Join Our Whats app Group Click Below Image

திமுக வாக்குறுதி:குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை எப்போது? - அமைச்சர் விளக்கம்..!!

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

திமுக வாக்குறுதி:குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை எப்போது? - அமைச்சர்  விளக்கம்..!!

வருவாய்த்துறை அமைச்சர் விளக்கம்:

பெண்களை மையப்படுத்தித்தான் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன என்று வருவாய்த்துறை அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

தமிழக சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெறுவதற்காக திமுக பல்வேறு வாக்குறுதிகளை அளித்திருந்தது. இதில், குறிப்பாக குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000, நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம், கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம், ஆகிய வாக்குறுதிகள் மக்களை கவரும் வகையில் இருந்தது.

இந்த செய்தியும் படிங்க...

 "அரசுப் பணியில் முதல் தலைமுறை பட்டதாரிகளுக்கு முன்னுரிமை & தமிழக இளைஞர்களின் அரசு வேலைவாய்ப்புகளை அதிகரிக்க வேண்டும்" முதலமைச்சர் அதிரடி!!

சட்டமன்ற தேர்தல் வெற்றியை தொடர்ந்து திமுக தலைவர் முக ஸ்டாலின், புதிய முதல்வராக பொறுப்பேற்ற முதல் நாளே, கொரோனா நிவாரண நிதி ரூ.4 ஆயிரம், நகரப் பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயணம் உள்ளிட்ட முக்கிய கோப்புகளில் கையெழுத்திட்டு, அமல்படுத்தப்பட்டது.

குடும்ப தலைவிகளுக்கு 1000 ரூபாய் உதவித்தொகை எப்போது?

இதனைத்தொடர்ந்து மக்கள் பெரிதும் எதிரிபார்க்கப்பட்ட குடும்பத் தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1,000 எப்போது வழங்கப்படும் என கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. ஒருபுறத்தில் எதிர்க்கட்சிகள் திமுக அளித்த வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என போராட்டம் நடத்தி குற்றம் சாட்டி வருகிறது.

திமுக அளித்த வாக்குறுதியில் சிறப்பில் ஒன்றான இல்லத்தரசிகளுக்கு ரூ.1000 உதவித்தொகை இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. இந்த திட்டத்தை தொடங்குவது குறித்து திமுக அரசு ஆலோசனை நடத்தியது என்றும் விரைவில் அமல்படுத்தப்படும் எனவும் கூட்டுறவுத் துறை அமைச்சர் ஐ.பெரியசாமி தெரிவித்திருந்தார்.

உறுதிப்படாத தகவல்:

இதனிடையே, ரேசன் கார்டில், குடும்ப தலைவி புகைப்படம் இடம்பெற்றிருப்பவர்கள் தான் உதவித்தொகை பெற தகுதியானோர் என உறுதிப்படாத தகவல் வெளியானதை தொடர்ந்து, பலர் குடும்பத் தலைவர் பெயர் உள்ள கார்டுகளை குடும்பத் தலைவி பெயரை மாற்ற ஏராளமான விண்ணப்பங்கள் உணவுப் பொருள் விநியோகத் துறைக்கு வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

எனவே, தமிழக பெண்கள் மிகவும் எதிர்பார்த்து காத்திருக்கும் குடும்ப தலைவிகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 வழங்கும் திட்டம், நிதிநிலையை விரைவில் சீர்செய்த பின் ரேஷன் கடைகள் மூலம் குடும்பத் தலைவிக்கு உதவித்தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என்று அமைச்சர் ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

இந்த செய்தியும் படிங்க...

 "முதுகலை மருத்துவ கல்வி வரைவுக்கு எதிர்ப்பு"-முதல்வர் கடிதம்..!!

விருதுநகரில் அமைப்பு சாரா தொழிலாளர்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் கலந்துகொண்டு நலத்திட்ட உதவிகளை வாங்கியபின் பேசிய வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எ.ஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன், முதல்வரின் உத்தரவின் பேரில் மக்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்பட்டு வருவதாகவும், வெளிப்படைத் தன்மையோடு நிவாரணம் வழங்கப்படும் எனவும் கூறியுள்ளார்.

மாநிலத்தின் நிதி நிலைமை சீரடைந்த பிறகு குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்படும்:

மாநிலத்தின் நிதி நிலைமை சீரடைந்த பிறகு குடும்பத்தலைவிக்கு ஆயிரம் ரூபாய் வழங்கும் திட்டம் தொடங்கப்படும் என தெரிவித்துள்ளார். மேலும், பெண்களை மையப்படுத்தித்தான் நலத்திட்டங்கள் வழங்கப்படுகின்றன என்றும் பெண்களின் கைகளில் கிடைக்கும் நலத்திட்டம், குடும்பத்திற்கு முழுமையாகச் சென்று சேரும் எனவும் குறிப்பிட்டுள்ளார் என்பது குறிப்பிடப்படுகிறது.


Post a Comment

0 Comments