும் பொதுத்துறை வங்கிகளின் ATM-ல் வாடிக்கையாளர்கள் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்படுகிறது. Credit, Debit கார்டுகளுக்கான கட்டணங்களும் உயர்த்தப்படுகிறது. இந்த விதிமுறைகள் AUGUST 1ஆம் தேதி முதல் அமலுக்கு வருகிறது.

 (Reserve Bank) வெளியிட்ட அறிவிப்பு:

இதுகுறித்து ஜூன் மாதம் ரிசர்வ் வங்கி (Reserve Bank) வெளியிட்ட அறிவிப்பில் வங்கிகளில் நிதி பரிவர்த்தனைகளுக்கு ஒரு பரிவர்த்தனைக்கான பரிமாற்றக் கட்டணம் ரூ.15- இல் இருந்து ரூ.17 ஆக உயர்த்தி ரிசர்வ் வங்கி (Reserve Bank) அறிவித்துள்ளது. நிதி அல்லாத பரிவர்த்தனைகளுக்கான கட்டணம் 5 ரூபாயிலிருந்து 6 ரூபாயாக உயர்த்தியுள்ளது. எனவே ATM-ல் பணம் எடுப்பதற்கான கட்டணம் உயர்த்தப்பட்ட நிலையில், தற்போது இதற்கும் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது.

கட்டணம் வசூல் செய்யப்படும்:

வங்கி கணக்கு வைத்துள்ள கிளைகளில் வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு அதிகபட்சம் ஐந்து முறை இலவசமாகவும், அதைத்தாண்டி எடுக்கும் பொழுது ஒவ்வொரு பரிவர்த்தனைக்கும் 17 ரூபாய் கட்டணம் வசூல் செய்யப்படும் எனவும் தெரிவித்திருந்தது.

ஸ்டேட் பாங்க் ஆப் (SBI):

இந்த விதிமுறைகள் அனைத்தும் AUGUST 1 முதல் நடைமுறைக்கு வர உள்ளது. ஸ்டேட் பாங்க் ஆப் (SBI)இந்தியாவின் அடிப்படை சேமிப்பு கணக்கு வாடிக்கையாளர்கள் ஒரு மாதத்திற்கு நான்கு முறை இலவசமாக பணம் எடுத்துக் கொள்ள முடியும். அதேபோன்று காசோலை பரிவர்த்தனைகளில் 10 லீஃப்கள் வரையில் இலவசமாக பரிவர்த்தனைகள் செய்து கொள்ள முடியும்.


Post a Comment

0 Comments