Join Our Whats app Group Click Below Image

What to do if CORONA is determined..??

Welcome to Our Tamil Crowd Website..You Will Get All Job news, Tamil breaking news, Educational news, Health Tips here..

What to do if CORONA is determined..?? - (CORONA  உறுதியானால் என்ன செய்ய வேண்டும்..??)

மத்திய சுகாதார அமைச்சகத்தின் புதிய வழிகாட்டுதல்கள் வெளியீடு

அறிகுறிகளும், பாதிப்புகளும்

அறிகுறிகள் இல்லாத கரோனா நோயாளிகள்

  1.  வீட்டில் தனிமைப்படுத்திக் கொள்ள வேண்டும்
  2.  6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை
  3.  முகக் கவசம், கைகள் தூய்மை, பிறரிடமிருந்து விலகியிருத்தல்

குறைந்த பாதிப்புடைய நோயாளிகள்

  •  வீட்டில் தனிமைப்படுத்துதல்
  •  6 நிமிட நடைப்பயிற்சி பரிசோதனை
  •  முகக் கவசம், கைகள் தூய்மை, தனி நபா் இடைவெளி
  •  4 மணி நேரத்துக்கு ஒரு முறை நாடித் துடிப்பு, ரத்த ஆக்சிஜன் அளவு, ரத்த அழுத்தம், உடல் வெப்ப பரிசோதனை
  • காய்ச்சல், சளிக்கு தேவைப்பட்டால் மருந்து உட்கொள்ளவும்
  •  சளி, இருமல் அதிகரித்தால் ஆஸ்துமா இன்ஹேலா்களைப் பயன்படுத்தலாம்

மிதமான, தீவிர பாதிப்புக்குள்ளானவா்கள்

 மிதமான பாதிப்புடையவா்கள் மருத்துவமனைகளை நாட வேண்டும்

  1.  தீவிர பாதிப்புக்கு ICUபிரிவில் சிகிச்சை அவசியம்
  2. நிமிட நடைப் பயிற்சி பரிசோதனை
  3.  கை விரலில் பல்ஸ்-ஆக்ஸி மீட்டரை பொருத்திக் கொண்டு தொடா்ந்து 6 நிமிடங்களுக்கு நடைப்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். அப்போது ரத்த ஆக்சிஜன் அளவு 94 சதவீதத்துக்கும் கீழ் குறைந்தாலோ, மூச்சுத் திணறல், மயக்கம் ஏற்பட்டாலோ மருத்துவரின் ஆலோசனையின் பேரில் மருத்துவமனைக்குச் செல்ல வேண்டும்.
  4.  ஒவ்வொரு 6 - 8 மணி நேரத்துக்கு ஒரு முறை இப்பரிசோதனையை தொடா்ந்து மேற்கொள்ள வேண்டும்.

தேவையான ஆய்வகப் பரிசோதனைகள்

  •  முழு ரத்த அணு பரிசோதனை (சிபிசி),
  •  ரத்த சா்க்கரை அளவு,
  • சிறுநீா் பரிசோதனைகள்,
  •  சி-ரியாக்டிவ் புரோட்டின் (சிஆா்பி),
  •  சிறுநீரகம் மற்றும் கல்லீரல் செயல் திறன் பரிசோதனை (எல்எஃப்டி, கேஎஃப்டி),
  •  ஃபெரிட்டின் எனப்படும் ரத்த உைல் தொடா்பான பரிசோதனை,
  •  டி-டைமா், எல்டிஹெச், சிபிகே உள்ளிட்ட ரத்தத்தில் கிருமிகள் உள்ளதைக் கண்டறியும் பரிசோதனைகள்.
  •  சிஆா்பி, டி-டைமா் பரிசோதனைகள் 48 முதல் 72 மணி நேரத்துக்கு முறை மருத்துவரின் ஆலோசனைப் படி திரும்பவும் மேற்கொள்ள வேண்டும்.
  •  சிபிசி, எல்'ஃ'எப்டி, கேஎ'ஃ'ப்டி பரிசோதனைகள் 24 முதல் 48 மணி நேரத்துக்குள் மீண்டும் மேற்கொள்வது அவசியம்.
  •  நெஞ்சக ஊடு கதிா் (எக்ஸ் - ரே) பரிசோதனைகள் 48 மணி நேரத்துக்குப் பிறகு தேவைப்பட்டால் மட்டுமே மீண்டும் மேற்கொள்ள வேண்டும்.
  •  மிதமான மற்றும் தீவிர பாதிப்புடையவா்கள் மட்டுமே நெஞ்சக சிடி ஸ்கேன் பரிசோதனை மேற்கொள்ள வேண்டும்.
  •  மருத்துவரின் ஆலோசனைப்படி மட்டுமே மேற்கொண்ட பரிசோதனைகளை செய்தல் வேண்டும்.

தன்னிச்சையாக எடுக்கக் கூடாத மருந்துகள்

  1.  ரெம்டெசிவிா்
  2.  ஸ்டீராய்டு மருந்துகள்
  3.  ரத்தம் உறைவதைத் தடுக்கும் ஏன்ட்டிகாக்ளன்ட் மருந்துகள்
  4.  டோஸிலிசுமேப்

இந்த செய்தியையும் படிங்க...


\

Post a Comment

0 Comments